8 August 2017

சர்க்கரை நோயிலும், ஒரு நல்லதா :)

தொகுதி மேம்பாடு நிதியை மட்டும் சாப்பிடத் தெரியுது :)            
                ''நம்ம தொகுதி MLA வுக்கு டெங்கு காய்ச்சலாமே ?''
               ''மக்களுக்கு இலவசமா அவர் கொடுத்த வேம்பு கஷாயத்தை, அவரே சாப்பிடலே  போலிருக்கே !''

சர்க்கரை நோயிலும், ஒரு நல்லதா :)              
               ''நல்ல வேளை,எனக்கு நெஞ்சு வலி தெரிய வாய்ப்பே இல்லை! ''

              ''ஏன் ?''
              ''நாட்பட்ட சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு நெஞ்சு வலியே தெரியாதாமே !''
போதையில் கூட நல்ல காரியம் :)
               ''மதுவுக்கு எதிரான போராட்டம் செய்ய ,அனுமதி தரணும்னு .டாஸ்மாக் மேனேஜர் நீங்களே ஏன் சொல்றீங்க ?''
               ''கூட்டம் சேர்ந்தாலே  சரக்கு ரெண்டு மடங்கு விற்குதே  !''

பூஜை நேரத்தில் நடிகை பெயர் சொல்லலாமா :)
           '' புதுமுக கவர்ச்சி நடிகை தன்னோடபேரை மாற்றிக்கணும்னு அர்ச்சகர்கள் போராட்டம் பண்றாங்களே ,ஏன் ?''
            ''சமர்ப்பியாமி ..ங்கிறது அவங்களோட பெயராச்சே !''

தலைவர் 'வண்டு முருகனின் 'வாரிசா :)
           ''வரலாறு தெரியாமே தலைவர் உளறிக் கொட்டி மதப் பிரச்சினையை உண்டாக்கி விடுவார் போலிருக்கா  ,எப்படி ?''
        '' பாண்டவர்களின் பாரம்பரியத்தில் வந்தவரை  போப்''பாண்டவர் ' ஆக நியமனம் செய்யணும்னு அறிக்கை வெளியிட்டு இருக்காரே !''

வேகம் விவேகமல்ல ,அதுக்காக இப்படியா :)
முயலையும்  வெல்லலாம் ஆமை ...
ஆனால் ...அரசின் கோப்பிடம் தோற்றுப் போகும் !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468723

36 comments:

 1. ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் மீ தான்ன்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ:)...

  ReplyDelete
  Replies
  1. மதுவுக்கு எதிரான போராட்டம்... நல்ல சிந்தனை:)... பிஸ்னஸ் மூளை என்பது இதுதானாக்கும்.

   Delete
  2. யாரது புதுசா கீது ?

   Delete
  3. மது வயிற்றிலும் ,ஒழிக கோஷம் வாயிலும் என்றால் எப்படி ஒழியும்:)

   Delete
  4. ஓ அதிரா வந்தாச்சா...அதான் அதிருது....சவுண்ட் இங்க வர கேக்குது....

   கீதா

   Delete
  5. ////KILLERGEE DevakottaiTue Aug 08, 06:17:00 am
   யாரது புதுசா கீது ?////
   அச்சோ அச்சோ அச்சோ ஒரு மாதத்தில கில்லர்ஜி என்னை மறந்திட்டாரே:) அப்போ இன்னும் ஒரு மாதம் லீவில நின்றிருந்தால்ல்ல் என்னவாகியிருக்கும்... விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்:)

   Delete
  6. ஆங் கீதா வந்திட்டேன்ன்ன்ன்... இன்னும் நான் சவுண்டே போடத் தொடங்கல்லியே அதுக்குள் கேட்குதோ?:)... அப்போ இனி சவுண்டு விட்டால்ல்ல்ல்ல்:)

   Delete
  7. இப்போதானே வந்து இருக்கீங்க,உடனே தேம்ஸ் ஆஆ...கொஞ்சம் பொறுங்க ,பேசிக்கலாம் :)

   Delete
 2. Replies
  1. இது போதும் ஜி :)

   Delete
 3. அர்ச்சகர்கள் போராட்டம் மோடி அரசு ஒடுக்குமோ ?

  ReplyDelete
  Replies
  1. எப்படி ஒடுக்கும் ?இவர்கள் அர்ச்சகர்களை காக்க வந்த ரட்சகர்கள் ஆச்சே :)

   Delete
 4. Replies
  1. அரசின் கோப்பிடம் தோற்றுப் போகும் என்பது உண்மைதானே :)

   Delete
 5. இலட்சம் ரூபா சம்பளம் வாங்கிட்டுத்தான் சாவேங்கிற அவரோட இலட்சியம் நிறைவேறாம போய்ச் சேரப்போறாரே...!

  நெஞ்சு பொறுக்குதில்லையோ...? இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்...!

  ‘சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்...!’ மதுவிலக்கு... விலக்கு...!

  பூஜை நேரத்தில நீங்க வேற புகுந்து கெடுத்திடாதிங்க... சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காதுபோல...! பூஜைக்கு வந்த மலரே வா...!

  "பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா...!"

  எங்க பங்காளி சண்டையே தீர்க்க முடியல அய்யா... முடியல... முயலாமை இல்ல... இயலாமை... முடியல... ஒத்துக்கிறோம்...அய்யா... ஒத்திக்கிறோம்... கொஞ்சம் ஒத்திக்கங்க... உஸ்... அப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே...!

  த.ம.+1


  ReplyDelete
  Replies
  1. அவராவது சாகிறதாவது,இன்னும் நிறைய பேருக்கு கஷாயம் கொடுக்க வேண்டியிருக்கே :)

   உங்க நல்லதுக்கு ,நிலைகெட்ட மனிதரை நினைப்பதை விட்டு விடுங்கள் :)

   மதுவிலக்கை விலக்கச் சொல்லும் கூட்டம் பெருகி வருதே :)

   மலரே வா ,மலர் தூவி உன்னை பூஜிக்கிறேன்:)

   இது பாண்டவர்கள் ராஜ்ஜியம் தலைவரே :)

   ஒத்திக்கீங்க ,இல்லைன்னா வரப்பு தகராறில் நிலத்தை வித்த கதையாயிடும் :)

   Delete
 6. கஷாயம் சாப்பிட்டதால்தான் ஜுரமோ!!!

  ரசித்தேன் ஜி அனைத்தையும்.

  ReplyDelete
  Replies
  1. இது சாப்பிடாததால் வந்த ஜூரம் :)

   Delete
 7. நெஞ்சு வலிக்கு சேர்த்தும்தான் சக்கரை வியாதியில் அவதிபடுகிறார்கள்..படுத்துகிறார்களே!!!

  ReplyDelete
  Replies
  1. #படுத்துகிறார்களே!!!#
   அவர்களிடம் கருணைக் காட்டுங்கள் :)

   Delete
 8. இனிப்பானவர்களுக்கு நிம்மதி...?(!)

  ReplyDelete
  Replies
  1. நிம்மதியாய் போய் சேர்வதாலா:)

   Delete
 9. டாஸ்மாக் மேனேஜரின் பிசினஸ் டெக்னிக் நன்று

  ReplyDelete
  Replies
  1. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க :)

   Delete
 10. Replies
  1. சமர்ப்பியாமி பெயரும் அருமைதானே ஜி :)

   Delete
 11. Replies
  1. தலைவர் 'வண்டு முருகனின்'வாரிசு சொல்வது சரிதானா :)

   Delete
 12. அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. டாஸ்மாக் மேனேஜர் சொல்றதும் உண்மைதானே ஜி :)

   Delete
 13. ரசித்தேன்.

  த.ம. 18-ஆம் வாக்கு.

  ReplyDelete
  Replies
  1. விழுந்தா ஒண்ணரை டஜன் வாக்கு ,இல்லைன்னா மகுடம் ஏற மாட்டேங்குதே ஜி :)

   Delete
 14. நெஞ்சு வலி தெரிய வாய்ப்பே - 'நல்லவேளை, எனக்கு இதயமே இல்லைனு என் மனைவி சொல்றான்னு அவர் சொல்லலை.

  ரசித்தேன். நேற்றே வாக்களித்துவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வலி அறியாத இதயம் என்றால் வரப் பிரசாதம் தானே :)

   Delete
 15. நாட்பட்ட சர்க்கரை நோய்.- நெஞ்சுவலி தெரியாது..
  .அப்படியானால் பக் என்று போய்விடுவார்களே..Bro.
  தமிழ் மணம் - 19.
  https://kovaikkothai.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. வலியால் துடித்து சாவதை விட பக்கென்று போவது நல்லது தானே :)

   Delete