9 August 2017

சொல்லித் தெரியுமோ மன்மதக் கலை :)

இவங்க  இரண்டு பேர் முடிவும் நல்ல முடிவுதானே :) 
             ''யார் கடன் கேட்டாலும் கொடுப்பதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன் !''
           ''எந்த கடனையும் திருப்பித் தருவதில்லைன்னு நானும் முடிவு பண்ணியிருக்கேன் !'' 

ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடந்தால் :)        
          ''ஒலிம்பிக்  போட்டியை அக்ஷயதிருதியை அன்று  நடத்தணும்னு ஏன் சொல்றீங்க ?''
          ''அன்னைக்குத்தானே,  தங்கம் வாங்க  நாம  போட்டி போடுவோம் ? ''

சொல்லித் தெரியுமோ மன்மதக் கலை :)    
        ''அந்த மந்திரவாதி பொண்ணுங்களை குறி வைச்சு ஏமாத்தினது  ,எப்படி ?''
          ''தலையணை மந்திரம் இலவசமாகத் கற்றுத் தரப்படும்னு  சொல்லித்தான் !'' 
பார்க்கவும் ,கேட்கவும் அழகா எல்லோருக்கும் அமையுமா :)
           ''என்னங்க ,புளியந்தோப்பில்  நடந்து வரும் போது,என்னை ஏன் பாடச் சொல்றீங்க ?''
            ''காத்து கருப்பு எதுவும் இருந்தா பயந்து ஓடட்டும்னுதான் !''

உப்பு போடத் துப்பில்லே,ஆனா வாய் மட்டும் :)
           " சாப்பிட்டவங்க 'உப்பில்லை ,நமக் நஹி ,நோ சால்ட்,உப்பு லேதுன்னு சொல்றாங்க,சமையலிலே கவனம் வேணாமா,மாஸ்டர் ? " 
            "நாலு பேர் நாலு விதமா சொல்லுவாங்க அதையெல்லாம் கண்டுக்காதீங்க முதலாளி ! "

கும்கி யானையின் கேள்வி !
      ஏ மானிடனே ...
      வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம் என்பதை
      உன்னுடனே வைத்துக் கொள்ளக் கூடாதா ?
     வெந்ததை உண்டக்  கட்டியாய்  உண்ணக் கொடுத்து ..என்னையும் 
     எம்மினத்தை துரத்தும் இனத்துரோகியாக்குவது நியாயமா ? 

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468816

38 comments:

 1. அனைத்தும் அருமை
  மிகக் குறிப்பாய் ஒலிம்பிக்....
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. ஒரே நாளில் அனைத்து தங்க மெடலையும் அள்ளிக்கலாமா :)

   Delete
 2. ஆவ்வ்வ்வ்வ் ரமணி அண்ணன் முந்திட்டாரே கர்ர்ர்ர்ர்ர்ர்:)... கடன் பற்றிய முடிவுகள் சூப்பர்:)

  ReplyDelete
  Replies
  1. கொடுத்தவன் பாடு ,அம்புட்டுதானா :)

   Delete
 3. Replies
  1. கும்கி யானையின் கேள்வி நியாயம்தானே அய்யா :)

   Delete
 4. முதலாவது ஜோக் - சபாஷ்... சரியான போட்டி!

  ReplyDelete
  Replies
  1. இருவரில் ஜெயிக்கப் போறது யாரோ :)

   Delete
 5. ஒலிம்பிக் விசயம் மோடியிடம் பேசலாமே...

  ReplyDelete
  Replies
  1. நமக்கு சிக்கன் 65தான் தெரியும் ,அவருக்கு.... பதவி ஏற்று சென்று இருக்கும் 65 நாடுகளைத் தெரியும் !ஒலிம்பிக் நடத்தும் அளவுக்கு நம்ம நாடு முன்னேறலைன்னு அவருக்கே தெரியும் :)

   Delete
 6. ‘கடன் அன்பை முறிக்கும்...’ அதனால யாருக்கும் கொடுக்கிறது இல்ல...!
  ‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான்...’ என்னால் கலங்கத்தான் முடியும்...! இல்லையென்றால் கலங்கவைக்க முடியும்...!

  ‘அங்கம் உனது அங்கம் மிருதங்கம் அது தங்கம்’ தங்கமே உன்னை வாங்கத்தான் போட்டி போடுறேன்... இது தெரியாம தலைதெறிக்க ஓடுறீயே...!

  மந்திரவாதி பொண்ணுங்களை... குறி வைச்சு... ஏமாத்துறதே குறிக்கோளா கொண்றிருக்காங்களே...!

  ஏங்க... நீங்கதான் கருப்பு... நீங்களே பயப்படாம வர்றீங்க...!

  ‘உப்பில்லா பண்டம் குப்பையில...!’ குப்பையில யாரும் போட்டாங்களா...? சும்மா மொதலாளி...!

  ‘பொறுத்தது போதும்... பொங்கி எழு...!’

  த.ம.+1

  ReplyDelete
  Replies
  1. கடன்கொடுத்தாலும் ,வாங்கினாலும் வம்புதான் வரும் :)
   ஓடி ஓடி பார்த்தாலும் தங்கத்தைத் தொட முடியவில்லையே :)
   ஏமாற்றவன் இருக்க அவங்களுக்கு என்ன கவலை :)
   இருட்டினில் நடந்தால் பேய் கண்ணுக்குத் தெரிய மாட்டாரோ :)
   உப்பு போட்டாலும் போடா விட்டாலும் விற்றுப் போவுதே :)
   அதான் பொங்கி எழுந்து ஊருக்குள் வருதே யானை :)

   Delete
 7. எந்தக் கடனையும் - நல்ல முடிவு! :)

  த.ம. எட்டாம் வாக்கு.

  ReplyDelete
  Replies
  1. இப்படித் தானே பலபேரும் இருக்காக :)

   Delete
 8. Replies
  1. விவரமான மந்திரவாதி தானே :)

   Delete
 9. கும்கியின் மனக்குமுறல் ஒத்துக்கொள்ளக்கூடியது

  ReplyDelete
  Replies
  1. மனுஷனுக்கு இது உறைக்க மாட்டேங்குதே :)

   Delete
 10. எனக்கும் தெரியவில்லை..யாரும் சொல்லியும் தரவில்லையே.....அந்தக் கலையை........!!!!

  ReplyDelete
  Replies
  1. கவலையை விடுங்க ,ஆய கலைகள் அறுபத்து நான்கு என்கிறார்கள் ...எல்லோருமா அனைத்திலும் கில்லாடியா இருக்காங்க :)

   Delete
 11. கடன் ...ஹஹஹஹ

  ஒலிம்பிக் அஷ்யதிருதியை ஹஹஹ

  கும்கியின் குமுறல் நியாயம்தானே

  அனைத்தும் ரசித்தோம்

  ReplyDelete
  Replies
  1. இது நடக்கிற காரியமா :)

   காசு செலவளித்துதான் தங்கம் வாங்குவோமா :)

   அதுக்காவது ரோஷம் இருக்கே :)

   Delete
 12. Replies
  1. தங்கம் அள்ள வேற வழியே இல்லையா ஜி :)

   Delete
 13. கடனையும் திருப்பித் தருவதில்லைன்னு - அட அட.. அருமையான முடிவு. ஆனா வெளில சொன்னதுதான் தவறு.

  ரசித்தேன். த ம +1

  ReplyDelete
  Replies
  1. இனி கடன் தர மாட்டேன்னு சொல்றவர்கிட்டே சொல்லித் தானே ஆக வேண்டியிருக்கு :)

   Delete
 14. ஏட்டிக்குப் போட்டி
  போட்டியில் பணம் கொடுத்து தங்கம் வாங்க முடியுமா
  பணம் கொடுத்துக் கற்றுக் கொள்வதோ தலையணை மந்திரம்
  காத்து கருப்பு பயந்துஓடுவது நல்ல கற்பனை
  உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்திருக்க வேண்டுமே
  உணவுக்காக எதையும் செய்யப் பழக்குகிறார்களே

  ReplyDelete
  Replies
  1. இரண்டு பேர் முடிவும் நிரந்தரமில்லை :)
   அக்ஷயதிருதியை என்று வேகமா ஓடி பரிசை வாங்கலாம் :)
   அப்படி யாரும் நினைத்து விடக் கூடாதுன்னுதானே இலவசம் என்றார் :)
   குரலுக்கு அப்படி ஒரு சக்தி :)
   உள் 'அளவை ;நினைக்காமல் போனால் சரிதான் :)
   ஒரு ஜான் வயிருக்காக மனிதன் எதையும் துணிந்து செய்கிறானே :)

   Delete
 15. அனைத்தும் அருமை! ஆனாலும் முதல் துணுக்கு மிக அருமை!!

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் வட்டி ஆசை அவருக்கும் விடாது ,தேவை இவருக்கும் இல்லாமல் போகாது :)

   Delete
 16. அனைத்தும் நன்று தலையணை மந்திரம் மிக நன்று

  ReplyDelete
  Replies
  1. நல்லா புரியுற மாதிரி மந்திரம் சொல்லிக் கொடுத்திருக்காரே :)

   Delete
 17. இவங்க இரண்டு பேர் முடிவும்//

  இரண்டுபேருமே ‘கொடா’க்கண்டன்கள்தான்!!

  ReplyDelete
  Replies
  1. உலகத்திலே கொடாக் கண்டர்களை விட விடாக் கண்டர்களே அதிகம் :)

   Delete
 18. ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடந்தால் :)
  ''ஒலிம்பிக் போட்டியை அக்ஷயதிருதியை அன்று நடத்தணும்னு ஏன் சொல்றீங்க ?''
  ''அன்னைக்குத்தானே, தங்கம் வாங்க நாம போட்டி போடுவோம் ?

  தங்கம் வாங்க நல்ல நால் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. ஒலிம்பிக் நடக்கும் நாளே நல்ல நாள் தானே :)

   Delete
 19. தங்கம் வாங்க நல்ல நாள் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. ஏன் இல்லை ,வாங்கும் நாள் எல்லாமே நல்ல நாளே :)

   Delete