30 September 2017

இயக்குனரிடம் ஏமாறாத நடிகை :)

*கேட்டது தப்பா போச்சே :)
           ''பொண்ணு பார்க்க வரும்போது ராசிக்கல் மோதிரம் ஒண்ணு போட்டுக்கிட்டு வந்தீங்களே,அதென்ன ஆச்சு ?''
             ''வித்துட்டேன், ராசியில்லாம போயிடுச்சே அது !''

தோழியிடம் பீற்றிக் கொண்டால் இப்படித்தான் :)
           ' 'உன் வயசுதான் எனக்கும் ,என் சருமம் எவ்வளவு பளபளப்பா இருக்கு ,பார்த்தீயா ?''

29 September 2017

*கலாரசனை உள்ளவருக்கு, இப்போ ஜொள்ளு பார்ட்டின்னு பேர் :)

                 ''நாரதர்  கலாரசனை உள்ளவராய் இருந்திருப்பார்ன்னு ஏன் சொல்றே ?''
                ''யார் அழகுன்னு சீதேவிக்கும் ,மூதேவிக்கும் சண்டை வந்தப்போ ....வரும்போது சீதேவி அழகு ,போகும் போது மூதேவி அழகுன்னு சொன்னாராமே !''            

தலைஎழுத்து உண்மையா ,யோகம் உண்மையா :)
             ''இப்போ கிடைச்ச வேலை ,முந்தியே கிடைச்சிருந்தா ..உங்களைக் கட்டிகிட்டே  இருக்க மாட்டேன்,எல்லாம் என் தலைஎழுத்து  !''

28 September 2017

*மனைவி, தாய் வீட்டிலேயே இருக்கலாமா :)

        '' இன்ஸ்பெக்டர் ஸார், பிறந்தகத்துக்கு போன ,உங்க மனைவி தீவிரவாதிகளை விட மோசம்னு  சொல்றீங்களே ,ஏன் ?''
          ''சமாதான பேச்சுவார்த்தைக்குக் கூட வர மறுக்கிறாளே !''

இது கபாலிக்கு புகுந்த வீடு :)
            ''போலீஸ்  ஸ்டேசன் பக்கம் வரவே பயம்மா இருக்கு ,உனக்கு எப்படி கபாலி ?''

27 September 2017

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியக் கூடாதுதானே :)

*இந்த காலத்தில் இப்படியும் ஒரு கிராமத்தானா:)
             '' டோக்கன்னு சாப்பிடுற அயிட்டம் எதுவும் இருக்கான்னு கேட்கிறீங்களே ,ஏன் ?''
             ''டோக்கன் வாங்கிச் சாப்பிடவும்னு அங்கே எழுதி போட்டிருக்கே !''

இந்த வில்லனுக்கு வில்லனா இருக்காங்களே :)            
               ''டிரைவர், வண்டிக்குள்ளே  சிகரெட் பிடிக்கிறவரை இறக்கி விடணும்னு  விசில் அடித்தால்   வண்டியை  ஏன் நிறுத்த மாட்டேங்கிறீங்க ?''

26 September 2017

பொண்ணுங்க 'டூ வீலரில்' எழுதக்கூடாத வாசகம் :)

*மரம் வைத்தவனே தண்ணியையும் ஊற்றுவானா :)
               ''என் புருஷன் பெயரைச் சொன்னதும் ,கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்துதான் ஆகணும்னு ஏன் சொல்றீங்க, டாக்டர் ?"
               ''இப்பவே நாலு பிள்ளைங்க ,எல்லாம் 'பகவான் 'செயல்னு இன்னொரு பிள்ளையும் பெத்துக்கக் கூடாதுன்னுதான் !''

இவரை  மேய்க்கிறது கஷ்டம்தான் :)          
            ''உங்க கணவருக்கு  படிப்பே ஏற மாட்டேங்குது  ,மாடு மேய்க்கத்தான் அவர் லாயக்கு !''

25 September 2017

பணத் தேவைக்கு இந்த காரியமா செய்வது :)

*கரைய வேண்டியது கரைய மாட்டேங்குதே :) 
                 ''ஆறு மாசமா ட்ரீட்மென்ட் எடுக்கிறீங்களே ,தொந்தி கரையுதா ?''
                 ''ஹும்....பாங்க்  பாலன்ஸ்தான்  கரையுது !''

தலைவலிதான் போச்சே ,அப்புறமும் ஏன் :)
            ''நேற்றுபூரா ஒற்றைத்தலைவலி ,   வலி வலது பக்கமா ,இடது பக்கமான்னு  ஞாபகம் வரலே  ,டாக்டர்  !''

24 September 2017

சரியான டயாபெடிக் உணவு பழக்க வழக்கம் :)


மைனஸ் வோட்டு போட்டு கலாய்த்த நண்பரே ....
           என் மண்டையைக் காய வைத்த , நீங்கள் எந்த குரூப் என்று தெரிந்து விட்டது !நேற்று ,உங்க 'தல' ஆ...மூ விடம் பேசிவிட்டேன் ....அடப் பாவிங்களா ,இப்படியுமா கலாய்ப்பீங்க ? உங்களிடம் மீதம் இருக்கும் ஜனவரி ,பிப்ரவரி போன்ற 12 மாத பெயர்கள்,சனி ,ஞாயிறு போன்ற 7 வாரநாள் பெயர்கள் ,mg ராமச் சந்திரன் போன்ற எழுபது போலி பெயர்களில் இனிமேல் பிளஸ் வாக்கு போடுங்க ,நல்லா வருவீங்க :)

*நட்பு என்றால் இதுவல்லவா நட்பு :)
                 ''ஊருக்கு வர்றேன்னு சொல்லி இருந்தால் ,ரயில்வே ஸ்டேசனுக்கு நான் வந்திருப்பேனே, ஏண்டா சொல்லலே ? ''

23 September 2017

சன்னி லியோனும், குழந்தையும் .......ஒண்ணு:)

 *எரிமலை எப்போ வெடிக்கும்னு சொல்ல முடியுமா :)        
             ''என்னப்பா சொல்றீங்க ,என் பெண்டாட்டி 'கல'கலன்னு இருந்தாலும் தப்பா ?''
             ''உங்கம்மா 'கம்'முன்னு  இருப்பதைப் பார்த்தால்  வீட்டிலே 'கல''கம் 'வெடிக்கும் போலிருக்கே !''

இருந்தாலும் இவ்வளவு செல்லமா :)        
           ''சம்பந்தியம்மா ,என் மக ரொம்ப செல்லமா வளர்ந்தவ,அதனாலே ......!''

22 September 2017

வலையுலக மெண்டல் ரஜினிகாந்துக்கு நன்றி :)

அன்பார்ந்த வலையுலக உறவுகளே ....
                முதலில்  தலைப்புக்கான காரணத்தைச் சொல்லி விடுகிறேன் !சமீப காலமாக என் பதிவுகள் அனைத்திலும் தமிழ்மண எதிர்மறை வாக்கு விழுந்து வருவதைக் கவனித்து இருப்பீர்கள் ,அது ஜட்டிசேகர்,டேபிள் சங்கர் ,பக்கிலுக் என்ற பெயரில் வந்து கொண்டிருந்தது .நேற்றைய பதிவுக்கு ரஜினிகாந்த் என்ற பெயரில் வந்துள்ளது .இப்படி தொடர்ந்து போலியான பெயர்களில் வாக்கு போடுபவரை வலையுலக மெண்டல் என்று சொல்லலாம்தானே ?அந்த மெண்டலின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதத்தில் ,நீங்கள்  என் பதிவுக்கு முன்பைவிட அதிக வாக்களித்து தொடர்ந்து தமிழ்மண மகுடம் சூட்டுகிறீர்கள் ,உங்களுக்கு நன்றி சொல்லும் அதேவேளையில் வலையுலக மெண்டல் ரஜினிகாந்துக்கும் நன்றி சொல்வதுதானே கண்ணியமாக இருக்கும் !
பின்குறிப்பு : பதிவர்கள் நமக்குள் போட்டி இருக்கலாம் ,பொறாமை  இருக்கலாமா ? அந்த மெண்டல் பதிவருக்கு  ,உங்களின் அன்பான கண்டனத்தைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் :)

*ஒரு பேச்சுக்குக் கூட சொல்லக் கூடாது போலிருக்கே :)
             ''இது உங்க வீடு மாதிரி ,கூச்சப்படாம கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க !''

21 September 2017

*டைவர்ஸ் காரணம் 'இது'ன்னா கோர்ட்டில் நிற்குமா :)

             '' ஏம்மா ,உங்க உடம்பு தேறணுங்கிறதுக்குத் தானே சமையல் செய்பவரை மாத்துங்கன்னு சொல்றேன் ,ஏன் யோசிக்கிறீங்க ?''
              '' இதுக்காக புருஷனை டைவர்ஸ் செய்ய  முடியாதே ,டாக்டர் !''

நுணல் மட்டுமா வாயால் கெடும் :)                
       ''அந்த டாக்டர் ,போர்டு வாசகத்தால்  மாட்டிக்கிட்டாரா ,ஏன் ?''

20 September 2017

* மனைவிக்கு சைனஸ் பிரச்சினை என்பதால் இப்படியா : )

              ''அந்த தரகரிடம் பொண்ணு பார்க்கச் சொல்லாதேன்னு ஏன் சொல்றீங்க ?''
            ''கிளிமூக்குன்னு சொல்லி சரியான சளிமூக்கை எனக்கு கட்டி வச்சிட்டாரே !''

அப்பனும், மகனும் கணக்கிலே வீக் :)     
             ''எனக்கு வீட்டு வேலை  நிறையாயிருக்கு,, உன் ஹோம் வொர்க்கை உங்கப்பாகிட்டே கொடு !'' 

19 September 2017

*சீட்டுப் படமே சிம்பாலிக்கா சொல்லுதே :)

இன்று காலை 8.00மணி ,தமிழ் மண நிலவரம் .....
சூடான இடுகையில் ....

தமிழ்மணம் மகுடத்தில்.... 
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை

வாசகர் பரிந்துரையில்.....

மூன்று வரிசையிலும்  ஜோக்காளி பதிவுகள் அடுத்தடுத்து வர,  ஆதரவு அளித்த வலையுலக உறவுகளுக்கு  நன்றி :)             
             
*சீட்டுப் படமே சிம்பாலிக்கா சொல்லுதே  :)
               ''சீட்டாட்டத்தை  சூதாட்டம்னு ஏன் சொல்றாங்க ?'' 
              ''இதுக்கு அடிமையானவனின் 'டயமன்ட் ' எல்லாம் போகுமாம் ,போன துக்கத்தில்  'ஹார்ட் 'வலிக்குமாம் ,வலியினால் இறந்தவனைப் புதைக்க  மண்ணை  'ஸ்பேட் 'டினால்  குழி  தோண்ட வேண்டி வருமாம் , தோண்டிய குழியின் மேல் பிரண்டையை நட்டால் முளைக்கும் 'கிளாவர் '(இலை) சீக்கிரமே தழைத்து வளருமாம் !''

நொந்து நூடுல்ஸ் ஆனால்,நூடுல்ஸ் ஸ்டால் போடலாமோ:)      
                   ''புத்தகத் திருவிழாவில் ,அந்த பதிப்பாளர் போட்ட புத்தகம்விற்கலைன்னு எப்படி சொல்றே ?''

18 September 2017

குத்துக் கல்லாட்டம் மனைவியிருக்க ....:)

இன்று மாலை  6.00 மணி ,தமிழ் மண நிலவரம் .....
சூடான இடுகையில் ..... 
குத்துக் கல்லாட்டம் மனைவியிருக்க ....:) 

தமிழ்மணம் மகுடத்தில் ....

கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
குத்துக் கல்லாட்டம் மனைவியிருக்க ....:) - 16/16 
Bagawanjee KA

 வாசகர் பரிந்துரையில்....

குத்துக் கல்லாட்டம் மனைவியிருக்க ....:) 
16
Bagawanjee KA

மூன்று வரிசையிலும்  அடுத்தடுத்து வர,  ஆதரவு அளித்த வலையுலக உறவுகளுக்கு ,குறிப்பாக மைனஸ் வாக்கு போடாத jattisekar,tableshankar ஆகியோருக்கும் நன்றி :) 


*ஐம்பதிலும் ஆசை வரும்  என்பது சரியா போச்சு :)
              ''உன் வீட்டுக்காரருக்கு பயந்து, நடுத்தர வயசுக்காரியை வேலைக்கு வச்சுகிட்டதும் தப்பா போச்சா ,ஏண்டி ?''

16 September 2017

பணம், திருமணத்திற்கு முன்பும்,பின்பும் :)

 * பிள்ளயோட கேள்விக்கு எப்படி பதில் சொல்றது :)                         
                 ''என் அருமை மகனே, கருணைக் கிழங்கும் ,சேப்பங் கிழங்கும் உருளாதான்னு ஏன் கேட்கிறே ?''
                 ''பிறகேன், ஒரு கிழங்குக்கு மட்டும் உருளைக் கிழங்குன்னு பெயர் வைச்சிருக்காங்க?''

ரேஷன் கடை SMS  நல்லதுதான் ,ஆனால் ...:)
               ''ரேஷனில் வாங்கின பொருளை மட்டும் SMSல்  காட்டினா போதும்னு ஏன் சொல்றீங்க ?''

14 September 2017

முதல் இரவில், மறந்தும் இப்படிச் சொல்லலாமா :)

*அடடா ,பிள்ளைமேல் இம்புட்டு பாசம் :)               
                  ''என்னங்க,நம்ம பையன் 'சிம்'மை முழுங்கிட்டான் !''
                 ''போனால் போகட்டும் ,அதிலே பாலன்ஸ் ஒண்ணுமில்லே !'' 

இதுக்காவது பயன்படுதே  பல்லாங்குழி  :)      
              ''பாட்டி , இப்போ எதுக்கு பல்லாங்குழி பெட்டியைக் கேட்கிறே ,விளையாடப் போறீயா ?''

12 September 2017

மனைவியை வாடி ,போடின்னு சொல்லலாமா :)

*Xரே ன்னு பெயர் வந்த மாதிரி :)
             ''டாக்டர் ,என் குழந்தை  இனிசியலை  X ன்னு பதிந்து இருக்கீங்களே ,ஏன் ?''
               ''இன்னும் கல்யாணம் ஆகலே ,சினிமா சான்ஸுக்காக நாலு பேரோட நெருங்கிய தொடர்பில் இருந்தேன்னு நீங்கதானே சொன்னீங்க !''

இவனுக்கு எப்படி பதில் சொல்றது :)        
         ''வெள்ளம் வரும்போது அணை போடணும் ,தெரியுதா ?''

10 September 2017

கல்யாணப் பொண்ணுக்கு இப்படியுமா சந்தேகம் வரும் :)

* ஒட்டக் கறப்பதில் இருவரில் யார் கில்லாடி :)              
          ''உன்னை விட போலீஸ்காரர் தொழில்லே கெட்டிக்காரரா இருக்காரா ,எப்படி ?''
          ''பசு மாட்டை ரோட்டிலே ஏன் அவிழ்த்து விட்டேன்னு ,என்னிடம் இருந்ததை ஒட்டக் கறந்து விட்டாரே !''

இவனெல்லாம் இங்கே இருக்க வேண்டிய ஆளில்லை :)
            ''லெக்சரருக்கும் ,புரொபசருக்கும்  என்ன வித்தியாசம் ?''

8 September 2017

சுடிதார் செல்லும் இடத்துக்கு ஒரு டிக்கெட் :)

 *படைக்கு  பிந்து ,பந்திக்கு முந்து என்பது மறந்து போச்சா :)
             ''விருந்துக்கு தாமதமாய் போனது தப்பா போச்சா ,ஏன் ?''
             ''பப்ஃபே  விருந்து ,எனக்கு பெப்பே  காட்டிருச்சே !''

கண்டக்டர்  கேட்டதும் தப்புதானே :)
      ''பஸ்  புறப்படவே இல்லே  , அந்த  ஊருக்கு எப்போ போய் சேரும்னு அபசகுனமா கேட்கிறீங்களே ,நியாயமா ?''

6 September 2017

தம்பதிக்குள் 'குளுர்' விட்டுப் போகலாம் ,ஆனால் ...?

*இதுவும் டூ இன் ஒன்தானோ:)
               ''தெப்பக் குளத்தில் ஏன் சிமெண்ட் தளம் போடுகிறார்கள் ?''
               ''நீர் நிறைந்தால் தெப்பத் திருவிழா ,இல்லைன்னா தேரோட்டத் திருவிழா நடத்தத் திட்டமாம் !''

முட்டைத்  தோசை போடவாவது தெரியுமா :)          
        ''உன் புதுபெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலைலே ஏண்டா அடிச்சுக்கிறே ?''

4 September 2017

கல்யாணமாகி நாலு வருஷம் ஆகியிருக்குமா :)

  அன்பார்ந்த வலையுலக உறவுகளே !
                       தேன் எடுத்தவன் வாயும் ,பொடுகுத் தலையன் கையும் சும்மா இருக்காது என்பதைப் போல ,உங்கள் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க ,மீண்டும் பால் காய்ச்சிவிட்டு இரண்டாம் இன்னிங்க்சை தொடங்கி விட்டேன் ,வழக்கமான உங்கள் ஆதரவை நல்க வேண்டுகிறேன் :)
                                                                                                                  அன்புடன் ,
                                                                                                                  பகவான்ஜி 

சிலர் பொறுமையைச் சோதிப்பதால்....:)
                    ''எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் யோசியுங்கள் ,ஆனால் அதற்கு ஏற்ற இடம் இதுவல்லன்னு எங்கே எழுதிப் போடச் சொல்றீங்க ?''

2 September 2017

வலையுலகுக்கு டாட்டா ,பை பை :(

அன்புமிக்க  வலையுலக உறவுகளுக்கு வணக்கம் !
            ஜோக்காளி தளத்தை புறக்கணிக்கும் இனிய நண்பர்களின்  எண்ணத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில் ,இன்றிலிருந்து என் பதிவுகளை  நிறுத்திக் கொள்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
              இதுவரையிலும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி !
                                                                                                  அன்புடன் ,
                                                                                                   பகவான்ஜி .
1 September 2017

காதுக்கு கம்மல் அழகுதானே :)

படித்ததில் இடித்தது :(            
            '' ஆன்லைன் விளையாட்டுக் கூடவா தற்கொலை பண்ணிக்கச் செய்யும் ?மெண்டல் ஆக்கிடுதா ?''
             ''என் கடன் பதிவு போடுவதேன்னு நீங்களும்  மெண்டல் மாதிரிதானே இருக்கீங்க ?''
                ''நானென்ன தற்கொலை பண்ணிகிட்டேனா ?''
                ''உங்க மொக்க காமெடியால் எத்தனைப் பேர் மெண்டல் ஆனாங்க,  தற்கொலை பண்ணிக்கிட்டாங்க என்று யாருக்குத் தெரியும் ?''
இடித்த செய்தியின் தொடுப்பு ....ப்ளுவேல் கேம்- கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை !

இங்கிலீசில் பேசினால்தான் இன்ஸ்பெக்டரா  :)           
           ''கிரிமினல்கள் எல்லாருக்கும் ஆங்கில அறிவு இருக்குமான்னு  ஏன் கேட்கிறே ?''