1 September 2017

காதுக்கு கம்மல் அழகுதானே :)

படித்ததில் இடித்தது :(            
            '' ஆன்லைன் விளையாட்டுக் கூடவா தற்கொலை பண்ணிக்கச் செய்யும் ?மெண்டல் ஆக்கிடுதா ?''
             ''என் கடன் பதிவு போடுவதேன்னு நீங்களும்  மெண்டல் மாதிரிதானே இருக்கீங்க ?''
                ''நானென்ன தற்கொலை பண்ணிகிட்டேனா ?''
                ''உங்க மொக்க காமெடியால் எத்தனைப் பேர் மெண்டல் ஆனாங்க,  தற்கொலை பண்ணிக்கிட்டாங்க என்று யாருக்குத் தெரியும் ?''
இடித்த செய்தியின் தொடுப்பு ....ப்ளுவேல் கேம்- கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை !

இங்கிலீசில் பேசினால்தான் இன்ஸ்பெக்டரா  :)           
           ''கிரிமினல்கள் எல்லாருக்கும் ஆங்கில அறிவு இருக்குமான்னு  ஏன் கேட்கிறே ?''
            ''போலீஸ் இன்ஸ்பெக்டர்  'யூ ஆர் அண்டர் அரெஸ்ட்'ன்னு ஆங்கிலத்தில்  சொன்னதும்  புரிஞ்சிக்கிறாங்களே !''

காதுக்கு கம்மல் அழகுதானே :)
         ''காலண்டர் செவ்வகமா இருக்கும் ,நீங்க ஏன் அதை கம்மல் மாதிரி டிஸைன் செய்து இருக்கீஙக ?''
         ''சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்னு சொல்றாங்க ,சுவர் காதுக்கு    இந்த கம்மல்காலண்டர் அழகாய் இருக்கும்னுதான் !''
புருசனுக்கு உருளைக் கிழங்கு பிடிக்காதோ :)
        ''ஞாபகமா, பக்கத்திலே வேஸ்ட் பேப்பரை வச்சுக்கிட்டு உருளைக் கிழங்கை உரிக்கச் சொல்றீயே ,ஏன் ?''
        ''போன  தடவை தோலை தட்டுலேயும் ,கிழங்கை குப்பையிலும் போட்டது மறந்துடுச்சா ?''

இந்த ' கிளி 'னிக்கில் கூட்டத்துக்கு பஞ்சமில்லே :)
        '' அந்த டாக்டர்  'கிளி 'னிக்னு  போர்டுலே  எழுதியிருக்காரே ,ஏன் ?''
         '' கிளி மாதிரி  அழகான நர்சுங்க நாலு பேரை ,புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்காராம் !''

27 comments:

 1. எந்த டாக்டர் அட்ரஸ் போடலையே... ஜி

  ReplyDelete
  Replies
  1. கோவையில் இல்லாத கிளிகளா :)

   Delete
 2. முதல் ஜோக் சிரிப்பை வரவழைத்தது நிஜமான உரையாடலா ?

  ReplyDelete
  Replies
  1. என் மகனுடன் நடந்த உரையாடலே !ஆனால் ,யாரும் மெண்டல் ஆனதாக கீழ்பாக்கத்தில் இருந்து தகவல் வரவில்லை :)

   Delete
 3. //காதுக்கு கம்மல் அழகுதானே :)//
  Exactly... பட் எந்தக் காது[யாருடைய.., எதனுடைய:)] என்பதிலதான் இருக்கு அழகூஊஊஊஊஊஊ:)..

  பகவான் ஜீ எதுக்கும் புளொக்குக்கு இன்சூரன்ஸ் எடுத்து வையுங்கோ.. மீ சொன்னா கேளுங்கோ:)..

  ஹா ஹா ஹா உருளைக்கிழங்குக்கு தோல் நீக்கத் தேவையில்லையே:)..

  நல்ல கிளி..னிக்குத்தான்.

  ReplyDelete
  Replies
  1. பகவான் ஜீ.. ஸ்ரீராமுக்கு அடுத்து.. உங்க மகுடத்தை யாருக்கு இரவல் கொடுக்கப்போறீங்க?:).. ஏனெனில் மீயும் விரைவில் கியூவுக்கு வரப்போறேன்ன்:)

   Delete
  2. நேரம் 12 மணியைத் தாண்டி விட்டதே.. மட்டின் பிர்ர்ர்ர்ராணி சாப்பிடாமலே பகவான் ஜீ கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

   Delete
 4. ஹாஹாஆ ஹாண்ட்ஸ் அப் சொன்னாலும் புரிஞ்சிப்பாங்க :)
  ப்ளூ வேல் வேதனையான விஷயம் ..இங்கே ஸ்கூல்ஸில் முதலிலேயே வார்ன் செஞ்சிட்டாங்க அதைப்பற்றி
  காதும் அந்த பச்சை கலர் வைர கேசரி செஸ் டங் ஸ்லிப்பிங் :) அந்த வைர பேசரியும் பிரித்தானிய மகாராணியின் உறவுக்காரங்களோடது தானே :)

  ஜெஸி அதோட பட்டு பாதத்தால் மொய் வச்சிடுச்சிங்க :) அதை ஜெசியோட ஆன்ட்டிகிட்ட மறக்காம சொல்லிடுங்க

  ReplyDelete
  Replies
  1. ///அதை ஜெசியோட ஆன்ட்டிகிட்ட மறக்காம சொல்லிடுங்க///
   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒரு குட்டித் திருத்தம்.. ஜெஷிக்கு ஆன்ரி இல்ல,...அக்கா:).. சுவீட் 16 அக்கா:).

   Delete
  2. என்ன ஏஞ்சல் ஜெஸியோட பாட்டியில்லையோ பூசார்!!!!அப்படித்தான் சொன்னதாக நினைவு!!!ஹிஹிஹிஹி

   கீதா

   Delete
 5. ‘வேல் இருக்கப் பயமேன்...?!’ மதுரை... இன்னைக்கு புதுச்சேரின்னு தற்கொலைகள் தொடருதே... இனி புளு வேல் இருக்கப் பயமே...!  போலிஸ் கையில சிக்கியாச்சு...எத்தனை படத்தில பார்த்திருக்கிறோம்... இதுகூட தெரியாதா...?! இனி
  வாழ்க்கைய சின்னாபின்னமாக்கிவிடுறாருன்னு தெரியுமுல்ல...!

  அடச் சீ... கம்ன்னு கிட... கம்மல் போட்டாச்சு...!

  நீங்கதானே தோல்லதான் ரொம்ப சத்து இருக்குன்னு சொன்னீங்க... மறந்துட்டீங்களா...?!

  கிளி பேச்சு கேட்க வா...! வா... வா... வா...!

  த.ம. +1

  ReplyDelete
 6. ப்ளூவேல் கேம் நிஜமாவே உயிரை குடிக்குமா?!

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு அடிமையானோர் உயிரைக் குடிக்கும் :)

   Delete
 7. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
  தமிழ் செய்திகள்

  ReplyDelete
 8. கம்மல் அழகோ அழகு

  ReplyDelete
  Replies
  1. கம்மல் மட்டுமா அழகு :)

   Delete
 9. எல்லாவற்றையும் படித்தேன் ரசித்தேன் கருத்து ஒவ்வொன்றாக எழுதவில்லை

  ReplyDelete
  Replies
  1. கருத்துப் பெட்டிக்கு மேலுள்ள என் கருத்தை நீங்கள் படிக்க வில்லையா :)

   Delete
 10. '' கிளி மாதிரி அழகான நர்சுங்க நாலு பேரை ,புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்காராம் !''//

  தலைவலி காய்ச்சல்னு சொல்லிகிட்டு இளவட்டங்கள் வந்து குவிவாங்களே, டாக்டர் சமாளிப்பாரா?!

  ReplyDelete
  Replies
  1. கூட்டம் சேர சேர காசுதானே ,டிஸ்டில் வாட்டர் ஊசி போட்டு அள்ளுவார் :)

   Delete
 11. Replies
  1. அந்த தேனை நானும் ரசித்தேன் :)

   Delete
 12. கிளியையும், இங்கிலீஷ் பேசும் அந்த இன்ஸ்பெக்டரையும் ரொம்பவே ரசித்தோம் ஹிஹிஹி....

  அனைத்தும் ரசித்தோம் ஜி...

  ReplyDelete
  Replies
  1. உண்மைக் கிளி ஜோதிடர் பிழைப்புக்கு ,இந்த கிளிகள் டாக்டர் பிழைப்புக்கு சரிதானே :)

   Delete
 13. பெண்களின் காதுக்கு கம்மல் அழகுதான் அதுவும் தங்கத்தில் போட்டு இருந்தால் ரெம்பவும் அழகுதான்...

  ReplyDelete
  Replies
  1. அழகுக்கு அழகு சேர்க்கிறதோ கம்மல் :)

   Delete