12 September 2017

மனைவியை வாடி ,போடின்னு சொல்லலாமா :)

*Xரே ன்னு பெயர் வந்த மாதிரி :)
             ''டாக்டர் ,என் குழந்தை  இனிசியலை  X ன்னு பதிந்து இருக்கீங்களே ,ஏன் ?''
               ''இன்னும் கல்யாணம் ஆகலே ,சினிமா சான்ஸுக்காக நாலு பேரோட நெருங்கிய தொடர்பில் இருந்தேன்னு நீங்கதானே சொன்னீங்க !''

இவனுக்கு எப்படி பதில் சொல்றது :)        
         ''வெள்ளம் வரும்போது அணை போடணும் ,தெரியுதா ?''
          ''அதெப்படி  ஸார்  ,அணையைத் திறந்தால் தான்  வெள்ளமே வருது ?''

எப்படா ஸ்கூல் விடும்னு  இருப்பாங்களோ ?       
         '' நம்ம பள்ளிக்கூட மணியை ,உடனே எலெக்ட்ரிக் மணியாய்  மாற்றணுமா ,ஏன் ?''
         ''தெருவிலே ,சோன்பப்டி வண்டிக்காரன் அடிச்ச மணி சத்தத்தைக் கேட்டு எல்லாரும் வெளியே ஓடிட்டானுங்களே !''

அன்று  செய்தது அபார்ஷனுக்கு உதவி ...இன்று :)
                ''குழந்தைப் பிறக்காததற்கு  காரணம் , நான் இல்லைன்னு லேப் ரிசல்ட் சொன்னாலும் என் புருசன் நம்ப மறுக்கிறார்டீ!''
               ''கல்யாணத்திற்கு முன்னாடியே ,அபார்ஷன் பண்ணிக்கிட்டதை  சொல்லிப் பாரேன் !''

அழகை ரசிக்க அழகு தேவையா ?
  விரலில் எட்டிப் பார்த்தது ஒரு துளி இரத்தம் ...
  குத்திய முள் கேட்டது ...
  நான் ரசிக்கும் ரோசாவை நீ ஏன் பறித்தாய் ?

மற்ற மிருகங்களால்  தொந்தரவு வரக் கூடாது :)           
           ''புலித் தோல் மற்ற மிருகங்களுக்கு கிலியைக் கொடுக்கும்னு  ஏன்  சொல்றே ?''
           ''அதனால்தானே ,  முனிவர்கள்  அது மேலே உட்கார்ந்து  தவம்  இருக்காங்க !''

கடவுளுக்கே பொறுக்காது என்பது சரிதான் :)
         ''என்னடி சொல்றே ,' வரம் தா ' ன்னு நான் பாடுறதைக்  கேட்டு கடவுள் நிச்சயம் வருவாரா ?''
         '' இனி வாய் திறந்து பாடமாட்டேன்  என்று, உன்னிடம் சத்தியம்  வாங்கிட்டுப் போக வந்துதானே ஆகணும் !'' 
கடைக்காரர் செய்தது சரிதானே :)                                                                            
        ''அந்த ஜெராக்ஸ் கடைக்காரர் உன்கிட்டே காசே தர வேண்டாம்னு  ஏன் சொன்னார் ?''
       ''  ஜெராக்ஸ்சில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் வந்து இருக்கான்னு செக் பண்ணிக்கிறேன்னு சொன்னேன் ,தப்பா ?''

மனைவியை வாடி ,போடின்னு  சொல்லலாமா :)
            ''உன் பெண்டாட்டியை நீ வாடி ,போடின்னு சொல்றது எனக்கு சரியாப்படலே !''
            ''சரி ,சொல்லிட்டுப்  போடான்னு அவளே சொல்லும்போது உனக்கென்ன வந்தது ?''

வாழ்க்கைத்  தத்துவமே  இதிலிருக்கு  :)
        உரிக்கும்போது கண்ணீரை வரவழைக்கும்  வெங்காயம்தான் ...
        நாவிற்கு சுவை !
        வாழ்க்கையும் அப்படித்தான் ...
        கஷ்டத்தில் கண்ணீரும் 
       கடந்த பின்  மகிழ்ச்சியும்  வருதே !

டிஸ்கி :என் பதிவு புதியதும் பழையதும் கலந்த கலவைதான் ,*குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)
52 comments:

 1. முன்பு பத்திரிக்கைகளில் இது போன்ற நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்தார்கள். சிரிக்கும்படியும் இருந்தது. இப்போது அது மறைந்து விட்டது. போடக்கூடியதும் சிரிக்கும்படியே இருப்பதில்லை. நம் மனோபாவம் மாறிவிட்டதோ?

  ReplyDelete
  Replies
  1. //முன்பு பத்திரிக்கைகளில் இது போன்ற நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்தார்கள். //

   ஜோதிஜி இப்போதும் அளிக்கிறார்கள் ஆனால் நகைச்சுவை என்பதற்கு பதில் பரபரப்பு ப்ரேக்கிங்க் நீயூஸ் என்ற பெயரில் அவ்வளவுதான் பன்னீர் செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்கு போகிறாராம் அதை போய் நேரலை செய்திகளாக காட்டுகிறார்கள் நீயூஸ் 18 ல்

   Delete
  2. டிவி வரும்வரை வார இதழ்களின் பொற்காலமாய் இருந்தது ,இப்போது படிக்கும் வழக்கமே குறைந்து போய்விட்டது ,காமெடி ஷோ நிறைய சேனல்களில் வந்து விட்டது ,அதான் மவுசு குறைந்த காரணம் :)

   Delete
 2. Replies
  1. தமிழ்மணம் சரியான பின் போட்ட முதல் வாக்குக்கு நன்றி :)

   Delete
 3. செராக்ஸ் கடைக்காரர் விவரமானவர்தான் த.ம. வாக்கு வெற்றி

  ReplyDelete
  Replies
  1. இனிமேல் இந்த சந்தேகப் பேர்வழி வந்தால் விரட்டி விடுவாரோ :)

   Delete
 4. '' ஜெராக்ஸ்சில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இருக்கான்னு செக் பண்ணிக்கிறேன்னு சொன்னேன் ,தப்பா ?''
  ''குழந்தைப் பிறக்காததற்கு காரணம் , நான் இல்லைன்னு லேப் ரிசல்ட் சொன்னாலும் என் புருசன் நம்ப மறுக்கிறார்டீ!''
  ''கல்யாணத்திற்கு முன்னாடியே ,அபார்ஷன் பண்ணிக்கிட்டதை சொல்லிப் பாரேன் !''
  செம கலாட்டா ஜீ .

  ReplyDelete
  Replies
  1. மூன்றுக்கும் சந்தேகம்தான் அடிப்படையாய் இருக்கே ஜி :)

   Delete
 5. வரம் கேட்க வரும் கடவுள் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தோழியின் குரலைக் கேட்டு நொந்து இருப்பார் போலிருக்கே :)

   Delete
 6. அருமை நண்பரே
  த+ம வாக்கு போட்டாச்சு

  ReplyDelete
  Replies
  1. ஜெராக்ஸ்சை சந்தேகப் படும் நபரை என்ன செய்யலாம் ஜி :)

   Delete
 7. மகிழ்ச்சி தமிழ்மணத்திற்கு....அலையவிடாமல் செய்ததற்கு....

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் மீண்டும் வந்ததில்,எனக்கும் மகிழ்ச்சிதான் :)

   Delete
 8. ரசித்தேன். சிரித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. சோன்பப்டி வண்டிக்காரன் மேல் எதுவும் தப்பு இருக்கா ஜி :)

   Delete
 9. ஓட்டு போட்டாச்சி!த ம 8

  ReplyDelete
  Replies
  1. அபார்ஷன் ஆனதை எல்லாம் சொல்ல முடியுமா அய்யா :)

   Delete
 10. சிரிப்பு வருது! சிரிப்பு வருது!!

  ReplyDelete
  Replies
  1. சின்ன மனுஷன் ,பெரிய மனுஷன் செயலைப் பார்க்க சிரிப்பு வரத்தான் செய்யும் ,சின்ன மனுஷன் நான்தான்...பெரிய மனுஷன் யாருன்னு சொல்லலாமே :)

   Delete
 11. பதிவுகளி சில பழையதாக ஈருந்தாலும் ரசிக்க வைக்கிறது தன்பெண்டாட்டியை வாடி போடி எனலாம் ஆனால் பிறன் பெண்டாட்டியை அப்படிக்கூப்பிட்டு பாருங்கள் தெரியும்
  நகைச்சுவை ஜோக்குகளும் சொல்பவரைப் பொறுத்ததோ என்னவோ

  ReplyDelete
  Replies
  1. தாலி சுமக்கும் பாவத்துக்கு மனைவி வேண்டுமென்றால் பொறுத்துக் கொள்வாள்:)

   Delete
 12. பொண்டாட்டியை இனிமேல் அப்படி அழைக்க முடியாத நிலை கண்டிப்பாக வரும்

  ReplyDelete
  Replies
  1. இப்பவும் மெஜாரிட்டி அப்படித்தானே இருக்கு ஜி :)

   Delete
 13. அனைத்தும் ரசித்தோம் ஜி!

  ReplyDelete
  Replies
  1. என்ன பெயர் என்று தெரியாவிட்டால் X ன்னு சொன்னா தப்பில்லைதானே ஜி :)

   Delete
 14. சத்தியம் வாங்கிட்டுப் போக வந்துதானே ஆகணும் !//

  சத்தியம் தவறினாலும் என்னை நீ தண்டிக்கக் கூடாதுன்னு வரம் வாங்கிடலாம்!

  ReplyDelete
  Replies
  1. வரம் கொடுக்கிற வேலைதான் கடவுளுக்கா :)

   Delete
 15. ரசித்தேன் நண்பரே
  த.ம.கூடுதல் ஒன்று

  ReplyDelete
  Replies
  1. எலெக்ட்ரிக் மணி அடித்தால் குழப்பம் வராதுதானே :)

   Delete
 16. மன்னிக்கவும்... நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபரைத் தொடர்பு கொள்ள முடியாது... அவர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்...!
  த.ம.+1

  ReplyDelete
  Replies
  1. ஜோலி முடிந்தது, அவர் எதுக்கு தொடர்பிலேயே இருக்கப் போகிறார் :)

   Delete
 17. அனைத்தையும் ரசித்தேன். வெங்காயத்தை சற்றே அதிகமாக.

  ReplyDelete
  Replies
  1. வெங்காயத் தத்துவம் கண்ணில் நீரை வரவழைத்ததா :)

   Delete
 18. அருமை ஜி....
  வாழ்த்துக்கள்.
  ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. உங்களின் 'மகிழ்வான தருணங்களைக்' கண்டு நானும் மகிழ்ச்சி அடைந்தேன் ஜி :)

   Delete
 19. நான் வலு கவனமா உத்துப் பார்த்து பிளஸ் வோட்டுப் போட்டேன் பகவான் ஜீ..

  ReplyDelete
  Replies
  1. வேற பிளாக் என்றால் வாலண்டியரா ஜோடி சேர்ந்து கும்மாளம் அடிக்கத் தெரியுதில்லே,இன்னும் அரைமணி நேரத்தில் உங்க தோழியுடன் இங்கே ஆஜராகனும் ,இல்லைன்னா பிரித்தானியா நீதிமன்றத்தை நான் நாட வேண்டிவரும் :)

   Delete
  2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) என்ன இது ஜோக்காளி புளொக்கில் கால் வைக்க முடியாதளவுக்கு புகை மண்டலமா இருக்கே என ஓசிச்சேன் :) இதுதான் காறணமோ:)...

   உங்கட வாத்து பொன் முட்டையை டெய்லி போடுது, தவறாமல் ஓடிவந்து முட்டை பொறுக்கி தாறேன்... ஆனா எங்க வீட்டு வாத்து வாரம் ஒரு முட்டைதான் போடுது... அதுக்கு வந்து தாய்மாமன் சீர்வரிசை செய்ய மாட்டேன் என்கிறீங்களே இது ஞாயமா... இதோ பகவான் ஜீ யால மனமுடைஞ்சுபோய் தேம்ஸ் கரையில் டீக்குளிக்கப் போறேன்... எதுக்கும் சந்தனக் கட்டையா அடுக்குங்கோ:)

   Delete
  3. உங்க வாத்து அதோட கூட்டுலே முட்டைப் போட்டால் ,நிச்சயமா தாய்மாமன் சீதனம் செய்வேன் :)
   இம்புட்டு யோசிச்சு பதிவை உங்க தளத்தில் போடாமல் , பலனை வேற யாரோ அனுபவிக்க கொடுக்கிறீங்களே ....அதிராவின் வலையைப் பற்றி வலையுலகத்தில் தெரியாதவர்கள் யாருமே இல்லை ,மகுடம் உங்கள் தலைக்கும் வருவதில் இருந்தே இந்த உண்மை புரிகிறதே :)

   Delete
  4. என்ன பதிலையும் காணோம் ,தோழியும் வரக் காணாமே :)

   Delete
  5. ///Bagawanjee KAWed Sep 13, 08:55:00 pm
   உங்க வாத்து அதோட கூட்டுலே முட்டைப் போட்டால் ,நிச்சயமா தாய்மாமன் சீதனம் செய்வேன் :)///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பகவான் ஜீ உடனடியாகத் தேம்ஸ் கரைக்கு வாங்கோ..:) உங்களுக்கு நீந்தத் தெரியுமோ?:) வாத்து அதனோட வீட்டில போட்ட முட்டைக்காகவேதானே இப்போ 5 நாளாகப் போராட்டிக்கொண்டிருக்கிறேன்ன்.. இல்லாட்டில் இப்பூடி வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பேனோ நான் கர்ர்ர்ர்ர்:).. முடியல்ல ஜாமீஈஈஈஈஈஇ.. மீ சைக்கைற்றி வோட்ல அட்மிட் ஆகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. பிளீஸ்ஸ்ஸ் எனக்கு சொக்ட் ட்றீட்மெண்ட்டும் வாணாம்ம்.. ஊசியும் வாணாம்ம்ம்ம்.. ஏதும் கசப்பில்லாத மருந்தாத் தந்து சுகப்படுத்திக் கூட்டி வாங்கோ.. அடுத்த போஸ்ட் போடோணும் நான்ன்ன்:))..

   பகவான் ஜீ உந்தக் கறுப்புக் கண்ணாடியை முதல்ல கழட்டி காவிரி ல வீசிடுங்கோ:).. அப்போதான் அதிராவின் புளொக் ஒழுங்கா கண்ணில படும்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))..

   Delete
  6. ///என்ன பதிலையும் காணோம் ,தோழியும் வரக் காணாமே :)///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா திரும்ப திரும்ப ஒரே கேள்வியைக் கேட்டுக்கொண்டு.. அவதான் , நீங்க என்னைத் திட்டியதைப் பார்த்ததும்.. பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிவந்து வோட்டுப் போட்டிட்டாவே கவனிக்கேல்லையோ:))
   ஹையோ என்னோட சேர்ந்த குற்றத்துக்காக அஞ்சுவுக்கும் வெடி விழுதே ஹா ஹா ஹா:)..
   அஞ்சூஊஊஊ இதுக்குத்தான் சொல்றது பண்டியோடு சேர்ந்த பசுவும் ஊத்தை தின்னுமாமே.. ஹா ஹா ஹா எனக்கு விழும் அடியில் பாதியை நீங்க பொறுப்பெடுத்துத்தான் ஆகோணும் அஞ்சு டீஈஈஈஈஈல்ல்ல்?:)).. ஹா ஹா ஹா..

   Delete
  7. Noooooo 😂 neengale enakkum serthu ellaa adiyum vaangikkonga haaaaa haaaa

   Delete
 20. Bagawanjee ..19 vote jessieyodathu 😃

  ReplyDelete
  Replies
  1. நன்றி ,தினமும் விழும் மணவையாரின் வாக்கு இன்று விழவேயில்லை :)

   Delete
  2. என்னையா சொன்னீங்க? கொஞ்சம் தாமதமாகிட்டேன்ன்.. தோஓஓஓஓஓஓ வந்திட்டேன்ன்:).

   Delete
  3. மணவையார் என்றால் நீங்களா ?நீங்கதான் பூஜாராச்சே :)

   Delete
 21. #கறுப்புக் கண்ணாடியை முதல்ல கழட்டி காவிரி ல வீசிடுங்கோ:).. அப்போதான் அதிராவின் புளொக் ஒழுங்கா கண்ணில படும்#
  என் கண்ணில் மட்டுமா ,பலரது கண்ணுக்கும் உங்கள் புளொக் படவில்லை போலிருக்கே !இன்று சொன்னதை அன்றைக்கே சொல்லியிருந்தால் ,பதிவு மகுடம் சூட என்னாலான உதவியை செய்திருப்பேனே !
  உங்கள் புளொக்கில் ஏதோ பிரச்சினை போலிருக்கிறது ,லிங்குகளை க்ளிக் செய்தால் வேலை செய்யவில்லை ,சரி செய்யுங்கள் !

  ReplyDelete
  Replies
  1. //இன்று சொன்னதை அன்றைக்கே சொல்லியிருந்தால் ,பதிவு மகுடம் சூட என்னாலான உதவியை செய்திருப்பேனே !//

   உண்மைதான், நன்றி பகவான் ஜீ... அது என் ராசி அப்பூடி:) நான் போஸ்ட் பப்ளிஸ் பண்ணிய கையோடு தமிழ்மணமும் மூச்சை நிறுத்திக் கொண்டதே:).. தமிழ்மண லிங் இணைக்கப்போட்டேனே தவிர, லிங் இணைக்கவில்லை அங்கு.. அதனை நீக்கி விடுகிறேன்.. என்பக்கம் போகவே எனக்கு நேரமில்லை.. கிடைக்கும் நேரத்தில் ஊரைச் சுற்றி வரவே சரியாகுது:).

   ஊசிக்குறிப்பு:
   இரு பகுதியினரும் சமாதான இணக்கத்துக்கு வந்துவிட்டமையால்... பிரித்தானியக் காண்ட் கோட் நீதிபதி.. தன் கையாலயே டிவோஸ் பத்திரத்தைக் கிழிச்சு.. தேம்ஸ்லே வீசுகிறார்ர்ர்:) ஹா ஹா ஹா:)

   Delete
  2. #என்பக்கம் போகவே எனக்கு நேரமில்லை#
   இது ரொம்ப தப்பு ,தளத்தை புனரமைப்பு செய்து பதிவுகளால் கலக்குங்க :)

   Delete