14 September 2017

முதல் இரவில், மறந்தும் இப்படிச் சொல்லலாமா :)

*அடடா ,பிள்ளைமேல் இம்புட்டு பாசம் :)               
                  ''என்னங்க,நம்ம பையன் 'சிம்'மை முழுங்கிட்டான் !''
                 ''போனால் போகட்டும் ,அதிலே பாலன்ஸ் ஒண்ணுமில்லே !'' 

இதுக்காவது பயன்படுதே  பல்லாங்குழி  :)      
              ''பாட்டி , இப்போ எதுக்கு பல்லாங்குழி பெட்டியைக் கேட்கிறே ,விளையாடப் போறீயா ?''

              ''அட நீ வேற ,காலை மாத்திரை ,இரவு  மாத்திரை எதுன்னு தெரிய மாட்டேங்குது ,பிரிச்சுப் போட்டு வச்சுக்கலாம்னு தான்!''
கலருக்கு  காரணம் குங்குமப் பூவா :)
          ''குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை சிகப்பா பிறக்க வாய்ப்பில்லைன்னு  எப்படி உறுதியாச் சொல்றே ?
          '' குங்குமப் பூ போட்ட கேசரியே சிகப்பா வர  மாடேங்குதே!''

முதல் இரவில் மறந்தும் இப்படிச் சொல்லலாமா  :)
          ''டார்லிங் ,முதலிரவிலே எனக்கே பதட்டமாயிருக்கே,உனக்கு எப்படி ?''
          ''எனக்கு அனுபவமாகிப் போச்சுங்க !'' 
         
காதலி ஒண்ணு,காது மட்டும் ரெண்டா :)
          ''கண்ணு ,மூக்கு ,வாய் எல்லாம் முன்னாடி பார்க்கயிருக்கு...காது மட்டும் ஏன் இரண்டு  பக்கமும்  இருக்கு,டார்லிங் ?''
          ''சில லூசுங்க இந்த மாதிரி கேட்பதை இந்த காதுலே வாங்கி,அந்த காது வழியா விடத்தான் !''

மக்கள் தலையில் விழுவது வரிகள் மட்டுமல்ல !
சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கு 
வருகை தரும் பயணிகள்  கவனத்திற்கு ...
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 
மேற்கூரை  மூன்று மாதத்தில் நான்கு முறை 
இடிந்து விழுந்து இருப்பதால் ...
இரும்பு ஹெல்மெட்டுடன் வருகை தருமாறு 
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் !
விமான பயணத்தில் மட்டுமல்ல 
விமான நிலையத்திலும் கூட ...
உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் என்பதை 
பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் !
    (குறிப்பு .... 67 முறை கூரை பெயர்ந்து விழுந்துள்ளது  :)

டிஸ்கி :என் பதிவு புதியதும் பழையதும் கலந்த கலவைதான் ,*குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

40 comments:

 1. அதுக்காக ஏன் இந்த ஓட்டம் ஓடுறாய்ன்னு கேட்டா... ‘சிம்’ரன்ன... பார்க்க ஓடுறேன்னு சொல்றான்...!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. ஓடட்டும் ஓடட்டும் ,வாழ்க்கையில் இதுக்கு ஓடாட்டி வேற எதுக்கு ஓட போறார் :)

   Delete
 2. ஹெல்மெட் தேவைதான்.

  ReplyDelete
  Replies
  1. இண்டர்நேசனல் ஏர்போர்ட் அனைத்திலும் இந்த தகவலை சொல்லிட்டா நல்லது :)

   Delete
 3. Replies
  1. பல்லாங்குழி மறக்க முடியாத விளையாட்டு தானே :)

   Delete
 4. Replies
  1. ஏதாவது சொல்லுங்க ட்ரூத் :)

   Delete
 5. அனைத்தையும் ரசித்தேன். கூரை நகைச்சுவை பொருத்தமானது.

  ReplyDelete
  Replies
  1. கூரை ,ஆறேழு தடவை விழுந்தாலும் பரவாயில்லை ,அறுபத்தேழு தடவையா விழுவது :)

   Delete
 6. ஹா ஹா ஹா பகவான் ஜீ..., மைனஸ் வோட் போடுபவரை இன்னும் காணல்ல:).. ஹையோ முறைக்காதீங்க.. ரெகுலரா வருவோரைக் காணவில்லை எனில் மனம் தேடுவது வழமைதானே?:) ஹா ஹா ஹா:)..

  //''எனக்கு அனுபவமாகிப் போச்சுங்க !'' /// ஹா ஹா ஹா ஹையோ முடியல்ல ஜாமீஈஈஈஈ:))

  ReplyDelete
  Replies
  1. அந்த மைனஸ் வோட்,ஃபேக் ஐடி யின் பெயர் ஜட்டி சேகர் என்று காட்டுகிறது ,மானங்கெட்டவனுக்கு ஜட்டி வேற :)

   Delete
  2. அதிரா ,அந்த 'ஜட்டி' தேம்ஸ் பக்கத்தில் தான் இருக்கும் போலிருக்கு ,சிக்கினா ,என்கிட்டே கூட கேட்காதீங்க ,தேம்சுலே தூக்கி கடாச்சிருங்க :)

   Delete
  3. அச்சச்சோ வந்திட்டாரா... ஹையோ ஆண்டவா இது தொடரும்போல இருக்கே..:) நீங்க பயப்பிடாதீங்க பகவான் ஜீ, நான் காலிலே கல்லைக் கட்டிட்டே தேம்ஸ்ல தள்ளிடுவேன்:).

   நிஜமாத்தானா? பிரித்தானியாவிலயோ இருக்கிறார்ர்.. நேக்குப் பயம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊஊ:))

   Delete
 7. Replies
  1. மூன்றெழுத்தில் தான் உங்கள் மூச்சு இருக்கும் போலிருக்கே ஜி :)

   Delete
 8. அந்த சிம்மின் எண் ஆதார் நம்பருடன் இணைக்கப் பட்டதா
  பல்லாங்குழி நல்ல ஐடியாதான்
  என்னதான் குங்குமப் பூ சாப்பிட்டாலும் பெற்றொரின் அல்லது தலை முறை நிறம் போகுமா
  எனக்குத்தான் இது முதல் இரவில்லையே என்றும் சொல்லலாம்
  காதலியும் ஒன்றுக்கு மேல் இருக்கக் கூடாதா
  விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டியதுதான்

  ReplyDelete
  Replies
  1. இணைத்து இருந்தால் இன்சுரன்ஸ் பணம் எதுவும் கிடைக்குமா :)
   விளையாடவும் செய்யலாமோ :)
   பரம்பரை நிறம்தான் நிச்சயம் :)
   எப்படி சொன்னாலும் மாட்டிக்க நேரிடுமே :)
   காது இரண்டு இருக்கும் போது காதலி இருக்கலாமே :)
   அதுக்கு பதிலா பிரச்சினையை கல்லைப் போட்டு மூடி விடலாம் :)

   Delete
 9. அடடே! பல்லாங்குழியை இப்படியும் பயன்படுத்தலாமோ? இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. சும்மாதானே கிடக்கு ,இப்படி பயன்படுத்தலாமே :)

   Delete
 10. பல்லாங்குழி , மாத்திரை போடவாவது யூஸ் ஆகுதே!

  ReplyDelete
  Replies
  1. யூஸ் ஆகாத எத்தனையோ பொருட்கள், உங்கள் கைவண்ணத்தால் அழகு பெறுவது போலத்தான் இதுவும் :)

   Delete
 11. பல்லாங்குழியை பயனுள்ளதாக மாற்றிய நவீன எடிசனே வாழ்க

  ReplyDelete
  Replies
  1. நோபல் பரிசுக்கு இவர் பெயரைப் பரிந்துரைக்கலாமே ஜி :)

   Delete
 12. அனுபவத்தை சொன்னால் வம்பாகி விடுமோ...?????????

  ReplyDelete
  Replies
  1. வம்பெல்லாம் வராது ,அடுத்த முதலிரவு வரும் :)

   Delete
 13. Replies
  1. உங்கள் ரசனைக்குரிய 'ஜோக்காளி'உங்களின் தளத்தில் எங்கள் விருப்பமாய் மாறப் போவது எப்போது ஜி :)

   Delete
  2. ஹா ஹா பகவான் ஜீ... இதைத்தானே அன்று நான் மறைமுகமாச் சொன்னேன்,
   அது விடை தவறு எனச் சொல்லி முளையிலயே கிள்ளிட்டீங்களே:)...
   விடாதீங்கோ... அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்... ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)... மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊ:).

   Delete
  3. #ஸ்ரீராம் வந்து சொன்னால்தான் புய்ய்ய்யும்ம்ம்:)#என்று அன்று சொல்லி இருந்தீங்க ....நண்பர் ஸ்ரீராம் ஜி புரியும்படி சொல்வார் என்று நம்புகிறேன் :)

   Delete
  4. அவர் சொல்ல மாட்டார் ஆனா செய்வார்... ஹையோ என்னை விடுங்கோ மீ தேம்ஸ்க்கு ஓடிடுறேன்ன்ன்ன்ன்:)...
   ஊசிக்குறிப்பு:
   பகவான் ஜீ ... என் அடுத்த போஸ்ட்டுக்கு மகுடத்தை எப்படியும் தருவீங்கதானே:) ஹா ஹா ஹா:)

   Delete
  5. நிச்சயம் செய்வார் ,இதற்கு ஐநா சபை தீர்மானமா போடணும் :)

   உங்க தளத்தில் அது வெளியானால் என் ஆதரவு நிச்சயம் உண்டு :)

   Delete
  6. போராடுவோம் போராடுவோம்... வெற்றி கிடைக்கும்வரை போராடுவோம்:)... ஹையோ அஞ்சு கொஞ்சம் ஒரு கொடியை நீங்க பிடிங்கோ:)... தனியே நிக்கப் பயமா இருக்கூஊஊஊஉ:)

   Delete
  7. மாண்புமிகு நீதியரசர் ,ஸ்ரீராம்ஜியை அழைத்து விசாரிக்கிறேன் ,முதலில் போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று உறுதி அளித்திருப்பதால் தற்காலிகமா போராட்டத்தை ஒத்தி வைக்கிறேன் :)

   Delete
 14. முரல் இரவு சிம்கார்டு அருமை த ம 17

  ReplyDelete
  Replies
  1. ஒன்றில் கள்ளியின் ரகசியம் ,இன்னொன்றில் பணத்தின் மேலான பற்று தெரிகிறதா ,அய்யா :)

   Delete
 15. காதலி ஒண்ணு,காது மட்டும் ரெண்டா :)
  இந்த காதலிக்கு என்ன ஒரு வில்லத்தனம் :)

  கலக்குங்க ஜீ .

  ReplyDelete
  Replies
  1. இவ பேச்சைக் கேட்டா லூஸாம்,கேட்கலை என்றாலும் வம்பா கிடக்கு:)

   Delete
 16. பல்லாங்குழி ஐடியா நல்லாருக்கே!!

  அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. வீட்டிலே பாட்டி இருக்காங்களா :)

   Delete