16 September 2017

பணம், திருமணத்திற்கு முன்பும்,பின்பும் :)

 * பிள்ளயோட கேள்விக்கு எப்படி பதில் சொல்றது :)                         
                 ''என் அருமை மகனே, கருணைக் கிழங்கும் ,சேப்பங் கிழங்கும் உருளாதான்னு ஏன் கேட்கிறே ?''
                 ''பிறகேன், ஒரு கிழங்குக்கு மட்டும் உருளைக் கிழங்குன்னு பெயர் வைச்சிருக்காங்க?''

ரேஷன் கடை SMS  நல்லதுதான் ,ஆனால் ...:)
               ''ரேஷனில் வாங்கின பொருளை மட்டும் SMSல்  காட்டினா போதும்னு ஏன் சொல்றீங்க ?''

               ''ஏழு பொருள் வாங்கினதா SMS வந்திருக்கே ... சீனி மட்டும்தானே கொண்டு வந்து இருக்கீங்க ,மற்ற பொருட்களை எந்த சிறுக்கிகிட்டே  கொடுத்தீங்கன்னு என் மனைவி கேட்கிறாளே !''

 மேனேஜரின் பார்ட்டி ஐடியா பலிக்குமா :)
                ''எனக்கு சினிமா சான்ஸ் வர வர குறைஞ்சுகிட்டே வருதே , என்ன செய்யலாம் , மேனேஜர் ?''
               ''தொப்புள் அணி விழான்னு  எல்லோரையும்  விருந்துக்கு அழைக்கலாம்  !''
மனைவி குண்டாயிருந்தா இப்படியா கிண்டல் பண்றது :)
                 ''என்னங்க ,குக்கரைப் பார்த்தா என் ஞாபகம் வருதா ,ஏன்  ?''
                 ''அதுவும் வெயிட்டை  தூக்க  முடியாம எந்திரிச்சு ,உன்னை மாதிரியே  'ஸ் ..ஸ் 'ன்னு சத்தம் செய்யுதே   !''

பணம், திருமணத்திற்கு முன்பும்,பின்பும் :)
             ''கல்யாணத்திற்கு முன்னாலே சட்டை ,பேண்ட்டுக்கு பாக்கெட் வைக்கச் சொல்வீங்க ,இப்ப ஏன் வேண்டாங்கிறீங்க ?''
              ''பணம் பாக்கெட்டில் இருந்து  ஜாக்கெட்டுக்கு மாறிடுச்சே !''

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

36 comments:

 1. இரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. பாக்கெட் டு ஜாக்கெட் சரிதானே ஜி :)

   Delete
 2. ஒரு கிழங்குக்கு மட்டும் உருளைக் கிழங்குன்னு பெயர் வைச்சிருக்காங்க?'
  ''அதுவும் வெயிட்டை தூக்க முடியாம எந்திரிச்சு ,உன்னை மாதிரியே 'ஸ் ..ஸ் 'ன்னு சத்தம் செய்யுதே?
  நியாயமான கேள்விதான்

  ReplyDelete
  Replies
  1. கேட்பவர் கேள்வியின் நாயகனா இருப்பாரோ :)

   Delete
 3. உருளைக்கிழங்கு - "டாடி... எனக்கொரு டவுட்டு" கேள்வி!

  ReplyDelete
  Replies
  1. இத்தனை காலமாகியும் உருளைக் கிழங்குக்கு பெயர் வைக்க முடியவில்லையே :)

   Delete
 4. Replies
  1. காரணப் பெயர் ஒன்றுக்கு மட்டும்தான் பொருந்துமா :)

   Delete
 5. சோலானம் டியூபரோசம் கிழங்கென்றும் சொல்லலாமே...! சொல்லாதே யாரும் கேட்டால்...!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. கேட்டுப் பார்த்தேன் ,சோலாபூரி கிழங்கெல்லாம் இங்கே கிடைக்காது என்று சொல்லிவிட்டார்கள் :)

   Delete
 6. அந்த உருளை கிழங்கு அறிவுகூட...எனக்கு இல்லாம போச்சே....என்னா மூளை....

  ReplyDelete
  Replies
  1. இந்த அறிவு வரணும்னா உருளை சிப்சை உருண்டு உருண்டு சாப்பிடணும்:)

   Delete
 7. படிக்காமலேயே வோட் போட்டிட்டேன் திரும்படியும் வந்து படிச்சு கொமெண்ட் போடுவேன்... இது அந்த தேம்ஸ் கரைப் பாசி மேல் சத்தியம்..:)

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. #தேம்ஸ் கரைப் பாசி மேல் சத்தியம்..:)#
   கைக்கு பதிலா காலை வைத்து சத்தியம் செய்யாதீங்க ,வழுக்கிரும்,ஆபத்து :)

   Delete
  3. அதிரா ...ஏன் டெலிட் செய்தீங்க ?ஜட்டி உங்களுக்கும் ஒரு மைனஸ் போட்டுடும்னு பயம் வந்திடுச்சா :)

   நீங்க போட்ட ....'பகவான் ஜீ...
   ... போய் table வந்திருக்கு டும் டும் டும்... ஹா ஹா ஹா:) என்ன பண்ணலாம்?:) ஹையோ மீ ரொம்ப நல்ல பொண்ணு .. ஓடிடுறேன் இங்கிருந்து:)''இந்த கருத்துக்கு நான் பதில் சொல்லியே ஆகணுமே ,அதனால் ரீபிட் செய்துவிட்டேன் !
   ஜட்டி ரோசக்கார ஜட்டி போலிருக்கு ,மானங்கெட்டவனுக்கு ஜட்டி வேற என்று நேற்று நான் கேட்டதால் ,இன்று table மேல் ஏறிடுச்சே :)

   Delete
  4. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) உங்கள் பதிலையும் உடனே காணாமையால் பயத்தில டிலீட் பண்ணிட்டேன்ன்... எனக்கு மைனஸ் வோட் போட வந்தால் கைல கால்ல விழுந்து பிளஸ் ஆ போடச்சொல்லிக் கேட்டிடுவேன்:).. ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ பகவான் ஜீ:)

   Delete
  5. எத்தனை ஜட்டிகள் ,டேபிள்கள் வந்தாலும் என் பதிவுகள் நிற்கப் போவதில்லை ! உண்மையான பெயருடன் தைரியமாய் பதிவைப் பற்றி விமர்சிக்க முடியாத கோழைக்களைக் கண்டு ஏன் அஞ்சணும் :)

   Delete
  6. பகவான் ஜீ நான் என் கிட்னியை ஊஸ் பண்ணிக் காரணம் கண்டு பிடிச்சிட்டேன்ன்.. சாதாரணமாக 12 வோட்ஸ் விழுந்தால் மகுடம் சூட்டப்படுகிறது... ஆனா மைனஸ் வோட் அங்கு இருப்பின்.. அவருக்கு 15 அல்லது 16 வோட்ஸ் விழுந்தால்தான் மகுடம் கொடுக்கப்படுகிறது.. எப்பூடி என் கண்டுபிடிப்பூஊஊஊ?:).

   ///பதிவைப் பற்றி விமர்சிக்க முடியாத கோழைக்களைக் கண்டு ஏன் அஞ்சணும் :)///
   பகவான் ஜீ “எண்ணன் அழகானால் எல்லாம் அழகாகும்”:).. அனைத்தையும் ஸ்போட்டிவ்வா எடுங்கோ.. காசா பணமா? கோபம் எதுக்கு? அனைவரையும் வாழ்த்திவிட்டு.. நீங்க தொடருங்கோ.. ஹா ஹா ஹா:).

   Delete
  7. எனக்கு மகுடம் கிடைத்ததா இல்லையாவென்று தெரியவில்லை , உங்கள் கண்டுபிடிப்பு சரியா என்று நீங்கதான் சொல்லணும் , நேற்றிரவு நீங்களே செக் செய்து இருப்பீர்களே :)

   உங்க அட்வைஸ் ,பொறாமையில் மைனஸ் வோட்டு போடும் 'ஜட்டி'க்குத் தானே பொருந்தும் :)

   Delete
  8. இல்லை பகவான் ஜீ உங்களுக்கு கிடைக்கவில்லை, ஸ்ரீராமிடமிருந்து நேரடியாக எனக்குக் கிடைச்சுது சொறி பறிச்சு எடுத்தேன் ஹா ஹா ஹா. இப்போ உங்களுக்கு 16 ஆகிவிட்டது ஆனால் காலக்கேடு முடிந்துவிட்டதென நினைக்கிறேன், அதனால் என் மகுடம் தப்பித்துக்கொண்டது அப்பாடாஆஅ:)).

   //உங்க அட்வைஸ் ,பொறாமையில் மைனஸ் வோட்டு போடும் 'ஜட்டி'க்குத் தானே பொருந்தும் :)//

   இல்ல பகவான் ஜீ இது ஒன்றும் சிதம்பர ரகசியம் இல்லை, அக்கறை இருப்போர் கொஞ்சம் கூர்ந்து அவதானித்தாலே புரிந்து விடும்.

   இன்னொன்று, இங்கே மைனஸ் வோட் போடும் நபருக்கு.. நீங்க ஒன்றும் பரம விரோதியோ அல்லது எதிரியாகவோ இருக்க வாய்ப்பில்லை.. வெளிப்பார்வையில் எனக்கு அப்படி ஏதும் தெரிந்ததில்லை.. நீங்க உங்க பாட்டிலதான் போஸ்ட் போட்டுக்கொண்டிருக்கிறீங்க.. யாரையாவது தாக்கியோ அல்லது கிண்டல் அடித்தோ பதிவு போட்டால் கூட மனஸ் ஐ ஏற்றுக் கொள்ளலாம்.. உங்களுடையதில் நகைச்சுவை மட்டும்தானே, அதனால இது வெறும் செல்ல தனகல்தான் என்றே நம்புகிறேன்.. யாரோ ச்ச்ச்ச்சும்மா உங்களைச் சீண்டுகிறார்கள்... இதனால அவர்களுக்கு என்ன லாபம்.. அதனால இனிமேல் வரமாட்டினம் என்றே என் உள்மனம் சொல்லுது... இனி யாருக்கும் மைனஸ் வோட்ஸ் விழாமல் இருக்கட்டும்.. ஹப்பியா இருப்போம்.

   Delete
  9. ஹேப்பி,இன்று முதல் ஹேப்பி :)

   Delete
 8. பையன் என்னைப் போல எதையும் கேள்வி கேட்டு தெரிந்து கொள்பவன் போல
  ரேஷன் எஸ் எம் எஸ் அனுபவமில்லை
  அப்போது பம்பரம் விடலாமா என்பதே சந்தேகம்
  குக்கர் வெயிட் ரசித்தேன்
  அப்போ செல் ஃபோனை எங்கே வைக்க

  ReplyDelete
  Replies
  1. உங்ககிட்டே இருந்து நான் நிறைய தெரிஞ்சிக்க வேண்டியிருக்குமே :)
   வாங்காத பொருளையும் வாங்கியதாக sms வரும் ,இதிலும் ஊழல் :)
   ஆம்லேட் போட்டதை மறந்து விட்டீர்களே :)
   கொஞ்சம் ஓவர்தானே :)
   எதை வைத்தாலும் தாங்கும் :)

   Delete
 9. உருளை நியாயமான கேள்விதான்..:)

  /// ''ரேஷனில் வாங்கின பொருளை மட்டும் SMSல் காட்டினா போதும்னு ஏன் சொல்றீங்க ?''///

  ''ஏழு பொருள் வாங்கினதா SMS வந்திருக்கே ... சீனி மட்டும்தானே கொண்டு வந்து இருக்கீங்க ,மற்ற பொருட்களை எந்த சிறுக்கிகிட்டே கொடுத்தீங்கன்னு என் மனைவி கேட்கிறாளே !''//

  இதில் ஏதோ தப்பிருக்கு பகவான் ஜி.. சரியாப் பொருந்தவில்லை.. “வீட்டுக்கு எடுத்துப் போகும் பொருளை மட்டும் எஸ் எம் எஸ் ல காட்டினால் போதும்” எனப்போட்டிருக்கோணுமோ?:) சரியாப் புரியல்ல வசனத்தில் ஏதோ கோளாறு இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. உருளாத கிழங்கு ஏதேனும் இருக்கா :)

   வசனத்தில் தப்பில்லை ......சீனி மட்டுமே வாங்கினாலும் மற்றையப் பொருட்களும் வாங்கியதாக sms அனுப்புவார்கள் ,அதாவது நம் கணக்கில் எழுதி ஏமாற்றுகிறார்கள் :)

   Delete
 10. ஆமாம் எனக்கு கூட சந்தேகம்தான் எந்த சிறுக்கிக்கிட்ட கொடுத்தீங்க ?

  ReplyDelete
  Replies
  1. ஆகா ,எதிரி வேறெங்கும் இல்லை போலிருக்கே :)

   Delete
 11. Replies
  1. மேனேஜரின் பார்ட்டி ஐடியா அருமைதானே அய்யா :)

   Delete
 12. Replies
  1. ரசிக்கிற உங்க வோட்டு விழ மாட்டேங்குது ,லூசு போடுற மைனஸ் வோட்டு விழுதே ,இதுவும் இல்லுமினாட்டிகளின் சதியா ஜி :)

   Delete
 13. அனைத்தையும் இரசித்’தேன்’! உருளைக்கிழங்கு பற்றிய பிள்ளையின் கேள்விக்கு ஒன்று காரணப்பெயர் மற்றொன்று இடுகுறிப் பெயர் என்று சொல்ல வேண்டியதுதானே !

  ReplyDelete
  Replies
  1. காரணப்பெயருக்குக் காரணம் , உருளுவது என்றால் எல்லா கிழங்கும் தானே உருளுது எனக் கேட்கிறானே ,என் மண்டையும் உருளுது அய்யா :)

   Delete
 14. Replies
  1. குக்கர் போடும் விசில் சத்தம் இனிமைதானே :)

   Delete