18 September 2017

குத்துக் கல்லாட்டம் மனைவியிருக்க ....:)

இன்று மாலை  6.00 மணி ,தமிழ் மண நிலவரம் .....
சூடான இடுகையில் ..... 
குத்துக் கல்லாட்டம் மனைவியிருக்க ....:) 

தமிழ்மணம் மகுடத்தில் ....

கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
குத்துக் கல்லாட்டம் மனைவியிருக்க ....:) - 16/16 
Bagawanjee KA

 வாசகர் பரிந்துரையில்....

குத்துக் கல்லாட்டம் மனைவியிருக்க ....:) 
16
Bagawanjee KA

மூன்று வரிசையிலும்  அடுத்தடுத்து வர,  ஆதரவு அளித்த வலையுலக உறவுகளுக்கு ,குறிப்பாக மைனஸ் வாக்கு போடாத jattisekar,tableshankar ஆகியோருக்கும் நன்றி :) 


*ஐம்பதிலும் ஆசை வரும்  என்பது சரியா போச்சு :)
              ''உன் வீட்டுக்காரருக்கு பயந்து, நடுத்தர வயசுக்காரியை வேலைக்கு வச்சுகிட்டதும் தப்பா போச்சா ,ஏண்டி ?''

                 ''மாமனாரைக் கூட்டிகிட்டு போயிட்டாளே !''

லேடி  டென்டிஸ்ட்டைப் பார்க்கச் சொல்லும் காரணம் :)
           ''பல் வலிக்குதுன்னு சொன்னா ,மல்லிகா டாக்டரைப் பாருங்கன்னு   ஏன் சொல்றே ?''
            '' பொண்ணுன்னா  பல்லைக் காட்டிட்டு நிற்கிறது உங்க வழக்கமாச்சே !''

தன்னை மறந்து உண்மை பேசிய டாக்டர் :)
            ''டாக்டர் ,நாளைக்கு என்  அறுபதாவது பிறந்த நாள்னு சொன்னதும் , பண்ணவிருந்த ஆபரேசனை ஏன் தள்ளி வச்சிட்டீங்க ?''
           ''நல்லநாளும் அதுவுமா ...உங்க  சொந்த பந்தங்களோட  சந்தோசம் கெட்டு விடக் கூடாதுன்னுதான் !''

உப்பு போட்டு சாப்பிட்டால் ரோசம் வருமா :)                       
              ''நான் சமையலில் உப்பே போடுறதில்லைங்கிற  விஷயம்  என் வீட்டுக்காரருக்கு  தெரிஞ்சு போச்சுடி !''
             ''ரோசம் வந்து அடி பின்னிட்டாரா ?''
             ''ஊஹும் ,அவரே சமைக்க ஆரம்பித்து விட்டார் !''

USல் வேலை செய்தால் லீவு உடனே கிடைக்குமா :)
             ''கொள்ளி வைக்க வேண்டிய ஒரே பையன் ,லீவு கிடைச்சு வர 'மார்ச் 'மாதம் ஆகும் ...அதுவரைக்கும் அப்பன் பாடியை எங்கே வைக்கிறது ?''
             ''மார்ச் 'சுவரியிலேதான் !''

குத்துக் கல்லாட்டம்  மனைவியிருக்க ....:)
         ''என்னங்க ,குத்துக் கல்லாட்டம் நான் இருக்கேன் ,அங்கே என்னா பார்வை வேண்டிக்கிடக்கு ?''
          ''சிலையை ரசிக்கிறேன் ,குத்துக்கல்லை என்ன பண்றது ?''
டொனேசன் கொடுத்துப் படிப்பதும் மூலதனம்தான் :)
பல் சொத்தையை சிமெண்ட் பூசி அடைக்கலாமென
நமக்கு புரியும்படி சொல்லி ...
அதற்கு ஐநூறு ரூபாய் செலவாகும் 
எனக் கூறும் மருத்துவரிடம் ...
இதுக்கு ஒரு டீஸ்பூன் அளவு சிமெண்ட் கூட தேவைப் படாதேயென சொல்லமுடியாது ...
ஐநூறை அவர் கேட்கவில்லை ,அவர்மூலமாய் 
நன்கொடை வசூல் பண்ணும் 
மருத்துவக் கல்லூரி நிறுவனர் கேட்கிறார் !

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

36 comments:

 1. ரசித்தேன், அனைத்தையும்.

  ReplyDelete
  Replies
  1. பூக்கூடை ரசிக்க வைக்குதா :)

   Delete
 2. நல்ல வேளை... அவளைத்தானே கூட்டிட்டு போனாரு...! போனவன் போனாண்டி... வந்தாலும் வருவாண்டி...!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. வரவே வேணாண்டின்னு எல்லோரும் சொல்றாங்களே :)

   Delete
 3. மாமனார் தொல்லை விட்டுச்சு. இனி வேலைக்காரியும் தேவையில்லை,

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ,மாமனாரின் இன்ப வெறி படக் கதை ஆகாமல் போனதே :)

   Delete
 4. Replies
  1. சொத்தைப் பல்லுக்கு சொத்தையே செலவழிக்க வேண்டியிருப்பதையுமா :)

   Delete
 5. குத்துக்கல்லு
  சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வேலி கட்ட உதவ மாட்டேங்குதே :)

   Delete
 6. லேடி டென்டிஸ்ட்டைப் பார்க்கச் சொல்லும் காரணம் :)
  தன்னை மறந்து உண்மை பேசிய டாக்டர்
  மல்லிகை டாக்டர் நிஜத்தில் டாக்டர் தானோ ? ஜீ மேல சந்தேகமா இருக்கு !!!!

  ReplyDelete
  Replies
  1. ஜாக்கிரதை ,பல்லைப் பிடுங்கிடப் போறாங்க :)

   Delete
 7. ரசித்தோம் அனைத்தையும் ஜி

  ReplyDelete
  Replies
  1. ரோஷக்கார சகலைதானே ஜி :)

   Delete
 8. ///குத்துக் கல்லாட்டம் மனைவியிருக்க ....:)//

  karrrrrrrr அதென்ன மனைவியை குத்துக் கல்லுக்கு ஒப்பிடுகிறார்கள் எப்பவுமே... அவ்ளோ கல்லாவா இருப்பாங்க:).

  ReplyDelete
  Replies
  1. ஒரு சில இடங்களில் குத்துக் கல்லை சாமின்னு கும்பிடுறாங்களே,வீட்டு மாமியையும் அப்படி நினைக்கணும்னு சொல்றாங்களோ :)

   Delete
 9. //''மாமனாரைக் கூட்டிகிட்டு போயிட்டாளே !''//

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கணவன் தப்பிட்டார் எல்லோ:))... இப்பூடி எப்பவுமே பொஸிடிவ்வா மாத்தி யோசிக்கோணும் அதிராவைப்போல:))..

  உப்புச் சாப்பிட்டால்தானே ரோஓஓஓஓஒசம் வரும்:) இங்கு சாப்பிடாமலே வந்திட்டுதேஏஏஏஎ:).. அப்போ இனிப் பழமொழியை மாத்திடுவோம்ம்:)

  ReplyDelete
  Replies
  1. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்து இருப்பான்னு தானே கிழவியை வேலைக்கு வைத்தது :)

   உப்பு சாப்பிட ரோஷப்பட்ட முதல் ஆள் ,இவராத்தான் இருப்பார் :

   Delete
 10. // ''சிலையை ரசிக்கிறேன்//
  ஹா ஹா ஹா பாவம் அவர் தாராளமா ரசிச்சிட்டுப் போகட்டுமே சிலைதானே:) அந்த சுகந்திரம்கூடக் கொடுக்காட்டில்ல்..???:))

  ReplyDelete
  Replies
  1. தங்கச் சிலைபோல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளேன்னு பாடாமல் போனால் சரிதான் :)

   Delete
 11. நல்ல வேளை நடுத்தரவயதுக்காரி கணவனை கூட்டிக் கொண்டுபோகவில்லை ஐம்பதில் ஆண்களுக்கு மட்டுமா ஆசை
  டெண்டிஸ்ட் யாராயிருந்தாலும் பல்லைக் காட்டித்தானே ஆகவேண்டும்
  டாக்டரைப் பாராட்டுவோம்
  ஹை இது நல்ல டெக்னிக் ஆக இருக்கே
  சிலை ரசிக்கவே அது கடவுள் சிலையானாலும்
  உங்கள் மூலம் கடன் அடைக்கப்படுகிறது

  ReplyDelete
  Replies
  1. கூப்பிட்டு பாராட்டு தெரிவித்து விடலாமா :)
   ஆனால் ,ஆணுக்கு எண்பதிலும் விட்ட மாதிரி இல்லையே :)
   ஆனால் இவர் சும்மாவே காட்டுவாராம் :)
   இவ்வளவு தன்னம்பிக்கை இருக்கிறதே என்பதாலா :)
   டெக்னிக்கா ,சதின்னு சொல்லுங்க :)
   கும்பிடவில்லை என்றாலும் ரசிக்கலாம் :)
   ஒரே வருடத்தில் கடனை முடித்திருப்பாரே :)

   Delete
 12. அனைத்தும் நன்று பாராட்டுகள் த.ம. வாக்குடன்

  ReplyDelete
  Replies
  1. 'மார்ச்'சுவரியும் அருமைதானா :)

   Delete
 13. கொடுத்து வச்ச பெரிசு.....ம்ம்ம்....

  ReplyDelete
  Replies
  1. விடுதலை அடைந்து விட்டாரா :)

   Delete
 14. உப்பு அதிகம் போட்டால் ‘பிரஷர்’ கூடிவிடும் என்பதால் போட ‘மறந்திருப்பாரோ’ அல்லது கணவரை சமைக்க வைக்க இதுவும் ஒரு வழியோ?

  ReplyDelete
  Replies
  1. இரண்டாவதுதான் சரின்னு படுது:)

   Delete

 15. வேலைக்காரியை வைத்ததால் அவள் மாமனாரை கூப்பீட்டு போயிட்டார் என்றால் அடுத்தாக ஒரு வேலைக்காரணை வைத்தால் அவன் மாமியாரை கூப்பிட்டு சென்றுவிட வாய்ப்புக்கள் இருக்கிறது ஒரு வேளை மாமியார் போகவில்லை கணவனை விட்டுவிட்டு மனைவி போக வாய்ப்புகளும் உள்ளதே....TM 14

  ReplyDelete
  Replies
  1. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்னு சொல்றது, இவங்களுக்குத்தான் பொருந்துமோ :)

   Delete
 16. Replies
  1. மல்லிகா டாக்டரை மனைவி பார்க்கச் சொல்வதுமா :)

   Delete
 17. ஆங்ங்ங் பகவான் ஜீ இப்பூடிப் பாய்ஞ்சு பறிச்சிட்டீங்க என் மகுடத்தை:) கர்:) இப்பூடி ஆகுமெனத் தெரிஞ்சிருந்தால் லொக்கரில வச்சுப் பூட்டி, கீயை தேம்ஸ் நடுவில் எறிஞ்சிருப்பேனே... ஹா ஹா ஹா.. இருப்பினும் வாழ்த்துக்கள்.. இப்போ ஹப்பிதானே நீங்க.

  நான் டக்குப் பக்கென, என் தலையில் மகுடம் இருந்தபோது ஸ்கிறீன் சொட் எடுத்திட்டனே:).. பூஸோ கொக்கோ:).

  ReplyDelete
  Replies
  1. இப்போ மகுடத்துக்கு ரொம்ப கிராக்கியா இருக்கே ,என்ன பண்றது :)

   ஆமா .பெரிய பிரித்தானியா ராணி மகுடம், கோஹினூர் வைரம் பதிச்சது ..பைசாவுக்கு பிரயோசனம் இல்லாதது எதுக்குன்னு கேட்கிறா என் இல்லத்தரசி :)

   Delete
 18. தங்கள் வெற்றிக்குப் பராட்டுகள் சகோதரா.
  ஆக்கம் முழுவதும் இரசித்தேன்.
  தமிழ் மணம் 18

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி :)

   Delete