19 September 2017

*சீட்டுப் படமே சிம்பாலிக்கா சொல்லுதே :)

இன்று காலை 8.00மணி ,தமிழ் மண நிலவரம் .....
சூடான இடுகையில் ....

தமிழ்மணம் மகுடத்தில்.... 
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை

வாசகர் பரிந்துரையில்.....

மூன்று வரிசையிலும்  ஜோக்காளி பதிவுகள் அடுத்தடுத்து வர,  ஆதரவு அளித்த வலையுலக உறவுகளுக்கு  நன்றி :)             
             
*சீட்டுப் படமே சிம்பாலிக்கா சொல்லுதே  :)
               ''சீட்டாட்டத்தை  சூதாட்டம்னு ஏன் சொல்றாங்க ?'' 
              ''இதுக்கு அடிமையானவனின் 'டயமன்ட் ' எல்லாம் போகுமாம் ,போன துக்கத்தில்  'ஹார்ட் 'வலிக்குமாம் ,வலியினால் இறந்தவனைப் புதைக்க  மண்ணை  'ஸ்பேட் 'டினால்  குழி  தோண்ட வேண்டி வருமாம் , தோண்டிய குழியின் மேல் பிரண்டையை நட்டால் முளைக்கும் 'கிளாவர் '(இலை) சீக்கிரமே தழைத்து வளருமாம் !''

நொந்து நூடுல்ஸ் ஆனால்,நூடுல்ஸ் ஸ்டால் போடலாமோ:)      
                   ''புத்தகத் திருவிழாவில் ,அந்த பதிப்பாளர் போட்ட புத்தகம்விற்கலைன்னு எப்படி சொல்றே ?''

           ''அடுத்த வருடம் புத்தக ஸ்டாலுக்கு பதில் டெல்லி அப்பள ஸ்டால் போடப் போறேன்னு சொல்றாரே !''

எப்பவுமே  துணை வருவாளா துணைவி  :)
          ''உங்க வீ ட்டுக்காரருக்கு வர்ற சனிக் கிழமை ஆபரேஷன் பண்ணலாம்னா , ஏன் வேண்டாம்னு சொல்றீங்க ?''
         ''சனிப் பிணம் தனியாக போகாதுன்னு சொல்றாங்களே ,டாக்டர் !''

குற்றவாளியை விட மோசமானவன் தப்பிக்க விடுபவன் !
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ...
ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது 
இது நீதியின் அடிப்படை அம்சம் !
காவல் துறையில் உள்ள கறுப்பாடுகள் இதை சுயநலத்திற்காக வேறுவிதமாக புரிந்து கொண்டு செயல் படுவார்களோ ?
ஆயிரம் குற்றவாளிகள் மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் ...
மாட்டிக் கொண்ட ஒரு குற்றவாளியை தப்பிக்க வைத்தால் என்ன குடிமுழுகியா போய்விடும் என நினைத்து  ...
கிரிமினல்களையும் ,பயங்கரவாதிகளையும்  தப்ப விடுகிறார்களோ !

உடம்பிலே  துணியின்றி குளிக்கும்  துணிச்சல் யாருக்கு வரும் :)           
             ''அருவியிலே குளிக்காம , எதுக்கு அந்த போர்ட்டையே   பார்த்துட்டு நிற்கிறீங்க ?''
              ''ஜட்டியுடன்  யாரும்  குளிக்கக் கூடாதுன்னு போட்டுருக்கு ,அதுவுமில்லாம  எப்படின்னுதான்  யோசிக்கிறேன் !'' 

'சின்ன 'மாப்பிள்ளை(யும்) ஆகத் துடிக்கும் 'பெரிய 'மாப்பிள்ளை  :)
                ''என் புருஷன் மேலே ஒரு கண்ணாவே இருன்னு சொல்றீங்களே ,ஏன்ப்பா?''
               ''மூத்த மாப்பிள்ளையான  உங்களுக்கே செஞ்சுகிட்டே இருந்தா ,வரப் போற சின்ன மாப்பிள்ளைக்கு என்ன செய்வேன்னு கேட்டதுக்கு ..'அதுக்கு அவசியமே இருக்காது மாமா 'ன்னு சொல்றாரே !''

மாமியார் ,மருமகளுக்கும் உள்ள ஒரே பொருத்தம் :)
            "என்னதான் சண்டை போட்டாலும் மாமியார் மருமகள் ,ஒரு விஷயத்திலே பொருத்தமா  இருக்காங்களா ,எதிலே?"
            "புருசன்களை திட்டுவதில் தான் !" 

காதலிக்க நாயா அலையலாமா :)
           ''தினமும் நாயைக் கூட்டிக்கிட்டு வாக்கிங் வர்ற பொண்ணைக்  காதலிக்க, நீயும் ஒரு நாயோட போனீயே ,காதல் வந்ததா ?''
          ''ஓ ,வந்ததே ...ரெண்டு நாய்ங்களுக்கும் !''
எல்லா நாக்கும் விரும்பும் ஒரே சுவை எதுவும் உண்டா :)
சிங்கம் சைவம் சாப்பிட்டதா  சரித்திரம் இல்லை ...
யானை அசைவம் சாப்பிட்டதா பூகோளமும் இல்லை ...
ஆனா ,மனுஷன் எதைத்தான் சாப்பிடுவாங்கிறதுக்கு கணக்கே இல்லை !

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

38 comments:

 1. Replies
  1. ஒரு நாய் இங்கேயிருக்கு ,இன்னொரு நாய் எங்கேன்னு கேட்காம போனீங்களே ,நன்றி ஜி :)

   Delete
 2. பிரண்டை இலையைப் பார்க்க வேண்டுமே?

  தமிழ்நாட்டில் புத்தக பதிப்பாளர்கள் நிலைமை அப்பளக் கச்சேரிக்கு போக வேண்டிய நிலைமைதான். சிம்பாலிக்காகவே சொன்னீர்கள். ஆனால் ஒவ்வொரு நூலகத்திலும் ‘ஜால்ரா’ அடித்தவர்கள் புத்தகங்கள் மட்டும் எப்படியோ வந்து விடுகின்றன.

  ReplyDelete
  Replies
  1. நேற்றுதான், நீங்க சேம்பு இலையை தேடி எடுத்து போட்டிருந்தீங்களே,அதுக்கு பக்கத்திலே தேடி பாருங்க ,கிடைக்கும் :)

   பதிவர்கள் சில பேர் பதிப்பாளர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்களே ,போதாதா :)

   Delete
 3. கடைசியில ஜோக்கரை அம்போன்னு சும்மா விட்டுட்டீங்களே... தர்மம் தலைகாக்குமுன்னு சொன்னது தப்பாப்போச்சே... தர்மத்தைச் சூது கவ்வுங்கிறது இதுதானோ...?!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. ஜோக்கர் எங்கே வேண்டுமானாலும் சேர்ந்து பிழைத்துக் கொள்வார் ,கவலையை விடுங்க :)

   Delete
 4. நாய்க்காவது காதல் வந்ததே...

  ReplyDelete
  Replies
  1. காதல் வந்தாலும் இந்த நாயிங்க பீச் ,மால் ,சினிமான்னு அலையாதுங்க :)

   Delete
 5. ரசித்தேன் ஜி அனைத்தையும்.

  ReplyDelete
  Replies
  1. சீட்டுப் படமே சிம்பல் சரிதானே ஜி :)

   Delete
 6. Replies
  1. மனுஷன் எதைத்தான் சாப்பிடுவாங்கிறதுக்கு கணக்கே இல்லை என்பது உண்மைதானே :)

   Delete
 7. Replies
  1. மாமியார் ,மருமகளுக்கும் உள்ள ஒரே பொருத்தத்தால் உங்களுக்கு வருத்தம் ஏதும் இல்லையே :)

   Delete
 8. Replies
  1. நன்று ,காதலிக்க நாயா அலையலாமா என்பதுதானே அய்யா :)

   Delete
 9. *சீட்டுப் படமே சிம்பாலிக்கா சொல்லுதே :)
  சீட்டுக்கட்டு ராஜா ரா ரா ராஜா .... என்னை திரும்பி பாரு லேசா லே லே லேசா ஊட்டிமலை ரோஜா ரோஜா ...
  லாட்டரி சீட்டு ஒழிக்கப்பட்டது , தமிழ் நாட்டு மக்களுக்கு சுபிட்சம் என்று நினைத்தோம் கூடவே மதுவையும் சீட்டுக்கட்டையும் அனுமதித்து மீண்டும் ஏழைமக்களை சவக்குழியில் தள்ளிவிட்டது அரசாங்கம்

  ReplyDelete
  Replies
  1. லாட்டரியால் ,சிந்தனை பாதிக்கப்படவில்லை ,சிந்திக்ககூடாது என்று மதுவை கொண்டுவந்து விட்டார்களே :)

   Delete
 10. Replies
  1. இப்படி சிம்பிளா சொல்லிட்டு ,நீங்க fb லேயே இருப்பது சரியில்லை :)

   Delete
 11. ///தமிழ்மணம் மகுடத்தில்....
  கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை///

  அதிரடியாக தொடர்ந்து மகுடம் தாங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் பகவான் ஜீ..

  இப்போ கண்பட்டதோ நெஞ்சம் புண்பட்டதோ... எனக்கேதும் சொல்லத்தெரியவில்லை:(.

  சனிப்பிணம் தனியே போகாது என்பது உண்மைதான் பகவான் ஜீ:) அதனால்தான் நான் சனிக்கிழமைகளில் தேம்ஸ்ல குதிப்பதில்லை:)...

  நாய்களுக்குள் ஆரம்பித்த காதல் மனிசரில் போய் முடியும் என நம்புகிறேன்..:).

  ReplyDelete
  Replies
  1. கண் வைத்தவன் வயிறு எரிந்து சாகணும் என்பதற்குதானே தமிழ்மண நிலவரம் போட்டேன் ,அது வேலை செய்துள்ளது தெரியுதே ,மைனஸ் வோட்டால் :)

   மற்ற நாட்களில் குதித்தாலும் காப்பாற்ற யாரும் வரமாட்டாங்களே :)

   அதைதான் அவனும் எதிர்பார்க்கிறான் :)

   Delete
 12. Replies
  1. எதை ரசித்தோம் என்று ஒரு நாலு வரியில் சொல்லலாமே ஜி :)

   Delete
 13. மூன்று பகுதிகளிலும்ஜோக்காளியின் பதிவுகள். ஜோக்காளிமனம் மக்ழ்ச்சியில் இருக்குமே
  நேர்படச் சொன்னாலேயே புரியாதவர்களுக்கு சிம்பாலிக்கா சொன்னாலா புரியும்
  நூடில்ஸ் ஸ்டாலைவிட அப்பள ஸ்டால் வசூல் அதிகமோ
  குற்றம் செய்பவரை விட அதற்கு உதவுபவரே முதலில் தண்டிக்கப் பட வேண்டும்
  அப்படித்தானே அர்த்தம் வருகிறது
  வீட்டின் ஒரே மாப்பிள்ளையாக ஆசை
  உண்டே உங்கள் நகைச்சுவை

  ReplyDelete
  Replies
  1. எனக்கு மகிழ்ச்சியே , ஐயோ ஐயோன்னு மைனஸ் வோட்டு போடுபவரின் வயிறெரிவது உங்களுக்குத் தெரியுமா :)
   யோசித்துப் பார்த்தல் புரியாமலா போகும் :)
   இரண்டையும் சேர்த்தே ஸ்டால் வைத்தால் போச்சு :)
   எய்தவன் முதலில் தண்டிக்கப் படணும்:)
   நேரடி அர்த்தம் அதுதான் :)
   ஒரே பெண் என்றால் அதில் தப்பில்லை :)
   நான் மூக்கு வேர்ப்பதைப் பற்றி சொன்னால் ,நீங்கள் 'ஜட்டிசேகரின்' கண்ணு சிவப்பதைப் பற்றி சொல்கிறீர்கள் :)

   Delete
 14. த.ம இருமுறை வாக்களித்தேன். ஏற்கனவே வாக்களித்துள்ளதாக காட்டுகிறது. அனைத்தும் அருமை

  ReplyDelete
  Replies
  1. நேற்று இப்படித்தான் புலவர் அய்யா வோட்டு விழவில்லை ,இன்று உங்கள் வோட்டு ,பிறகு போட்டு பாருங்க ஜி :)

   Delete
 15. அனைத்தும் அருமை அருமை

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க ராஜ்வேல் ,கொஞ்ச நாளா நம்ம பேட்டைப் பக்கமே வரவில்லையே :)

   Delete
 16. அய்யா்..தொலைக்ரகட்சியில வர்ர பி்ரேக் செய்தி மாதிரி வெளியிட்ட தாங்கள்..தொடர்ந்து மைனஸ் ஓட்டு போடும் அந்த கருப்பு ஆட்டைப்பற்றி...பிரேக் செய்தியில் போடாததது ஏனோ...????அங்கேயும் சென்சாரா..???

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் தொடர்ந்து ஆதரவு தரும் நிலையில் ,கருப்பாடு ஜோக்காளியை என்ன செய்து விட முடியும் என்பதால் ,பிரேக் செய்தி போடும் அவசியம் வரவில்லை :)

   Delete
 17. ‘ஜட்டியுடன் யாரும் குளிக்கக் கூடாது’ என்ற நகைச்சுவைத் துணுக்கைப் பார்க்கும்போது, கர்நாடக சட்டசபைக்கு நிஜலிங்கப்பா ஜட்டியுடன் வந்தார் என்ற செய்தி தலைப்பு நினைவுக்கு வருகிறது.(அப்போதைய முதல்வர் திரு நிஜலிங்கப்பா திரு B.D. ஜட்டி என்ற அமைச்சருடன் வந்ததைத்தான் நமது நாளேடுகள் அவ்வாறு வெளியிட்டிருந்தன. பின்னாட்களில் திரு ஜட்டி புதுவையின் துணை நிலை ஆளுநராக இருந்தார்,)
  நகைச்சுவைத் துணுக்குகளை இரசித்தேன். பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளை ,அவரோட இனிசியலையும் சேர்த்து பீடி ,ஜட்டியுடன் வந்தார்னு சொல்லாமல் போனார்களே :)

   Delete
 18. Replies
  1. வாழ்த்துக்கு நன்றி :)

   Delete
 19. வாக்குப் பெட்டியில் வாக்கு பதிவதில்லை. ஏதோ எதிர்க்கட்சிகாரர்களின் திட்டமிட்ட சதியாய் இருக்குமோ ?

  ReplyDelete
  Replies
  1. யாரோ ஒரு பொறாமைக் காரன்/காரி தினசரி மைனஸ் வோட் போடுகிறான்/ள் ,உங்கள் வாக்கும் விழவில்லை என்கிறீர்கள் !நண்பர்களாகிய நீங்கள்தான் இது நியாயமில்லை என்பதை உணர்த்த வேண்டும் ஜி :)

   Delete