20 September 2017

* மனைவிக்கு சைனஸ் பிரச்சினை என்பதால் இப்படியா : )

              ''அந்த தரகரிடம் பொண்ணு பார்க்கச் சொல்லாதேன்னு ஏன் சொல்றீங்க ?''
            ''கிளிமூக்குன்னு சொல்லி சரியான சளிமூக்கை எனக்கு கட்டி வச்சிட்டாரே !''

அப்பனும், மகனும் கணக்கிலே வீக் :)     
             ''எனக்கு வீட்டு வேலை  நிறையாயிருக்கு,, உன் ஹோம் வொர்க்கை உங்கப்பாகிட்டே கொடு !'' 

             ''அவர் தப்பு தப்பா செய்வார் ,உன் ஹோம் வொர்க்கை அவர்கிட்டே கொடுத்துட்டு ,என் ஹோம் வொர்க்கை நீ செய்ஞ்சு கொடு !''                

கை நீட்டி ... வாங்கலாம் ,அடிக்கக் கூடாது :)           
                 ''நீ  லஞ்சம்  வாங்கிறதை உன் மனைவிகூட கமெண்ட் அடிக்கிறாளா ,எப்படி ?''
                 ''கை நீட்டுற வேலையை ஆபீசோட வச்சுக்குங்க ,என் கிட்டே வேணாங்கிறா !''

பைக் பில்லியன் காதலி, பில்லியனர் மனைவியாகப் போறாளோ :)
                  ''  உன் கூட  பைக் பில்லியனில் ,  ஒட்டி  உட்கார்ந்துட்டு  திரிஞ்ச பொண்ணை  இப்போ காணலியே ?''
                    ''உண்மையிலேயே முதுகிலே குத்திவிட்டு ,இன்னொருத்தன் கூட ஓடிப் போயிட்டாளே !''
பாவம் ,தாய்ப் பாசம் என்ன செய்யுமோ :)
             ''என்னங்க, ஓடிப்போன நம்ம பொண்ணு புது  தாலிக்கயிறும் கழுத்துமா வாசல்லே வந்து நிக்கிறா !''
             ''உள்ளே வந்தா , தூக்கு  கயிறும் கழுத்துமாத்தான் என்னை பார்க்க முடியும்னு சொல்லி அனுப்பிடு !''

ஓட்டுனர் வண்டியை மட்டும் ஓட்டவில்லை :)
பிரேக் போட்டால் லாரி நிற்கிறதோ ,போய் நிற்கிறதோ  ...
எதிரே பேய் நிற்பதாகவே நினைக்கிறார்கள் ஓட்டுனர்கள் !
எனவேதான் கறுப்புக்கயிறு ,வேப்பிலைக் கொத்து ,எலுமிச்சம்பழம் வண்டிகளில் தொங்குகிறது !

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

32 comments:

 1. ஆங்ங்ங் மீதான் இன்று 1ஸ்ட்டூஊஊ:) பகவான் ஜீ இப்போ பழைய நிலைமைக்குத் திரும்பி வருவதுபோல இருக்கு போஸ்ட் போடுவது...

  ஹா ஹா ஹா ஒபிஷில் கை நீட்டுவதைப்போல வீட்டிலயும் நீட்டினால் எதுக்குப் பிரச்சனை வருது?:) கையை மாறி நீட்டினால்தானே பிரச்சனையே:)..

  ஓ.. எலுமிச்சைக்குக் காரணம் கண்டுபிடித்த பகவான் ஜீ க்கு, ஒரு பி எம் டபிள்யூ கார் அனுப்பி வைக்கப்படுகிறது:).

  ReplyDelete
  Replies
  1. #திரும்பி வருவதுபோல இருக்கு#
   நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டுமென்று எதிரிதான் தீர்மானிக்கிறான் என்பார்கள் ,என் ஆயுதம் இதுதான் ..உங்களுக்கு புரிந்து இருக்குமே :)

   எப்படி நீட்டினாலும் தப்புதானே :)

   பி எம் டபிள்யூ வேண்டாம் ,audi கார் அனுப்புங்க :)

   Delete
 2. Replies
  1. உங்களின் ப்ளஸ் வோட்டிற்கு நன்றி ,pakkilock என்ற பெயரில் மைனஸ் வோட் போட்டிருக்கும் பக்கியின் மனநலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், ஜி :)

   Delete
 3. அப்பாக்கள் ஹோம்வேக் சொல்லிக்கொடுப்பதில் எப்போதுமே வீக் தானோ?

  ReplyDelete
  Replies
  1. வீட்டில் இருக்கும் அம்மாக்கள் செய்வதால் அது, ஹோம்ஒர்க் என்றாகி விட்டதோ:)

   Delete
 4. Replies
  1. கிளி மூக்கையும்தானே ஜி :)

   Delete
 5. Replies
  1. வாத்தியார் உங்களுக்குத் தெரிந்து இருக்குமே ,ஹோம் ஒர்க் சரியாக செய்வார்கள் என்று :)

   Delete
 6. மூக்குன்னா சளி இருக்கத்தானே செய்யும்... இதுக்குப் போயி... மூக்கணா கயிறு போட்டாச்சில்ல...இனி கிலிதான்...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. இதுக்குத்தான் தான் பெற்ற கஷ்டம் வேறு யாரும் படக் கூடாதுன்னுதான் வேறு தரகரைப் பார்க்கச் சொல்கிறாரே :)

   Delete
 7. அந்த தரகர் அட்ரஸ் ப்ளீஸ்....

  ReplyDelete
  Replies
  1. ஒரு தரகர் என்றால் அட்ரஸ் தரலாம் ,நாட்டிலே பாதி தரகர்கள் இப்படித்தானே இருக்கிறார்கள் :)

   Delete
 8. எப்பயுமா சளி இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. இல்லாட்டியும் ,உங்களை கட்டிக்கிட்டு என்ன சுகத்தைக் கண்டேன்னு மூக்கைச் சிந்தத்தானே செய்கிறார்கள் :)

   Delete
 9. Replies
  1. தாய்ப் பாசம் என்பதில் ப் வருமா ,இல்லையா ..தெளிவு படுத்துங்கள் அய்யா :)

   Delete
 10. வாக்குகள் ஏன் பதிவதி்ல்லை சரி பார்க்கவும் அனைத்தும் ரசி்த்தேன்

  ReplyDelete
  Replies
  1. வழக்கமான வழியில் தவிர வேறு வழியில் வோட்டு போட்டுப் பாருங்க ஜி ,எதிரிகள் சதியான்னு தெரிந்து போகும் :)

   Delete
 11. Replies
  1. பேய் ஓட்டும் ஓட்டுனர்களை ரசீத்தீர்களா ஜி :)

   Delete
 12. Replies
  1. இனிமேல் கிளி மூக்கு என்றால் உங்களுக்கு எது ஞாபகம் வரும் அய்யா :)

   Delete
 13. மைனஸ் ஓட்டு போட்ட பக்கி யாருன்னு தெரிஞ்சாதானே..அந்த பக்கியின் மனநிலையை அறிய முடியும்...தலைவரு சொதப்பலா இருக்கோ....????????ஃ

  ReplyDelete
  Replies
  1. மனநிலை எப்படின்னு இனிமேலா தெரிஞ்சிக்கணும்,மைனஸ் வோட் போடுவதில் இருந்தே தெரியுதே அது மெண்டல் என்று :)

   Delete
 14. கண்டு போட்டு விட்டேன் மைனஸ் ஓட்டு போட்டவர் கிளிமூக்கு அரக்கன்.....

  ReplyDelete
  Replies
  1. கிளிமூக்கு அரக்கியாகூட இருக்கலாமே :)

   Delete
 15. வணக்கம் ஜி !

  ஒரு கி ச வானதர்க்கா இம்புட்டு அக்கப்போரு ஜி

  ஆமா பின்னால வச்சிட்டு ஒட்டினாத்தானே முதுகில குத்துவாங்க முன்னால வச்சிட்டு ஓடினா.....???

  தங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது நன்றி

  ReplyDelete
  Replies
  1. அவசரத்துக்கு பிக்கப் ஆகலைன்னா அக்கப்போர்தானே :)

   பில்லியனில் உள்ள சுகம் முன்னாடி வராதே :)

   தங்களின் வோட்டு ஒரு மெண்டலுக்கு ஆப்பு வைத்து விட்டது ,நன்றி :)

   Delete
 16. எல்லா விவரமும் தரகருக்குத் தெர்ரிந்திருக்க வழியில்லையே
  அப்பாவைப் போல் பிள்ளையா
  ஆஃபீசில் வாங்கியதை கை நீட்டாமல் மனைவிக்குக் கொடுக்க முடியுமா
  பைக்குக்கு பதில் கார் கிடைத்திருக்குமோ
  எத்தனை நாட்களுக்கு இம்மாதிரி பயமுறுத்தல்கள்
  ஜட்டி சேகர் என்று மைனஸ் வோட் போட்டவர் இப்போதுபெயரை மாற்றி பக்கி லாக் ஆகிவிட்டாரா இல்லை இது வேறு ஒருவரா

  ReplyDelete
  Replies
  1. தெரிந்தே இருந்தாலும் சொல்ல மாட்டாரே :)
   தப்பாமல் பொறக்கும்னு சும்மாவா சொன்னாங்க:)
   கொடுக்கவில்லை என்றால்தான் விட்டு விடுவார்களா :)
   இல்லையென்றால் விட்டுட்டு போக வாய்ப்பில்லையே :)
   வாயும் வயிறுமா வந்தால் பாசம் பொத்துக் கொண்டு வந்திடும் :)
   இவ்வளவு கெட்ட எண்ணம் இருவர் இருக்க வாய்ப்பில்லை ,ஒருவரே விதவிதமான பெயர்களில் மைனஸ் வாக்கு போடுகிறார் ,இதிலென்ன அவருக்கு அற்ப சந்தோசம் கிடைக்கிறதோ ;)

   Delete