21 September 2017

*டைவர்ஸ் காரணம் 'இது'ன்னா கோர்ட்டில் நிற்குமா :)

             '' ஏம்மா ,உங்க உடம்பு தேறணுங்கிறதுக்குத் தானே சமையல் செய்பவரை மாத்துங்கன்னு சொல்றேன் ,ஏன் யோசிக்கிறீங்க ?''
              '' இதுக்காக புருஷனை டைவர்ஸ் செய்ய  முடியாதே ,டாக்டர் !''

நுணல் மட்டுமா வாயால் கெடும் :)                
       ''அந்த டாக்டர் ,போர்டு வாசகத்தால்  மாட்டிக்கிட்டாரா ,ஏன் ?''

        ''இங்கு தேர்தல் ஜுரத்துக்கு ஊசி போடப்படும்னு எழுதப் பட்டிருந்ததே  !'' 

50/50 தான் தேறும் போலிருக்கு !            
           ''நர்ஸ் , CCU வார்டில் இடமிருக்கா ,இன்னிக்கு நாலு மேஜர் ஆப்பரேசன் இருக்கே !''
            ''தேவையான அளவுக்கு ரெண்டு பெட் இருக்கு டாக்டர் ''
            ''மீதி ரெண்டு பேருக்கு ?''
            ''மார்ச்சுவரியில் இடம் இருக்கே !''

'ஷக்க லக்க 'பேபியை லவ் பண்ணத் தோணலே :)
        ''ஷக்க லக்க பேபின்னு பாடி, ஒரு ஃபிகரை லவ் பண்ணியே ,அதை ஏன் கை கழுவிட்டே ?''
        ''அது என் அம்மாவோட சக்களத்தி பேபின்னு ,என் அப்பா ரகசியமா சொல்லிட்டாரே !''

எழுத்தை மட்டும் ஆளத் தெரிந்தால் போதுமா :)
           ''அவர் எழுதின 'தம்பதிகளின் ரொமான்ஸ் ரகசியங்கள் ' புத்தகம் செம சேல்ஸ் ஆகுதே ,ஆனாலும்  ஏன்  சோகமா இருக்கார் ?''
           ''அவர் மனைவியிடம் இருந்து டைவர்ஸ் நோட்டீஸ்  வந்திருக்காமே !''

மனைவி இப்படியும் கட்டிப் பிடிக்கலாம் ,ஜாக்கிரதை :)
மனைவிமார்கள் ...
கணவனின் கொடுமை தாங்க முடியாமல் 
கெரசினை ஊற்றிக் கொண்டு தற்கொலை 
செய்துக் கொண்டதெல்லாம் அந்தக் காலம் !
இப்பொழுது எல்லாம் ...
எரியும் உடம்புடன் கணவனை கட்டிப் பிடித்து
கொடுமைக்கு முடிவு கட்டி விடுகிறார்கள் !

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

34 comments:

 1. ஆவ்வ்வ்வ் மீ லாண்டட்ட்.. ஷகலக பேபி எண்டால் இதுதானா ஹா ஹா ஹா:)..
  சமையல்காரரை எப்பூடி மாத்துவது?:) கரீட்டு:)..

  ///எழுத்தை மட்டும் ஆளத் தெரிந்தால் போதுமா :)
  ''அவர் எழுதின 'தம்பதிகளின் ரொமான்ஸ் ரகசியங்கள் ' புத்தகம் செம சேல்ஸ் ஆகுதே ,ஆனாலும் ஏன் சோகமா இருக்கார் ?''//

  ஊருக்குபதேசம் உனக்கல்லடி மகளே!!:).

  ReplyDelete
  Replies
  1. வேறென்ன அர்த்தம் ஷகலக என்றால் :)

   தாலி கட்டிய புருஷனுக்கு மரியாதை வேண்டாமா :)

   #ஊருக்குபதேசம் உனக்கல்லடி மகளே!!:).#
   அதென்ன மகளே ?மகனேன்னு போட்டால் ஆகாதோ ,இதுலுமா ஆண் ஆதிக்கம் :)

   Delete
  2. அதானே?:) மகன்களை வீட்டில் அடக்கி வைக்க முடியாதெல்லோ.. அதனால இவர் வெளியே மேடையில் பேசினால் அது மகன் காதுக்கும் கேட்கும்:).. ஆனா பெண்பிள்ளைகளை வீட்டில அடக்கி வைப்பதால், வீட்டில் சொன்னால் மட்டும்தானே அவர்களுக்கு கேட்கும்:) அப்பூடிக்கூட இருக்கலாம்:).. எப்பூடி என் கிட்னி?:)..

   Delete
  3. அப்பன் பேச்சை வீட்டிலேயே கேட்காதவன் மேடையில் பேசுவதையா கேட்கப் போகிறான் ?தறுதலை அவனை விடுங்க ...நம்ம பிளாக்குக்கு தினசரி ஒரு தறுதலை வந்து மைனஸ் வோட் போட்டுகிட்டிருக்கு ,ஜட்டி ,டேபிள் ,பக்கி என்ற பெயர்கள் போய் இன்று ரஜினிகாந்த் என்ற பெயரில் வந்திருக்கு...அவனுக்கு உரைக்கிற மாதிரி கண்டனம் தெரிவியுங்கள் :)

   Delete
  4. ///உரைக்கிற மாதிரி கண்டனம் தெரிவியுங்கள் :)///
   தாழ்மையா, இரக்கமா எல்லாம் சொல்லியாச்சு.. இனி என்ன பண்ண முடியும்.. மனதுக்கு கொஞ்சம் கஸ்டமாகத்தான் இருக்கு.. அதனாலதான் நான் இப்போ மகுடத்துக்குக்கூட உங்களோடு சண்டைப் பிடிப்பதை நிறுத்திட்டேன்.. இல்லை எனில் துவக்கு காட்டி மிரட்டி மகுடத்தைப் பறிச்சுப்போயிடுவேனே:).. என்ன இருப்பினும் மகுடம் உங்கள் தலையில்தானே மின்னுது.. அதை எண்ணி ஹப்பியா இருங்கோ... மைனஸ் ஐ மனதிலிருந்து மைனஸ் பண்ணிடுங்கோ..
   =============================================================

   பரலோகத்தில் இருக்கின்றபிதாவே.. இந்த மைனஸ் வோட் போடுபவரை ஆசீர்வதியுங்கள்....

   Delete
  5. இதற்கடுத்த பதிவில், வலையுலக மெண்டல் ரஜினிகாந்துக்கு நீங்களும் வந்து ஆசீர்வதிக்கலாமே :)

   Delete
 2. //எரியும் உடம்புடன் கணவனை கட்டிப் பிடித்து
  கொடுமைக்கு முடிவு கட்டி விடுகிறார்கள் !
  //
  ஹா ஹா ஹா பின்ன விட்டிட்டுப் போனால் அவர்கள் சொகுசா எல்லோ இருப்பார்கள்.. இங்கின நானும் ஒரு ஜோக் சொல்லிடுறேனே பகவான் ஜீ...

  மனைவி இறந்திட்டாவாம், அவவின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தபின்பு, காரிலே வீடு திரும்புகிறார்களாம் எல்லோரும்.. அப்போ அந்தக் கணவரின் அருகில் மனைவியின் தங்கை அழுது கொண்டிருக்கிறாவாம்.. இக்கணவர் தங்கையின் தோள்மீது விழுவதும், கையை அவமேல் போடுவதுமாக இருக்கிறாராம்.. அப்போ அவ கேட்கிறா .. என்ன மாமா எதுக்கு இப்படிப் பண்ணுறீங்க என...

  அதுக்கு அவர் சொன்னாராம்ம்.. என் மனைவி போய்விட்ட கவலையில் எனக்கு கை எங்கு வைக்கிறேன் கால் எங்கு வைக்கிறேன்.. என்ன பண்றேன் எனத் தெரியவில்லை என்று...

  தங்கை சின்னப்பிள்ளையாம்ம்ம்.. அச்சச்சோ பாவம் மாமா.. எனப் பேசாமலே இருந்திட்டாவாம் ஹா ஹா ஹா:))...

  ReplyDelete
  Replies
  1. புருஷன் செத்தா மனைவி விதவையாம் ,மனைவி செத்தா இவர் புது மாப்பிள்ளையாம் .ஆக விடலாமா :)

   எல்லோருக்கும் முன்னால் இப்படி செய்தான் என்றால்,அவன் இருக்க வேண்டிய இடமே வேற :)

   Delete
 3. Replies
  1. எழுத்தை மட்டும் ஆளத் தெரிந்தால் போதாதுதானே ஜி :)

   Delete
 4. Replies
  1. 50/50 டாக்டர் உங்கள் ஊரிலும் இருக்காரா ஜி :)

   Delete
 5. ‘நல்லா சமைக்க மட்டும் ஆள் தேவை...! தங்களுக்கு உதவி செய்ய... எடுபிடிக்கு... வீட்டோடு மாப்பிள்ளை இருக்கிறார்...உடனே தொடர்பு கொள்ளவும்...!’

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. வீட்டோடு மாப்பிள்ளையா ,அப்படின்னா மாமனார் மாமியாருக்கும் ஆக்கிக் கொட்டணுமா:)

   Delete
 6. Replies
  1. தேர்தல் ஜுரத்துக்கு ஊசி இருக்கா ,நண்பரே :)

   Delete
 7. Replies
  1. மார்ச்சுவரியில் இடம் இருப்பதை ரசிக்க முடியுதா ஜி :)

   Delete
 8. அனைத்தும் நகைக்க வைத்தன.....ஆமாம் அது யாருங்க உங்களுக்கு நெகட்டிவ் வாக்கு போட்டு இருக்காங்க...நகைச்சுவைக்கும் எதிர்ப்பா? ஹும்ம் அவங்களை திருத்தவே முடியாது

  ReplyDelete
  Replies
  1. நகைத்தமைக்கு நன்றி ஜி :)

   அந்த திருந்தாத ஜென்மம், இன்று வைத்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் !உங்களின் கண்டனத்துக்கு நன்றி ஜி :)

   Delete
 9. தேர்தல் ஜுரத்துக்க்கு ஊசியா?!

  ReplyDelete
  Replies
  1. இந்த தேர்தல் ஜூரத்தால் எந்த அரசியல்வாதியும் மண்டைப் போட்டதா தகவல் இல்லை :)

   அது கிடக்கட்டும் ,உங்களுக்கு ஜூரம் குறைந்ததா ,உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் :)

   Delete
 10. Replies
  1. தம்பதிகளின் ரொமான்ஸ் ரகசியங்கள் புத்தகம் உங்களுக்கு கிடைத்ததா அய்யா :)

   Delete
 11. தேர்தல்வரப்போகிறதா

  ReplyDelete
  Replies
  1. போற போக்கைப் பார்த்தாலே தெரியவில்லையா :)

   Delete
 12. பரவாயில்லை..சமையல் காரரை மாற்றாமல் விசுவாசத்தை காட்டியதற்கு....

  ReplyDelete
  Replies
  1. யோசிச்சுக்கிட்டுதான் இருக்காக ,எது வேணும்னாலும் நடக்கலாம் :)

   Delete
 13. நகைச் சுவையை ரசிக்க முடியாத ஜன்மங்கள் பிடிக்கவில்லை என்றால் நேராகச் சொல்ல தைரியம் இல்லாதவர்கள் வேறு பெயர்களில் தங்கள் விலாசத்தையே தொலைப்பவர்கள் நெகடிவ் ஓட்டு போடுவதால் என்னகிடைக்கிறது இவர்களுக்கு எழுத முடியாத ஆற்றாமையா பொறாமையா எதுவும் எதையும் சாதிக்கது என்பது தெரியாதவர்கள் இதனால் உங்களுக்கு எந்ததாழ்வுமில்லை ஜி மன்னித்து மறந்து விடுங்கள் அவர்கள் உதாசீனம் செய்யுங்கள் தானாகக் காணாமல் போய் விடுவார்கள்
  இவர் சமைப்பதில்லை என்று டாக்டருக்கே தெரிந்து விட்டதா
  அவர் டாக்டரல்ல தேர்தல் ஏஜெண்ட்
  50/50 டாக்டர் ரசித்தேன்
  அப்போ சிஸ்டர் முறையாகுமோ
  ரொமான்ஸ் புத்தகம் எழுதியவருக்கு மனைவியிடம் ரொமான்ஸ் செய்யத்தெரியலையா
  கொலைக் குற்றமும் வராதே

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் சொல்வதைப் போல மெண்டல்களை உதாசீனம் செய்வதே நல்லது என்று தோன்றுகிறது :)

   கணவர் சமைக்கிறார் என்பதுதான் தெரியவில்லை :)
   அப்படின்னா கள்ள வோட்டு போடுறது யாரென்று தெரிந்திருக்குமே :)
   இடம் ரிசர்வேஷன் செய்யும் டாக்டராச்சே :)
   அப்படி முறை வந்தாலும் கட்டிக் கொள்ளும் காலமாச்சே இது :)
   எழுதுவதிலேயே கோட்டை விட்டுட்டார் :)
   உயிரோடு இருந்தால் தானே வரும் :)

   Delete
 14. அனைத்தையும் இரசித்தேன்! முதல் நகைச்சுவைத் துணுக்கு அருமை. பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. சமையலில் உப்பில்லை என்றெல்லாம் டைவர்ஸ் பண்ண முடியாதுதானே :)

   Delete
 15. தமிழ் மணம் -19
  இரசித்தேன் சகோதரா
  https://kovaikkothai.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. மார்ச்சுவரியில் இடம் இருக்கேன்னு சொல்லுவதை ரசிக்க முடியுதா :)

   Delete