23 September 2017

சன்னி லியோனும், குழந்தையும் .......ஒண்ணு:)

 *எரிமலை எப்போ வெடிக்கும்னு சொல்ல முடியுமா :)        
             ''என்னப்பா சொல்றீங்க ,என் பெண்டாட்டி 'கல'கலன்னு இருந்தாலும் தப்பா ?''
             ''உங்கம்மா 'கம்'முன்னு  இருப்பதைப் பார்த்தால்  வீட்டிலே 'கல''கம் 'வெடிக்கும் போலிருக்கே !''

இருந்தாலும் இவ்வளவு செல்லமா :)        
           ''சம்பந்தியம்மா ,என் மக ரொம்ப செல்லமா வளர்ந்தவ,அதனாலே ......!''
         ''நீங்க சொல்லவே வேண்டாம் ,பால் பாக்கெட்டின்  எந்த மூலையை கட் பண்ணனும்னு கேட்டப்பவே நான் புரிஞ்சுகிட்டேன் !''

மனைவிக்கு வந்த சந்தேகம் :)           
       ''என்னங்க ,உண்மையைச் சொல்லுங்க ..போன்லே உங்க நண்பர் இன்னும் எத்தனை நாளா கட்டாம வச்சுகிட்டு இருக்கப் போறீங்கன்னு கேட்ட மாதிரி இருந்ததே !''
       ''அட லூசு ,நம்ம வாங்கிப் போட்டிருக்கிற பிளாட்டை பற்றித்தான் கேட்டான் !''
கணவனின் பயத்தால் மனைவிக்கும் நட்டம் :)
         ''டாக்டர் ,பாரதியார் சாவுக்குக் காரணம் ஒரு யானைதான்னு கேள்விபட்டதில் இருந்து ,என் வீட்டுக்காரர் யானைன்னா பயந்து சாகிறார் !''
         ''அதனாலே இப்ப என்ன பிரச்சினை ?''
        'மதயானைக் கூட்டம் படத்திற்கு  கூட்டிட்டுப் போகச் சொன்னாலும் மாட்டேங்கிறாரே !''

குழந்தையும் ,சன்னி லியோனும் .......ஒண்ணு:)
அமெரிக்காவை கதி கலக்கிக் கொண்டிருந்த 
ஒசாமா பின் லேடனையே...
கவர்ச்சியால் கதி கலக்கிய சன்னி லியோன்  
ஒரு'குழந்தை 'மாதிரி என்று பறைச்சாற்றி இருக்கிறார்  
உடன் நடித்த நம்மூர் நடிகர் ஒருவர் !
உண்மைதான் ...
பச்சைக் குழந்தைகள் பிறந்த மேனியுடன் இருக்க வெட்கப் படுவதில்லை !

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

43 comments:

 1. Replies
  1. முதலில் வந்து மொய் வைத்தமைக்கு நன்றி ஜி ,இன்னைக்கு சீக்கிரமே வேண்டாத விருந்தாளியும் வந்து மொய் வைத்துள்ளார் ,அவருடைய இன்றைய பெயர் பாகவதராம்,ஜி :)

   Delete
  2. தமிழ்மணத்தில், ஒரு ஐடியையே வைத்து... பெயரை மாத்திவிட்டு வோட் போடும் வசதியும் இருக்கிறது பகவான் ஜீ...

   Delete
  3. தினசரி ஒரு பெயர் வைத்துக் கொண்டு வோட்டு போடும் அந்த புண்ணியவான் யாரோ ?
   உங்க ஓட்டில் இருக்கும் குளறுபடிக்கு இன்றுதான் விடை கிடைத்ததுஎன்று நேற்று சொன்னவருக்கு மறுமொழி கீழே ...அவர் வந்து விளக்கம் அளித்தால் குழப்பம் தீரும் !
   என்னாச்சு சகோதரி ராஜி ,இப்படியொரு சஸ்பென்சா ஒரு கமெண்ட்டை போட்டு விட்டு வலைப் பக்கமே வர மாட்டேன்கிறீங்களே!
   கடுமையான ஜூரம் என்று fbல் பார்த்தேன்,குணமான பின் பதில் சொல்லுங்க ,இதற்கிடையில் புதுக்கோட்டை பதிவர் திருவிழாவின் வழங்கப் பட்ட பதிவர்கள் கையேட்டில் உள்ள செல் நம்பர் மூலம் தொடர்பு கொண்டாலும் வேறு யாருக்கோ செல்கிறது ,அதில் கண்ட gmail மூலம் தொடர்பு கொண்டாலும் address not found என்றே வருகிறது !உங்கள் வரவுக்கு காத்திருக்கிறேன் :)

   Delete
  4. ராஜி அவர்கள் fbயில் கீழ்க்கண்டவாறு பதில் கூறியுள்ளார் ....ராஜி எதிர்மறை ஓட்டு எப்படி?! எதனாலன்னு யோசிச்சேன்ண்ணே. எனக்கு பிடி கிடைக்கல. ஒருசில நேரத்துல உங்க பதிவுல 18+ ஜோக் வர்றதால மைனஸ் ஓட்டு போடுறாங்களோன்னு நினைச்சேன். உங்க பதிவை படிச்சதப்புறம்தான் என்ன காரணம்ன்னு புரிஞ்சது. மத்தபடி தப்பா எதும் சொல்லலைண்ணே

   சகோ ராஜிவின் இந்த விளக்கம் எனக்கு திருப்தியைத் தரவில்லை :)

   Delete
  5. இதென்ன வம்பா போச்சு. நிஜமா அப்பிதான் நினைச்சேன்ண்ணே. என்னை பிடிச்ச காய்ச்சல் மேல் சத்தியம்

   Delete
  6. மெண்டலின் வாக்கு உங்கள் தளத்தில் மட்டுமே தொடர்ந்து விழுந்து இருப்பதால் , அந்த மென்டலைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு நினைத்தேன் ,சரி ,நான் பார்த்துக் கொள்கிறேன் :)

   Delete
 2. Replies
  1. சூப்பர் எது ஜி , பால் பாக்கெட்டின் எந்த மூலையை கட் பண்ணனும்னு கேட்பதா :)

   Delete
 3. //பால் பாக்கெட்டின் எந்த மூலையை கட் பண்ணனும்னு கேட்டப்பவே நான் புரிஞ்சுகிட்டேன் !''//

  மாமியைக் கேட்டே பால்பக்கெட்டைக்கூடக் கட் பண்ணும்:) ரொம்ப நல்ல மருமகள்:)..

  யானைக்குப் பயமெனில்.. படம் மட்டும் அவர் எப்படிப் பார்ப்பார்ர்?:) பயம்தானே...

  ஊசிக்குறிப்பு:
  பகவான் ஜி.. தெளிவா போஸ்ட் போடுவீங்களோ என எதிர்பார்த்தோம்:).

  ReplyDelete
  Replies
  1. தாழ்ப்பாளைப் பூட்டிக்காவது தெரியுமா :)

   அதுவும் மதயானைக் கூட்டம் :)

   தெளிவு கிடைத்து விட்டது ,நாளைய போஸ்ட்டைப் பாருங்க :

   Delete
 4. தொடர் மகுடத்துக்கு வாழ்த்துக்கள் பகவான் ஜீ.. பெரீஈஈஈஈய நீத்துப் பூசணிக்காயா எடுத்து வாறேன்ன்.. ஜோக்காளிச் சந்தியில் போட்டு உடைச்சு விடுங்கோ:). திருஸ்டியும் கழியட்டும் .... .....:)..

  ReplyDelete
  Replies
  1. இன்றோடு திருஷ்டி கழிந்தே விட்டது ,இனி மைனஸ் வாக்கு விழாது :)

   Delete
 5. ரசித்தேன், அனைத்தையும்.

  ReplyDelete
  Replies
  1. கட்டாம வச்சுகிட்டு இருக்கிறதையும்தானே :)

   Delete
 6. அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. பால் பாக்கெட்டை எப்படி கட் பண்றதுன்னு கேட்பது சரிதானே :)

   Delete
 7. மத யானை கூட்டம் சூப்பர் ஜீ
  இதுக்கே இப்படின்னா ... கும்கி படத்துக்கு போயிருந்தா என்னவாகியிருப்பார் ?

  ReplyDelete
  Replies
  1. கும்கி நாயகியை ரசித்திருப்பார் :)

   Delete
 8. Replies
  1. நவராத்திரி தினம் என்பதால் ஒன்பதா ஜி :)

   Delete
 9. Replies
  1. பத்தைக் காணலே ,பத்தோடு ஒண்ணா அய்யா :)

   Delete
 10. பால் பாக்கெட் அருமை த.ம வாக்குடன்

  ReplyDelete
  Replies
  1. கெட்டிப் பாலாச்சே :)

   Delete
 11. //இருந்தாலும் இவ்வளவு செல்லமா!//

  பால் பாக்கெட்டையே பார்க்காத செல்லங்களும் இருக்கக்கூடும் பகவான்ஜி!!

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளை ,குடிக்காத செல்லங்கள் இல்லாம போனாங்களே :)

   Delete
 12. அனைவரையும் மகிழ்விக்கிற உங்களின் நகைச்சுவைப் பதிவுகளுக்கு மைனஸ் ஓட்டா?!

  புறக்கணியுங்கள். அவர்களும் ஓட்டளிப்பதைப் புறக்கணித்துவிடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இன்னையோட 'பாகவதர்' கச்சேரியை முடித்துக் கொள்வார் :)

   Delete
 13. ஆகா..... சரியாகத்தான் சொல்லி இருக்கார்..

  ReplyDelete
  Replies
  1. அப்பா ,மாமியார் .கணவன் மூவருமே சொல்லி உள்ளதில் யார் சொன்னது சரி :)

   Delete
 14. அடச்சீ கம்முன்னு கெட... கல...கலா... கலக்கலா...! ஊத்தி கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு இந்த உலகம் சுத்துதடி பல ரவுண்டு...!

  த.ம.+1

  ReplyDelete
  Replies
  1. ஒரே ரவுண்டிலேயே ஃபிலாட் ஆகிட்டார் போலிருக்கே :)

   Delete
 15. Replies
  1. மனைவிக்கு வந்த சந்தேகம் சரிதானே :)

   Delete
 16. அவரது மனைவி பற்றி சாக்ரடீஸ் சொன்னதாகப் படித்தது நினைவுக்கு வந்தது
  இன்ன மூலையில் தான் கட் செய்ய வேண்டுமோ என்றும் மாமியாருக்கு அடங்கின மருமகளாக நினைத்திருக்கலாம்
  மனைவிக்கு யரையாவது கட்டுவாரோ என்னும் பயமாக இருக்கலாம்
  மனைவிக்கே பயப்படாதவ்ர் மத யானைக்கா பயப்படுகிறார்
  சன்னி லியோனை குழந்தையாகப் பார்க்க...........

  ReplyDelete
  Replies
  1. நினைவுக்கு வந்ததை சொல்லியிருக்கலாமே :)
   ஒண்ணும் தெரியாத பாப்பா,ஒரு மணிக்குப் போட்டாளாம் தாழ்ப்பா:)
   சந்தேகம் என்னும் ஒரு சரக்கோ :)
   மனைவியும் யானை மாதிரி இருந்தால் பயந்திருப்பார் :)
   யாருக்குப் பிடிக்கும் :)

   Delete
 17. அனைத்தும் ரசித்தேன் ஜி!

  ReplyDelete
  Replies
  1. மைனஸ் வாக்குக்கு நான் துப்பறிந்ததை ரசிக்க முடிந்ததா :)

   Delete
 18. லியோன் பகடி சிரிப்ப ஆயினும்
  அனைத்தம் இரசித்தேன் சகோதரா
  தமிழ் மணம் - 19
  https://kovaikkothai.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. அறியாத வயது அம்மணமும் ,காசுக்காக அம்மணமும் ஒன்றாக முடியாதுதானே :)

   Delete
 19. நண்பரின் மனைவிக்கு சந்தேகம் வராமல் இருக்க அவர் தெளிவாக பிளாட்டை எப்போது கட்டப்போகிறாய் என கேட்கவேண்டியதுதானே!

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் மனைவி இப்படி சந்தேக சகுந்தலாவாக இருப்பார்ன்னு தெரியாமப் போச்சே அய்யா :)

   Delete