25 September 2017

பணத் தேவைக்கு இந்த காரியமா செய்வது :)

*கரைய வேண்டியது கரைய மாட்டேங்குதே :) 
                 ''ஆறு மாசமா ட்ரீட்மென்ட் எடுக்கிறீங்களே ,தொந்தி கரையுதா ?''
                 ''ஹும்....பாங்க்  பாலன்ஸ்தான்  கரையுது !''

தலைவலிதான் போச்சே ,அப்புறமும் ஏன் :)
            ''நேற்றுபூரா ஒற்றைத்தலைவலி ,   வலி வலது பக்கமா ,இடது பக்கமான்னு  ஞாபகம் வரலே  ,டாக்டர்  !''
            ''ரொம்பவும் யோசிக்காதீங்க , இரட்டைத்  தலைவலி வந்திடப்போவுது !'' 

காசியில் விருப்பப்பட்டு விடவில்லை :)
             ''காசிக்குப் போனா எதையாவது விட்டுட்டுவரணும்னு சொல்வாங்க ,உன் புருஷன் எதை விட்டார்டி?''
             ''அவருக்கு  மனசில்லை என்றாலும் ,ஆற்று வெள்ளம் அவர் பல் செட்டை அடிச்சுகிட்டு போயிடுச்சே !''

காது வழியா உள்நுழையும் சொல் ,இனிமேல்:)
காது கேட்காதவர்களுக்கும்...
பல் வழியே அதிர்வலைகளை  ஏற்படுத்தி 
கேட்க வைக்கும் முடியுமென்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துள்ளாராம் நம் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் !
பல்லு போனா சொல்லு போகுங்கிற பழமொழி ..இனி ..
பல்லு வழியா சொல்லு போகும்னு மாறிடுமோ ?

பணத் தேவைக்கு இந்த காரியமா செய்வது :)
             ''வங்கிக்கு போய் ஒரு முழப் பூவுக்கு எவ்வளவு தருவீங்கன்னு கேட்டீங்களாமே ,ஏன் ?''
             ''பொன்னை வைக்கிற இடத்தில் பூவை  வைக்கலாம்னு சொல்றாங்களே !''
டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

34 comments:

 1. காசிக்குப் போனா எதையாவது விட்டிட்டு வரோணுமோ?:) ..ஙேஙேஙேஙே.. அப்போ போகும்போது அஞ்சுவைக் கூட்டிக்கொண்டு போகிறேன்ன்:)... ஹா ஹா ஹா:).

  ReplyDelete
  Replies
  1. அஞ்சுவும் இதே பிளானோட இருப்பதாய் கேள்விபட்டேனே:)

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னா சிரிப்பூ:).. காசிக்குப் போகும் வழியில கட்டாரில:) பிளேன் கதவைத் திறந்து தள்ளி விட்டிடுவேன்ன் ஜக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்தை:).

   Delete
  3. இனிமேல் இரண்டு பேரும் சேர்ந்து விமானப் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது :)

   Delete
 2. கணபதியப்பா...தொந்தி கரைய ட்ரீட்மென்ட் எடுக்கப்படாது... ஆப்ரேசன்தான் பண்ணணும்... ஆப்ரேசன் சக்ஸஸ்....!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஆஸ்பத்திரியா பார்த்து போங்க ,இல்லைன்னா ,தொந்தி கரையாது ,சாம்பலைக் கரைக்கும்படி ஆயிடும் :)

   Delete
 3. Replies
  1. ரொம்ப சோகமா இதை சொல்ற மாதிரி இருக்கே ஜி :)

   Delete
 4. காசில விடவேண்டியது கத்திரிக்காய், வெண்டைக்காய், இட்லி, பொங்கலா?! எதை விடனுமோ அதை விடுறதில்லை....

  ReplyDelete
  Replies
  1. அதைச் சொல்லுங்க ,எதையும் விட்டு வைக்காம மூக்கு முட்ட வெட்ட வேண்டியது ,அப்புறம் எப்படி தொந்தி கரையும் :)

   Delete
 5. தமிழ்மணம் ஓட்டு போட்டாச்சுன்னு பொய் சொல்லுது. அப்பாலிக்கா வந்து பார்க்குறேன்

  ReplyDelete
  Replies
  1. இப்படி பொய் சொல்லும் போது நான் செய்வது ,வேறு சிம் /சிஸ்டம் மூலம் வோட்டு போடுவேன் ,பொய் உண்மையாகிடும் :)

   Delete
  2. இன்று அதுகூடத் தேவையில்லை ,உங்கள் வாக்கு சேர்ந்து விட்டது ,அதுக்காக ,நான் சொன்ன வாக்கை மறந்து விடாதீர்கள் :)

   Delete
 6. Replies
  1. பல்லு வழியா சொல்லு போகும்னு நிலை வருமா அய்யா :)

   Delete
 7. அனைத்தும் ரசித்தோம்....காசிக்கும் போனா எதை விடுவது??!! யோசிக்கணும்

  ReplyDelete
  Replies
  1. எழுதியது போதும்னு லேப்டாப்பை மட்டும் விட்டுட்டு வந்தீடாதீங்க :)

   Delete
 8. கண்டேன் அனைத்தும் த ம 10

  ReplyDelete
  Replies
  1. கண்டேன் சீதையை என்று சொன்ன மாதிரி இருக்கே ,கம்ப ராமாயணத்தில் உங்களுக்கு பிடித்த டயலாக் அதுதானா அய்யா :)

   Delete
 9. தொந்தியை கரைப்பது அவ்வளவு எளிதா என்ன ? வச்சது வச்சதுதான் ஜி .

  ReplyDelete
  Replies
  1. வருமுன் காப்போம் என்பதுதான் சரியோ ஜி :)

   Delete
 10. பூவுக்கு பணம் தந்தால் பூக்கார அம்மாக்களுக்கு யோகம்தான்

  ReplyDelete
  Replies
  1. தினசரி போடுற பூவுக்கே காசு தர அழுவாங்க ,கடனா தரப் போறாங்க :)

   Delete
 11. இவராவது பரவாயில்லை....சிலர் கன்னங் கோல்ல வைத்துவிடுகிறார்கள்...உதாரணத்துக்கு மல்லலையாவை நிணைத்துக் கொள்ளுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. கன்னக் கோல் வைத்தவரை வெளிநாட்டுக்குத் தப்ப விட்டும் விடுகிறார்கள் ,வீட்டு மாப்பிள்ளையை அழைத்து வருவதுபோல் இவரையும் அழைத்து வர முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம் என்று வேறு கதை அளக்கிறார்ளே:)

   Delete
 12. Replies
  1. நேரம் கிடைக்கும் போது கருத்து கூறுங்க ஜி :)

   Delete
 13. தொந்தி குறைய பணம் குறையத்தேவையில்லை
  உண்ணும்போது பரிமாற வருபவரைப்பார்த்து தலையை இடமும் வலமும் ஆட்டினால் போதும்
  அவருக்கு முதலில் நினைவாற்றலுக்கு மருந்து வேண்டும் அல்ஜிமர் ஆக இருக்கப் போகிறது
  வங்கிக்காரர் பெண்ணாக இருந்து கேட்பவர் ஆணாக இருந்தால் என்ன விளைவு என்பதை யூகியுங்கள்
  நல்ல வேளை என்னை விட்டு வரவில்லை
  பல்லே போனால் என்ன செய்ய

  ReplyDelete
  Replies
  1. கழுத்துப் பிடிப்பு ,நீங்க சொல்றமாதிரி தலையை ஆட்ட வர மாட்டேங்குதாமே :)
   அதுக்கும் சேர்த்தே மருந்து வாங்க வேண்டியதுதான் :)
   அதுவும் மல்லிகைப் பூ என்றால் சிக்கல்தான் :)
   வீட்டுச் சாவி இடுப்பில் கட்டியிருப்பதால் விட்டுட்டு வர முடியலையோஎன்னவோ :)
   பல் செட்லே மைக் செட் மாட்ட முடியுமான்னு பார்க்க வேண்டியதுதான் :)

   Delete
 14. வங்கியில் இருப்பு குறைந்தால் அந்த கவலையில் தொந்தி கரைய வாய்ப்பு உண்டே!

  ReplyDelete
  Replies
  1. கவலையில் நெஞ்சு வலி வந்ததே தவிர தொந்தி குறையவே இல்லை :)

   Delete
 15. Replies
  1. ஆடி பதினெட்டு மட்டுமா சிறப்பு ,இந்த த ம பதினெட்டும் தான் :)

   Delete