26 September 2017

பொண்ணுங்க 'டூ வீலரில்' எழுதக்கூடாத வாசகம் :)

*மரம் வைத்தவனே தண்ணியையும் ஊற்றுவானா :)
               ''என் புருஷன் பெயரைச் சொன்னதும் ,கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்துதான் ஆகணும்னு ஏன் சொல்றீங்க, டாக்டர் ?"
               ''இப்பவே நாலு பிள்ளைங்க ,எல்லாம் 'பகவான் 'செயல்னு இன்னொரு பிள்ளையும் பெத்துக்கக் கூடாதுன்னுதான் !''

இவரை  மேய்க்கிறது கஷ்டம்தான் :)          
            ''உங்க கணவருக்கு  படிப்பே ஏற மாட்டேங்குது  ,மாடு மேய்க்கத்தான் அவர் லாயக்கு !''
                ''அப்படி சொல்லாதீங்க ஸார்,மாடு  மேய்க்கக் கூட  தெரியலைன்னுதான் அவரை  முதியோர்  ஸ்கூலுக்கே அனுப்பியிருக்கேன்  !''

பொண்ணுங்க 'டூ வீலரில்' எழுதக்கூடாத வாசகம் :)
          ''ஏண்டா ராஸ்கல் ,என்  பின்னாலேயே வர்றே ?''
           ''தொடர்ந்து வா ,தொட்டு விடாதேன்னு உங்க வண்டியிலே எழுதியிருக்கீங்களே !''
செவ்வாய் தோஷத்தை இப்படியும் சொல்லலாமே :)           
          ''நாலு வருசமா என் பொண்ணுக்கு வரன் ஒண்ணுமே அமையலே ,என்ன செய்யலாம் ?''
         ''ஜவ்வாய் தோஷம் இருக்குதான்னு பாருங்க !''

முதல் இரவையும் ஸ்பை கேமராவில் எடுப்பாங்களா :)
           ''என் மகன் கல்யாணத்திற்கு  AtoZ எல்லா வேலைகளையும் காண்ராக்ட்எடுத்து பிரமாதமா பண்ணி கொடுத்தீங்க ,ரொம்ப  நன்றிங்க !''
           ''இதெல்லாம் என்னங்க பிரமாதம் ?முதல் இரவையும் வீடியோ எடுத்திருக்கோம் ,பார்த்தா அசந்துடுவீங்க !''

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

34 comments:

 1. எல்லாம் அவன் செயல்... அவனின்றி ஓர் ‘அணு’வும் அசையாது...! 'பகவான் ' ஜி இருக்கப் பயமேன்...!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. கு க பண்ணியபிறகு அவன் செயல் என்னானது ,அசையும் அணுவைக் கூட அடைய வேண்டிய இடத்தை அடைய முடியாமல் தடுத்து விட்டதே கு க ?

   Delete
 2. பகவான் செயல் ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. விளைவு விபரீதமா இருக்கே :)

   Delete
 3. அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வரலாம் ,தொட்டால் தானே தப்பு ஜி :)

   Delete
 4. "மாடு மேய்க்கக் கூட தெரியலைன்னுதான் அவரை முதியோர் ஸ்கூலுக்கே அனுப்பியிருக்கேன் "
  இந்த விஷயம் யோகி ஆதித்யநாத்துக்கு தெரிஞ்சா கோபப் படுவாரே ஜீ !!!!

  ReplyDelete
  Replies
  1. அறுபது பச்சிளங் குழந்தைகள் ஆக்சிஜன் இன்றி இறந்த போதே ,தார்மீகப் பொறுப்பேற்று ரோஷப் பட்டு ராஜினாமா செய்யவில்லை ,இதுக்கா கோபப் படப் போகிறார் :)

   Delete
 5. ​​பகவான் சிரிக்க வைக்கிறார்!

  ReplyDelete
  Replies
  1. ஃலாப்பிங் புத்தாவா இருப்பாரோ :)

   Delete
 6. //இப்பவே நாலு பிள்ளைங்க ,எல்லாம் 'பகவான் 'செயல்னு இன்னொரு பிள்ளையும் பெத்துக்கக் கூடாதுன்னுதான் !''//

  ஹா ஹா ஹா இது பகவானோ பகவான் ஜீ ஓ?:)..

  அதுசரி பகவான் ஜீ நெடுகவும் தலையிலயே வச்சிருக்கிறீங்களே?:) கனமா இல்லயோ?:) கொஞ்சம் அதிரா தலைக்கு மாத்தலாமெல்லோ:).. எல்லாம் உங்களுக்கு யெல்ப் பண்ணும் நோக்கிலேயெ கேட்கிறேன்ன்:) தலை நோகுமெல்லோ:)..ஹா ஹா ஹா:).

  ReplyDelete
  Replies
  1. நாலு பிள்ளைங்களா,எனக்கா ,கற்பனைப் பண்ணிகூட பார்க்க முடியலியே ,எனக்கு ரெண்டே ...தப்பு தப்பு ..ஒரே பெண்டாட்டி ,இரண்டே பிள்ளைங்க :)

   அட இதுக்காகவா, வோட்டு போடக் கூடாதுன்னு அஞ்சுவை அடைச்சு வச்சிருக்கீங்க ,இந்த நொடியில் மகுடம் உங்க தலைக்கு வர வாய்ப்பில்லை ஸ்ரீ ராம்ஜி தலைக்குத்தான் போகும் ,அவர் அதை விரும்பவும் மாட்டார் ,எப்படியாவது ஒரு வோட்டு வாங்கிட்டு வாங்க ,மகுடத்தை நானே தந்து விடுகிறேன் ,டீலிங் சரியா:)

   Delete
  2. வேணாம் விடுங்கோ பகவான் ஜீ:) நான் ஸ்ரீராமுக்கு விட்டுக்குடுக்கிறேன்:)).. ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சு நைல் நதில வீசிடுங்கோ:)

   Delete
  3. சீராளன்.வீTue Sep 26, 11:31:00 pmக்கு வந்து ஜனநாயகக் கடமையை செய்து விட்டர்ரே ,பார்க்கலையா ?சரி சரி ,அஞ்சுவைத் திறந்து விடுங்கோ :)

   Delete
  4. இனி நான் என் ஆயுதத்தைக் கையில எடுத்தால்தான் சரிவரும்போல:)...

   அஞ்சு ஒழுங்காத்தானே வந்தா.. இடையில என்னாச்சோ.. நீங்க ஒருவேளை கறுப்புக் கண்ணாடியைக் கழட்டிப்போட்டு மிரட்டியிருப்பீங்க ஹா ஹா ஹா :) கண்ணாடியைப் போடுங்கோ வருவா:))

   Delete
  5. haa haa :) vote pottuten :)

   இப்போதான் வெற்றி கப்பை பூனைக்கிட்ட கொடுத்தீங்க :) இந்த போஸ்டுக்கு வோட் போட்டா பூஸ் பிராண்டுவாங்க என்னை :)

   Delete
  6. ///ஒரே பெண்டாட்டி///
   ரொம்ம்ம்ம்ப சோகமா சொல்றமாதிரி இருக்கே ஹா ஹா ஹா ஹையோ முறைக்காதீங்க:).

   மகுடம் கிடைச்சிட்டுதூஊஊஉ இனி இங்கின ஆரையும் வோட் போட விடமாட்டேன்ன்ன் இதுக்கு:)

   Delete
 7. அனைத்தும் ரசித்தேன் பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் பகவான் செயல் என்பது உண்மையா ஜி :)

   Delete
 8. எல்லாமே ரசிக்க வைத்தன ஜி

  ReplyDelete
  Replies
  1. அவன் அந்த பொண்ணைத் தொடர்ந்து வரக் காரணம் ,அந்த பெண்ணின் உடையை ரசித்தது காரணமா இருக்குமா :)

   Delete
 9. பகவான் பெயரை வைத்தே நகைச்சுவையா? இரசித்தேன் அனைத்தையும்.

  ReplyDelete
  Replies
  1. யார் யார் பெயரையோ சொல்லும்போது ,பகவான் மட்டும் விதிவிலக்கா :)

   Delete
 10. மாடு மேய்க்கவும் இப்ப படிப்பு வந்தாச்சி

  ReplyDelete
  Replies
  1. தப்பில்லை ,ஜோதிடம் பார்க்கவே படிப்பு இருக்கே :)

   Delete
 11. ஓட்டு போட்டாச்சுன்னு வருதே! ஆனா நான் போடலியே!

  ReplyDelete
  Replies
  1. நான் நேற்று சொன்ன மாதிரி முயற்சி செய்து பாருங்க :)

   Delete
 12. இக்காலத்தில் அப்படி எழுதினாலும் தப்பு இல்லயே சார்...........

  ReplyDelete
  Replies
  1. தொட்டுப் பார் ,அப்புறம் தெரியும் சேதின்னு கூட எழுதலாமே :)

   Delete
 13. வணக்கம் ஜி !

  தொடர்ந்து வா தொட்டுவிடாதே !
  எல்லாம் பகவான் செயல்
  முதலிரவு வீடியோ .............

  பிரமாதம் ஜி
  அருமை தம +1

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர் என்னைக் கேட்காமல் இப்பூடி லாஸ்ட்டா வந்து கடமையைச் செய்கிறேன் பேர்வழி என பகவான் ஜீ க்கு வோட் போடக்குடா சொல்லிட்டேன் ஹா ஹா ஹா இருப்பினும் பகவான் ஜீ புண்ணியத்தில மகுடத்தைப் பறிச்சிட்டேன்ன்ன்ன்ன்:)

   Delete
  2. எல்லாம் பகவான்ஜி செயல்னு அதிராவுக்கு இப்போ புரிந்து இருக்குமே ஜி :)

   Delete
 14. Replies
  1. உங்க அனுபவத்தில் சொல்லுங்க ,முதியோருக்கு பாடம் எடுப்பது சுலபமா :)

   Delete