30 September 2017

இயக்குனரிடம் ஏமாறாத நடிகை :)

*கேட்டது தப்பா போச்சே :)
           ''பொண்ணு பார்க்க வரும்போது ராசிக்கல் மோதிரம் ஒண்ணு போட்டுக்கிட்டு வந்தீங்களே,அதென்ன ஆச்சு ?''
             ''வித்துட்டேன், ராசியில்லாம போயிடுச்சே அது !''

தோழியிடம் பீற்றிக் கொண்டால் இப்படித்தான் :)
           ' 'உன் வயசுதான் எனக்கும் ,என் சருமம் எவ்வளவு பளபளப்பா இருக்கு ,பார்த்தீயா ?''
           ''ரொம்பவும் பீற்றிக்காதே ....சர்க்கரை நோய் வந்தால்கூட  இப்படி பளபளக்கும்,போய் 'செக் அப் 'பண்ணிக்கோ !''

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் :)
        ''அந்த ஆள் ஒரு வரி பாடினதைக் கேட்டே ,அவனொரு குடிகாரன்னு எப்படி சரியா கண்டுபிடீச்சீங்க ?'' 
        ''துன்பம் வரும் வேளையிலே குடிங்கன்னு பாடினாரே !''

இயக்குனரிடம் ஏமாறாத நடிகை :)          
        ''அந்தப் படத்திலே உங்களுக்கு வெயிட்டான ரோல் தானே ,ஏன் வேண்டாம்னு சொல்லிட்டீங்க ?''
        ''ஒரே ஒரு சீன்லே வர்ற கர்ப்பிணி வேஷம் யாருக்கு வேணும் ?''

கணவனை கைக்குள் போட்டுக்க விரும்பாத பெண்ணும்  உண்டா ?
          ''அந்த மந்திரவாதி பொண்ணுங்களை குறி வைச்சு ஏமாத்தி இருக்கானே ,எப்படி ?''
          ''தலையணை மந்திரம் இலவசமாகத் கற்றுத்தரப்படும்னு  சொல்லித்தான் !''

Thir'teen'ஐ  லக்கி நம்பர் ஆக்குவது  'teen' ager கையில்தான் :)
டீனேஜ் என்பது ... 
கனாக்காணும் காலம் மட்டுமல்ல ,
வினாக்காணும் காலமும் கூட !
தேர்வு வினாவுக்கு விடை சொல்லவேண்டிய பருவத்தில் ...
வேறு உணர்ச்சிக்கு விடை தேடிக் கொண்டிருந்தால்...
வாழ்க்கை முழுதும் கேள்விக் குறிதான் எஞ்சி நிற்கும் !

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

20 comments:

 1. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் மீ லாண்டட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்:)

  ReplyDelete
  Replies
  1. அதிரா வந்து ரசித்துவிட்டுப் போகிறேன் என ஜோக்காளியிடம் சொல்லி விடுங்கோ... லிங் எங்கேஏஏ??? அப்போ வோட் நாளைக்குத்தான்:).

   Delete
 2. கர்ப்பிணி வேசம் வெயிட்தானே...

  ReplyDelete
  Replies
  1. வெயிட்தான் ,வெயிட்டா கவனித்தால் பரவாயில்லை ,கௌரவ வேடம் என்றால் என்றால் எப்படி கால் ஷீட் தர மனசுவரும் :)

   Delete
 3. ரசித்தேன், அனைத்தையும்!

  ReplyDelete
  Replies
  1. நாரதர் முன்னழகையும் பின்னழகையும் கண்டுபிடிக்க ,மூதேவியும் சீதேவியும் எத்தனை முறை catwalk போனாங்களோ ,பாவம் ..இல்லையா ஜி :)

   Delete
 4. ரசித்தோம் அனைத்தையும்....

  சுகர் உள்ளவங்களுக்குத் தோல் பளபளப்பா இருக்காது ஜி!

  ReplyDelete
  Replies
  1. பளபளைப்பை நான் பார்த்து இருக்கிறேனே ஜி :)

   Delete
 5. ராசிக்கும் ராசியில்லாம போச்சா!..

  ஒரே அக்கப்போரா..ல்ல இருக்குது!?..

  ReplyDelete
  Replies
  1. தாலி கட்டிய ராசி அப்படி :)

   Delete
 6. நடிகைன்னாலேஇயக்கு நாரிடம் ஏமாந்துதானே ஆகனும்....????

  ReplyDelete
  Replies
  1. அதுக்காக துட்டும் ஏமாற முடியுமா :)

   Delete
 7. நான் ஒரு ராசியில்லா ராஜா...!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. என்னோட சேர்ந்த ராசி அப்படி :)

   Delete
 8. நானொரு ராசியில்லா ராஜா ....>

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு யார் காரணம் :)

   Delete
 9. இப்பட்யும் ஒரு திருப்தியா
  யாழ் எடுத்துப் பாடச் சொன்னாரா
  ஒரே சீனில் கர்ப்பிணி ஆக வேண்டுமா
  இலவசத்துக்கு வேறு விதத்தில் விலை
  அது ஒரு கனாக்காலம்

  ReplyDelete
  Replies
  1. திருப்தின்னு சொல்லமுடியாது ,பழிக்குப் பழி:)
   துன்பம் நேர்கையில் யாழ் மீட்டினால் கழுத்தறுப்பு ஆகிவிடுமே :)
   பிள்ளைக் கூட பெறவேண்டும் :)
   ஒன்றை இழக்காமல் ஒன்றைப் பெறமுடியாதே:)
   வினாவுக்கு விடைதேட வேண்டிய காலமும் :)

   Delete
 10. வெயிட்டான கேரக்டர் கேட்டிருப்பாங்க அதான் குடுத்திட்டாரு

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை,படத்தில் மட்டும் கொடுத்தார் :)

   Delete