1 October 2017

*தாய்க்கு பின் தாரம்,எதில் :)

                ''தாய்க்கு பின் தாரம்னு ஏன் சொல்றங்கன்னு கேட்டா ,கல்யாணமானா புரியும்னு  ஏன் சொல்றீங்க ?''         
                ''அடி வாங்கின அனுபவத்திலே சொல்றேன் !''
பெரிய வீட்டில் 'சின்ன வீடும் ' இருக்க முடியுமா :)
          ''இரண்டு பெட் ரூம் உள்ள வீடு வாங்கலாம்னு  என் வீ ட்டுக்காரர்  சொன்னார் ,சந்தோசப் பட்டேன்..... ''

          ''அதுக்கென்ன இப்போ ?''
           ''இரண்டு பெட் ரூமுக்கும் ஒரே மனைவியான்னு யோசிக்க ஆரம்பித்து விட்டாரே !''

ஜெயித்தால் தலைவர்தான்  காரணமா :)      
          ''உங்க கட்சி ,ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லையே ,ஏன் ?''
          ''தொண்டர்கள் எல்லாம் தெண்டர்கள் ஆகி விட்டார்களே !''

புருஷனை விட்டுத் தராத உத்தமி :)    
         ''உன் வீட்டுக்காரரை  ரொம்ப 'டார்ச்சர் 'பண்ணாதேடி! ஆண்டியாப் போயிடப் போறார் !''
         ''அவராவது ஆண்டியா போறதாவது ?வேற 'ஆன்டி 'யை வேணா தேடித் போவார் !''

'குல தெய்வம்' லாலுவை பழி வாங்கி விட்டதா :)
 பசு மாட்டை தெய்வமாய் வணங்க வேண்டிய 'யாதவ் '...
அதற்கு போட வேண்டிய தீவன கணக்கிலேயே ஊழல் செய்ய ...
'நின்று கொல்லவேண்டிய  தெய்வம் 'கூட நிற்காமல் ...
 அவரை ஜெயிலில் தள்ளியது  ...
செய்வது தெய்வ குற்றம் என எண்ணிப் பார்க்காததால் ...
ஜெயில் கம்பிகளை எண்ண வேண்டிய நிலை ....
தண்டனை விபரம் கிடைத்த பின் அப்பீல் பண்ண இருக்கிறாராம் ...
அப்பவும் ஃபீல் பண்ணுவதாக தெரியவில்லை !

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

20 comments:

 1. வணக்கம் ஜி !

  நமக்கு ஒரு வீடும் வேண்டாம் ஹா ஹா ஹா
  அனைத்தும் ரசித்தேன் ஜி

  தம +1

  ReplyDelete
  Replies
  1. அப்படியே கிடைத்தாலும் ஒரு 1BHK போதுமா :)

   Delete
 2. தெண்டர்களை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தெண்டர்களுக்கு பிரியாணியும் குவார்ட்டரும் கொடுத்தது தெண்டமா போச்சே :)

   Delete
 3. Replies
  1. குலதெய்வம் பழி வாங்கியது சரிதானே :)

   Delete
 4. Replies
  1. ஆண்டிக்கும் ஆன்டிக்கும் உள்ள வித்தியாசம் புரியுதா ஜி :)

   Delete
 5. அடேங்கப்பா!.. குழவிக் கட்டை ஆயுதமா!?..

  ReplyDelete
  Replies
  1. கோபத்திலும் பாப்பா அழகா இருக்கா :)

   Delete
 6. அனைத்தும் ரசித்தோம் ஜி..

  தம லிங்க் எரர் வருது...

  ReplyDelete
  Replies
  1. பூரிக்கட்டைப் புகழ் உண்மையை இன்னும் காணாமே ஜி :)

   தமிழ் மணம் நிறைய பொய் சொல்ல ஆரம்பித்து விட்டது ஜி ,உங்களுக்கு எர்ரர் என்றும்,இன்னும் இரண்டு பேருக்கு ,ஏற்கனவே உங்கள் வோட் சேர்ந்துள்ளது என்றும்,மொத்தத்தில் விழுந்த வாக்கின் எண்ணிக்கையில் ஒன்றைக் குறைத்துக் காட்டுகிறதே தமிழ் மணம்:)

   Delete
 7. அடிக்கிற கைதான் அணைக்கும்
  நல்ல வேளை மூன்று பெட் ரூம் வாங்க நினைக்க வில்லை
  தொண்டர்களை விட தலைவர்கள் அதிகமோ
  அவரும் டார்ச்சர் செய்யாமல் இருக்க வேண்டுமே
  அரசன் அன்று கொல்லும் தெய்வம நின்று கொல்லும் என் பார்கள் ஆனால் லாலு விஷயத்தில் அரசே யோசித்து யோசித்துக் கொல்கிறதே

  ReplyDelete
  Replies
  1. அடிக்காம அணைச்சா நல்லாயிருக்குமே :)
   அவர் வசதி அவ்வளவுதான் :)
   அதனால்தான் காசு கொடுத்து தொண்டர்களை தேடவேண்டியிருக்கிறது :)
   ஆனந்தக் கண்ணீருடன் அதை தாங்கிக் கொள்வார் :)
   அரசியல்வியாபாரிகள் ஒரேயடியாய் கொல்லமாட்டார்கள்:)

   Delete
 8. தாய் சொல்... ‘தட்டாதே... தட்டாதே... அவன் அடிதாங்கமாட்டான்... இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன் அவன அடிச்சு வளர்க்கனுமுன்னு...!’

  த.ம. 7

  ReplyDelete
  Replies
  1. முடிவா சொல்லுங்க ,அடிச்சு வளர்க்கணுமா ,வேண்டாமா :)

   Delete
 9. தாய்க்கிட்ட அடி வாங்கிய அனுபவம் இருக்கு.... தாரத்துகிட்ட அடி வாங்கிய அனுபவமெல்லாம் எனக்கு கிடையாது நண்பரே..............

  ReplyDelete
  Replies
  1. கொடுத்து வச்ச ஆளு நீங்க :)

   Delete
 10. முதல்லேயே அடியா ஐயோ பயமா இருக்கே

  ReplyDelete
  Replies
  1. அடி கொடுக்கிறதும் வாங்கிறதும் சகஜம்தானே :)

   Delete