2 October 2017

இனிமேல் புருஷனுக்கு பால்கோவா கிடைக்குமா:)

இரயில்வேக்கு   ஒரு யோசனை :)         
              ''பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க  தாமதம் ஆகத்தான் செய்யும் ,என்ன செய்யலாம் ?''
             ''அதுக்கும் ரிசர்வேஷன் வசதியைக் கொண்டு வரலாமே !''  
  
மயிர் பிளக்கிற ஆராய்ச்சின்னா  இதுதானா :)                         
               ''என்னடா ,ரொம்ப நேரமா 'ஏர் பட்ஸ் 'சோட  இரண்டு முனைப் பஞ்சையும்  பார்த்துகிட்டே இருக்கே ?''

                ''இதிலே எந்த பக்கத்தை எந்த பக்க காதுலே நுழைக்கிறதுன்னு தெரியாம யோசிச்சுகிட்டு இருக்கேன் !''

'சரஸ்வதி துணை ' பாஸாக  உதவுமா :)
                 ''பரீச்சை பேப்பர்லே , பிள்ளையார் சுழிக்குப்  பதிலா  'சரஸ்வதி துணை 'ன்னு ஏன் எழுதி இருக்கே ?''
                ''முன் டேபிள்லே உட்கார்ந்து பரீச்சை எழுதின பொண்ணு  பெயர்  சரஸ்வதி ஆச்சே !''

இனிமேல் புருஷனுக்கு பால்கோவா கிடைக்குமா:)
             '' என்னங்க , தினசரி ஒரு பூனை  பால் குடிக்க வருமே ,அது ஏன் இப்போது வர்றதில்லே ?''
               ''நீ செய்த பால்கோவாவை அது டேஸ்ட் பார்த்திருக்கும் ,அதான் !''

மழையில் நனைய ஆசை ,நிராசை ஆகிவிடுமா :)
வீட்டிலே நாலு வத்தல் வறுக்கும் போதே 
உட்கார முடியவில்லை ,தும்மல் வருகிறது ...
இரண்டாயிரத்து பதிமூணு கிலோ வத்தலைப் போட்டு ...
யாகம் செய்யப் போகிறார்களாம் , மழைவர வேண்டுமென்று !
வர்ற மழையையும் விரட்டி விடுவார்கள் போலிருக்கிறது ...
இப்படி சுற்றுச் சூழலைக் கெடுத்து ! 


                                                                  *கோமதீஸ்வரர் சிலை 
கி.பி. 1871-ல் நடைபெற்ற மாபெரும் முடி பூஜையின் போது சில அரசாங்க ஊழியர்கள் சிலையின் எல்லா அவயங்களையும் அளந்தெடுத்தனர். அவைகளாவன:-
                       அடி. அங்  
கால் முதல்
காது வரை --  50     
காதின் அடிப்
பாகம் முதல்
தலை வரை --  6.6

கால்களின்
   நீளம்  -----9      
இடுப்பின்
அகலம்,
(சுற்றளவு)-----10.    

இடுப்பு முதல்
காது வரை-----17.3
கை முதல்
காது வரை------7.     -  

கால்களின்
முன் அகலம்---4.6
கால் விரல்-----2.      -

காலின் பின்புற
மேல் அளவு.  --6.4
முழங்காலின்
பாதி மேல்அளவு-10.  -

புட்டத்திலிருந்து
காது வரை -----20.6
பின்புறத்தில்
இருந்து காது
            வரை---20.      -
தொப்புளின்
கீழ் வயிற்றின்
     அகலம்,
(சுற்றளவு)----13.      -
மார்பின்
அகலம்,
(சுற்றளவு)-----6.      --
கழுத்தில்
இருந்து
காது வரை-----2.6

ஆள்காட்டி
விரல் அளவு---3.6
2வது விரல்
         அளவு----5.3
3வது விரல்
          அளவு---4.7
சுண்டு விரல்
           அளவு---2.8
சிலையின்
முழு அளவு---57 feet

                          ''எல்லா அளவுகளையும் தெரிஞ்சிக்கிட்டு ,மறுபடியும் எதுக்கு மேலே போறீங்க ?'அந்த  'அளவு 'தெரிஞ்சிக்கிட்டு ஒண்ணும் ஆகப் போறதில்லை ,விடுங்க !''

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

18 comments:

 1. ரசித்தேன் அனைத்தும்.

  ReplyDelete
  Replies
  1. மயிர் பிளக்கிற ஆராய்ச்சி,அருமையிலும் அருமைதானே :)

   Delete
 2. Replies
  1. உண்மையில் துணை சரஸ்வதி தானே :)

   Delete
 3. Replies
  1. கோமதீஸ்வரர் சிலை அளவு எல்லாம் சரியா இருக்கா :)

   Delete
 4. ஏர்பட்ஸ், சரஸ்வதை அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. என்னவொரு ஆராய்ச்சி,என்னவொரு நம்பிக்கை பார்த்தீங்களா ஜி :)

   Delete
 5. அனைத்தும் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. கோமதீஸ்வரர் சிலை அழகாயிருக்கா :)

   Delete
 6. நல்லவேளை! அளவு நிறுத்தப்பட்டது! த ம7

  ReplyDelete
  Replies
  1. நிறுத்தப் பட்டதா ,மறைக்கப் பட்டதா ::)

   Delete
 7. நீங்களே..! சொன்ன பிறகு....அந்த 'அளவு 'தெரிஞ்சிக்கிட்டு ஒண்ணும் ஆகப் போறதில்லைன்னு ,விட்டுவிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. ஆனால் பலரும் மவுஸை திருகிக் கொண்டே இருக்கிறார்களே:)

   Delete
 8. இதுக்குத்தான் பிளாட்(டே) பார்ம் பண்ண வேணாமுன்னா கேட்டாத்தானே...!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கினால் ,அதுவும் கன்பார்ம் ஆகணும்னு சொல்வாங்களோ :)

   Delete
 9. * குறியிட்ட பதிவே இல்லையா
  என்ன செய்யலாம் ப்லாட்ஃபார்ம் டிக்கெட்டே வாங்காமல் இருக்கலாம்தானே
  ஆராய்ச்சி முடிவு பெற்றதா
  நல்ல ப்ராக்டிகல் பையன்
  பூனைக்கு நாக்கு சுட்டு விட்டதா
  நம்பினோர் தும்முவதில்லை நான்கு மறை தீர்ப்பு
  இந்த அளவுகளை சரியா என்று யாராவது சோதிக்கப் போகிறார்களா

  ReplyDelete
  Replies
  1. சிலை அழகில் மனத்தைப் பறி கொடுத்து விட்டீங்க ,அதான் ,அந்த தலைப்பில் உள்ள குறி தெரியாமல் போய் விட்டது :)
   காதுக் குடைச்சல் அதற்குள் நின்று விட்டது :)
   நிச்சயமா பாஸாயிடுவான்தானே :)
   பூனைக்கு இப்படியும் சூடு வைக்கலாமோ :)
   மிளகாய்க்கு தும்மாமல் இருக்கமுடியாதே :)
   சாரம் கட்டி சோதிக்கத் தான் விடுவார்களா :)

   Delete