5 October 2017

*சொப்பன சுந்தரியோட காராய் இருக்குமோ இது :)

அன்பார்ந்த வலையுலக உறவுகளே ,
               சரியாக ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ,இதே நாளில்தான் வலையுலகத்தை ஒரு ஏழரைச் சனி பிடித்துக் கொண்டது!அந்த ஏழரைச் சனி  தன்னை 'ஜோக்காளி'என்று அறிமுகப் படுத்திக் கொண்டதையும் மறந்து இருக்க மாட்டீர்கள்  என்று நம்புகிறேன் ! என்னவொரு பொருத்தம் பாருங்கள் ,இன்றோடு பக்கப் பார்வைகளின் எண்ணிக்கையும் 'ஏழரை 'லட்சத்தைத் தாண்டப் போகிறது !
        இன்று ஆறாவது பிறந்த நாளிலும் தொடரும் உங்கள் அன்பான ஆதரவுக்கு நன்றி :)
            
 *சொப்பன சுந்தரியோட காராய் இருக்குமோ இது :)       
            ''நான் உயில் எழுதும்போது ,நம்ம காரை அசையும் சொத்துக் கணக்கில் காட்டகூடாதா ,ஏண்டா ?''
              ''அது ஓடாமத்தானேப்பா நிக்குது !''
இவர் வீட்டுக்கு வரலேன்னு யார் அழுதா :)
           ''இது உங்க வீடு மாதிரின்னு சொல்லிட்டேன் ,வர்றேன்னு சொல்லிட்டுதான் வரணுமா ?''
             ''சொன்னாதானே , டாய்லெட் எல்லாம் கிளீன் பண்ணி வைக்கிறீங்க !''

மனைவி கையால்  குட்டுபடவுமா கொடுத்து வைச்சிருக்கணும்:)
            ''என்னது ,என் நல்லதுக்குதான்  வைர மோதிரம் கேட்கிறீயா?''
             ''ஆமாங்க ,குட்டுபட்டாலும் மோதிரக் கையால் குட்டுபட்டேன்னு சொல்லிக்கலாம் இல்லையா ?''

இதுவல்லவோ நாணயம்:)
           ''அவர்  சொன்ன  வார்த்தையை   காப்பாத்துறதிலே  நாணயமானவரா , எப்படி?''
           ''ரெண்டே நாள்லே  திருப்பி தர்றேன் ...இல்லைன்னா  பேரை  மாத்திக்கிறேன்னு கடன்  கேட்டார் ..சொன்ன மாதிரி  நாணயமா பெயரை  மாத்திக்கிட்டாரே !''

பயணிகள் மட்டுமல்ல ,பதிவர்களும் தெரிஞ்சுக்க வேண்டியது :)
வெளிநாட்டிற்கு செல்லும் சீனர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது சீன அரசு ...
அது அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல ...
எல்லா  நாட்டு மக்களுக்கும்  பொருந்தும் !
நம் பதிவர்களுக்கு எப்படி பொருந்தும் என்றால் ...
      பொது கழிப்பிடங்களில் நீண்டநேரம் இருக்க வேண்டாம் !
[பதிவைப் பற்றி வெளியே வந்து யோசிங்க ]
      கழிப்பிடங்களை அசுத்தம் செய்யாதீர்கள் !
[உங்களின் பதிவு படிப்பவர் மனதில் வக்கிர எண்ணங்களை உருவாக்கக் கூடாது ]
      பொது இடங்களில் மூக்கை நோண்டக்கூடாது !
[பதிவுக்கு மண்டையை குடைந்துக்கலாம் ,மூக்கை நோண்டக் கூடாது ]
      நூடுல்சோ ,சூப்போ உண்கையில் சத்தம் வரக்கூடாது !
[நம் பதிவு  படிப்பவரின் பொறுமையை 'உறிஞ்சி'டக் கூடாது ]
     விமானங்களில் தரப்படும் உயிர் காப்பு உடைகளை திருடாதீர்கள் !
[சிந்தித்து எழுதுபவன் பதிவர் ,காப்பிபேஸ்ட் செய்வதும் திருட்டுதான் ]
மிக மிக முக்கியம் ...
     நீச்சல் குளத்தில் சிறுநீர் கழிக்காதீர்கள் !
[பதிவைப் போடும் போது  பதட்டமோ ,பயமோ இருந்தால் மேற்கண்ட காரியம் தானாகவே நடந்து விடும் !] 

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)

34 comments:

 1. ஆவ்வ்வ்வ் எங்கட சொப்பன சுந்தரியைப் பற்றிக் கதைக்கிறீங்களோ என ஓடி வந்தேன்:). இது வேற சொப்பனாக்கா:)... 7 அரைச் சனிக்கு வாழ்த்துக்கள் பகவான் ஜீ:).. ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்சு:).. 6ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.. தொடர்ந்து கலக்கவும்.. முதலிடத்தில் இருக்கவும்.. மகுடம் சூட்டவும் வாழ்த்துகிறேன்..

  ஊசிக்குறிப்பு:- இடைக்கிடை சொப்பன சுந்தரியை என் தலைக்கும் அனுப்போணும் சொல்லிட்டேன்ன்:).. இல்லை எனில் வாழ்த்தை வாபஸ் வாங்கிடுவேன்....
  பீஈஈஈஈ கெயார்ஃபுல்.. ஹையோ இது எனக்குச் சொன்னேனாக்கும்:).

  ReplyDelete
  Replies
  1. மகுடம் என் தலைக்கு வந்ததும் ,நாளைக்கே உங்க தலைக்கு மாற்றி விடுகிறேன் ,டீலிங் சரியா :)

   Delete
 2. ///இதுவல்லவோ நாணயம்:)//

  ஹா ஹா ஹா இதைத்தான் எங்கள் ஊரில் சொல்வார்கள்... “ நான் சொன்னபடி நாளைக்கு முடிச்சுத் தருவேன்.. இல்லை எனில் என்னைப் பூஸ் எனக் கூப்பிடு” என”.. ஹா ஹா ஹா அதாவது பெயரை மாத்துவேன் என்பது:)

  ReplyDelete
  Replies
  1. நேற்று வோட் போட்டனே இப்போ தற்செயலாகப் பார்க்கிறேன் போடவில்லை எனக் காட்டுதே கர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
  2. பூஸ் என்றால் காசு திரும்ப வரவா போவுது :)

   Delete
  3. சரியா தானே காட்டுது ,கண்ணில் என்ன மாயமோ :)

   Delete
 3. ஆறாவது பிறந்த நாளுக்கு எங்கள் வாழ்த்துகள். மென்மேலும் உயர்க.

  அசையா சொத்து ஜோக் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திலேயே 'எங்கள் பிளாக்' ஆ'சிரியர்கள் 'தெரிகிறார்களே :)

   ஓட்டைக் கார் என்று எப்படி நக்கல் பண்றான் :)

   Delete
 4. வாழ்த்துக்கள் நண்பரே
  தம+1

  ReplyDelete
  Replies
  1. மோதிரக் கையால் குட்டு பட்ட மாதிரி இருக்கு ,உங்கள் வாழ்த்தால்:)

   Delete
 5. ஏழரை லட்சம் பல மடங்குகளாகப் பெருகிட வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. எந்த ஏழரை வந்தாலும் இந்த ஏழரையின் தடுக்க முடியாது :)

   Delete
 6. எண்ணிக்கை மேலும் உயர உயர வேண்டி வாழ்த்துகள் ஜி

  ReplyDelete
  Replies
  1. எதிரிகள் பெருகிவிட்டார்கள் ,சீக்கிரமே எண்ணிக்கை உயர்ந்து விடும் ஜி :)

   Delete
 7. 6 ஆம் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் ஜி....மேலும் உயரவும் வாழ்த்துகள்....

  ReplyDelete
  Replies
  1. இப்போது பொறந்த மாதிரி இருக்கு ஜி ,ஆறாம் வயதைத் தொட்டாச்சு :)

   Delete
 8. tha.ma.7 - ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘ஜோக்காளி’க்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கையால் வளர்ந்த பிள்ளைதானே ஜி ,ஜோக்காளி:)

   Delete
 9. சொப்பன சுந்தரி! கவுண்டமணி த ம8

  ReplyDelete
  Replies
  1. செந்திலையும் மறக்க முடியாதே அய்யா :)

   Delete
 10. Replies
  1. இந்த ஏழரைக்கு அர்த்தம் புரியுது ஜி :)

   Delete
 11. ஆறாவது பிறந்த நாள் காணும் ஜோக்காளி தமிழ் வலைதளத்திற்கு வாழ்த்துக்கள்..!மைனஸ் ஏழரையும் ஆரம்பித்துவிட்டதே...!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. காய்ச்ச மரம்தானே கல்லடி படும் ,கவலையை விடுங்க :)

   Delete
 12. மைனஸ் ஓட்டு.... சொப்பன சு....சுந்தரனுடைய வேலையா இருக்குமோ

  ReplyDelete
  Replies
  1. இது 'நம்மாளு'வின் திருவிளையாடல்:)

   Delete
 13. வாழ்த்துகள் தங்களுக்கும் வலைத்தளத்திற்கும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள். என்னுடைய புதிய புதிவுகள் தமிழ்மணத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காரணம் புரிந்தால் எனக்கு தகவல் தாருங்களேன். உதவியாய் இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கடைசி பதிவை g+ல் படித்தேன் ,தலைப்பில் முத்தம் ,காமம் ,போன்ற சொற்களும் இல்லையே ..மறுபடியும் முயற்சி செய்யுங்கள் ஜி :)

   Delete
 14. சொப்பன சுந்தரி நான் தானே
  நான் சொப்பன லோகத்தின் தேன் தானே...!
  காரை நாம வச்சிருக்கோம்... கார வச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சிருக்கா...யாரு வச்சிருக்கா... யாரு வச்சிருக்கா... ?!

  அஞ்சாத சிங்கம் என் காளை இது
  பஞ்சாப் பறக்கவிடும் ஆளை...!

  7 1/2 நாட்டான் வாழ்க...!

  த.ம.+1

  ReplyDelete
  Replies
  1. யார் வச்சிருந்தா என்ன, அது தெரிஞ்சிகிட்டு நமக்கென்ன ஆகப் போவுது :)

   Delete
 15. புதிய ஆண்டிலும் வெற்றி நடைபோட வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. இனி சொல்லவா வேணும் ,நீங்களும் நகைச்சுவை முகநூல் ஆரம்பித்து விட்டீர்களே :)

   Delete
 16. நகைச்சுவையாக எழுதுவது சிரமம் அதையும் பலர் ரசிக்கும் படி எழுதுவது இன்னும்சிரமம் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஊக்கம் தரும் உங்களைப் போன்றோரின் கருத்துக்கள் தான் இன்னும் என்னை எழுத வைத்துக் கொண்டிருக்கின்றன:)

   Delete