Tuesday, 17 January 2017

சிக்னல் கொடுத்தாலும் தப்பா :)

சீனா  அன்றும் ,இன்றும் :)
               ''சீனப் பெருஞ்சுவர் கட்டியவர்கள்  சீனர்கள்தான் என்பதை  ஏன் நம்ப முடியலே ?''
               '' Anything made in China is No guarantee & No warrantee ன்னு சொல்றாங்களே !''

சீக்கிரம் கல்யாணமாக இதையும் நம்புவார்களா :)
              ''இப்போதெல்லாம் மணத்தக்காளி கீரைக்கு அதிக கிராக்கியா இருக்கே ,ஏன் ?''
               ''எவனோ ஒருத்தன், 'மண'த்தக்காளிக் கீரையை தினமும்  சாப்பிட்டா ,திருமணம் தள்ளிப் போகாதுன்னு ஆருடம் சொல்லி இருக்கானாமே!''

சிக்னல் கொடுத்தாலும் தப்பா :)          
                 ''பஸ்  விபத்து ஆனதுக்கு டிரைவர் ஆன ,நான்தான் காரணம்னு  எப்படிச் சொல்றீங்க ,பாட்டி  ?''
               ''வெளியே கையை நீட்டாதீர்கள் என்று எழுதிப் போட்டுட்டு ,நீங்களே கையை அடிக்கடி வெளியே நீட்டினதை நானும் கவனிச்சுக்கிட்டு தானே வந்தேன் !''

கணவன் மனைவியிடம் இப்படிச் சொன்னா என்னாகும் :)
            ''ஏனுங்க முதலாளி ,உங்களுக்கே இது நியாயமா ?மாட்டுப் பொங்கல் அன்னைக்கி போய் புது டிரஸ் கொடுக்கிறீங்களே ?''
              ''நீதானே மாடா  உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருந்தே ?''

வடிவேலுவின் 'அவனா நீ ' இவருக்கும் பொருந்தும் :)
               ''இப்போதெல்லாம் தலைவர் 'நீயும் நானும் ஓரினம் 'னு  சொல்றதே இல்லையே ,ஏன் ?''
               ''ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்னு  தீர்ப்பு வந்திருச்சே  !''

இதுவும் பெரியார் பிறந்த மண்ணில்தான் :)
வத்தலக்குண்டு  அருகில் உள்ள இரண்டு கோவில்களில் நடைபெற்று இருக்கும் வினோத நேர்த்திக்கடன் விழாவைப் பற்றி அறியும்போது ...
சிரிக்கத்தான் தோன்றுகிறது ...
நேர்த்திக்கடனாக கொண்டுவந்த லட்சம் வாழைப்பழங்களை படைத்து பூஜை செய்தபின் ...
கூட்டத்தை நோக்கி வானத்தில் சூறை
இட்டார்களாம் ...
அதை வாயால் கவ்வியும் ,கையால் பிடித்தும் பக்தர்கள் சாப்பிட்டார்களாம்...
பழம் சாப்பிட்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள் ...
அவர்களுக்கு சொர்க்கலோகத்தில்  நிச்சயம் இடம் கிடைக்குமென்று தோன்றுகிறது !
இதைவிட கொடுமை ...
இன்னொரு கோவிலில் ...
நேர்த்திக்கடனாய் வந்தது ...
3 அடி முதல் 1 9 அடி நீளமுள்ள அரிவாள்களாம்...
அதுவும் ஒன்றல்ல ,இரண்டல்ல ஐந்நூறாம்...
நல்ல வேளை ,இதை அவர்கள் சூறை விடவில்லை ...
இந்த அரிவாள்கள் எல்லாம் பூப்பறிக்க மட்டுமே பயன்படும் என்றே நம்பத் தோன்றுகிறது !
ஹும் ...இந்தியா செவ்வாய்க்கு ராக்கெட் விடுகிறதாம் !

Monday, 16 January 2017

குறள் படிக்கும் போதும் நயன்தாரா நினைப்பா :)

கலைவாணர் அன்று சொன்னது ,இன்று உண்மையாச்சு :)
               ''அந்த சலூன்லே தீஞ்ச நாற்றம் வருதே ,ஏன் ?''
                ''அந்த கடைக்காரர்  முடி வெட்ட கத்திரிக்குப் பதிலா நெருப்பைப் பயன்படுத்துறாராமே !''
                (இதை உங்களாலும் நம்ப முடியவில்லையா ? 'நெருப்பை பயன்படுத்தி மூடி வெட்டும் 'வீடியோவை க்ளிக்கி பாருங்க :)

இப்படித் தானே படங்கள் வந்துகிட்டிருக்கு :)
          ''அந்த இயக்குனடரோட எல்லாப் படங்களிலும் ஒரே ஃ பார்முலா தானா ,எப்படி ?''
           ''ஹீரோவுக்கு 'துணி 'ச்சல் அதிகமாவும்  ,ஹீரோயினுக்கு  'துணி 'கம்மியாவும்  இருக்கும் !''

இப்படி 'போட்டு வாங்கிறவன் 'கிட்டே ஜாக்கிரதையா இருங்க :)
           ''பெயர்தான் இருபது ரூபாய் ,மதிப்பே இல்லாமே போச்சு !''
          ''நீங்க சொல்றது 1௦௦ /1௦௦ உண்மை !''
          ''தெரியுதில்லே ,கைமாத்தா பத்து ரூபாய் கேட்டா ஏன் இல்லேங்கிறீங்க?''

சில ஆண்டுக்கு முன் நான் செய்த 'சிரிகுறள்' ஆராய்ச்சி  ........
குறள் படிக்கும் போதும் நயன்தாரா நினைப்பா :)
            ''திருக்குறள் படிச்சுகிட்டு இருந்தே ,தீடீர்ன்னு மூடிட்டியே ,ஏன் ?'
            ''நயன்சாரான்னு  ஆரம்பிக்கிற குறளை பார்த்ததும்  மூட் அவுட் ஆயிடுச்சு !''
திருக்குறள்: 
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 
பண்பில்சொல் பல்லா ரகத்து.
சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

வடு மாங்காய் ஊறுதுங்கோ !
       ''ஆறாதே நாவினால் சுட்ட வடு ..இதுக்கு என்ன அர்த்தம் ?''
       ''வடுமாங்காய் சுவையை  நா மறக்காது என்பதுதான் அய்யா !''

திருக்குறள்
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும்= ஒருவனை யொருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்;
நாவினால் சுட்ட வடு ஆறாது= அவவாறு அன்றி வெவ்வுரையை உடைய நாவினால் சுட்டவடு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.

இன்சுலின் ஏதடா வள்ளுவர் காலத்தில் ?
          ''நான் இன்சுலின் போட்டுக்கிற விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?'' 
         ''இனிய சொலின்னு எழுதச் சொன்னா ,உங்க பையன் இன்சுலின்னே எழுதுறானே !'
திருக்குறள்:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

காக்க காக்க நா காக்க !
         ''யாதவராயினும் நாகாக்க ........''
         ''போதும்போதும் நிறுத்துடா ,உன்னாலே  வகுப்பிலே ஜாதிப் பிரச்சினை உண்டாயிடும் போல !''

திருக்குறள் :
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
சாலமன் பாப்பையா உரை:
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

Sunday, 15 January 2017

பஞ்சணையில் படுக்கும் முன் :)

           ''தூங்கிறதுக்கு முன்னாடி காதுலே பஞ்சை வச்சிக்கிறீயே, பனி நுழையக் கூடாதுன்னா?'' 
           ''அதை விட முக்கியம் ,உங்க குறட்டைச் சத்தம் நுழையக் கூடாதுன்னுதான் !''          ''

இதற்கு  பரிகாரமே இல்லையா :)
            ''ஏழரைச் சனி முடியும் போது  நிச்சயம்  உங்களுக்கு கல்யாணமாயிடும் !''
         ''அப்படின்னா ,சனி வேற ரூபத்தில்  தொடர்ந்து வரும்னு சொல்றீங்களா ?''
மருமகள் சுத்தச் சோம்பேறியா :)
           ''உன் மருமக  சுத்தச் சோம்பேறியா  ,ஏன் ?''
          ''அந்த காலத்தில் , உரல்லே மாவாட்டி வழிச்சி எடுத்தோம் ,அவ என்னடான்னா பாக்கெட் மாவைக் கூட வழிச்சி எடுக்க மாட்டேங்கிறாளே !''

மாட்டை அடக்குவதா ஆண்மை :)
          ''ஓடிப் போனது என் பெண்டாட்டி ,நீங்க ஏண்டா ஓவரா ஃபீல் பண்றீங்க ?''
          ''ஒரு காலத்தில் நீ ஜல்லிக்கட்டு மாடுகளை அடக்குவதில் சாம்பியன்,அதை நினைச்சுதான் !''

பொங்கலும் கசக்குமா ,வாழ்த்தால் :)  
தமிழர் நம் நெஞ்சம் பூரித்தது ...
பொங்கல் tvசிறப்பு நிகழ்ச்சியில் வந்த 
வட இந்திய  நடிகையின் 
'போங்கள் வால்தால்'! 

Saturday, 14 January 2017

'ரிஸ்க்' எடுத்து கொடுத்த பொங்கல் புடவையோ :)

வீட்டுக்கு போனதும் இவருக்கு இருக்கு 'பொங்கல் ':)
            '' கண் ஆபரேசன்  செய்த  டாக்டர்  நீங்களே ,என் கணவரோட கண்கட்டை ஏன் பிரிக்க மாட்டேன்னு சொல்றீங்க ?''
           ''முதல்லே யாரை  பார்க்க விரும்புறீங்கன்னு கேட்டதுக்கு 'நர்ஸ் நளினாவை 'ன்னு சொல்றாரே !''

பொங்கல்னா இதுதான் பொங் 'கல் ' :)
            ''இதுவரைக்கும் நீ  இப்படி பொங்கல் வச்சு நான் சாப்பிட்டதே இல்லே !''
            ''அவ்வளவு டேஸ்ட்டா?''
            ''அட நீ வேற ...பொங்கல்லே  அவ்வளவு கல்லு கிடந்ததுன்னு சொல்ல வந்தேன் !''

 ரிஸ்க் எடுத்து கொடுத்த பொங்கல் புடவையோ :)
        ''நீ கட்டிக்கிட்டு இருக்கிற புதுப் புடவை சூப்பரா இருக்கே ,எங்கேடி  எடுத்தே ?''
         ''என் வீட்டுக்காரர் கிட்டேதான் கேட்கணும் ,ஜெயிலில் இருந்து வரட்டும் !''

பொண்ணோட அழகு உலகப்பிரசித்தம் போலிருக்கே :)
             ''வாடிவாசல் வழியா வந்த ,தலைவரோட மாட்டை மட்டும்  யாரும் பிடிக்காம ஒதுங்கிட்டாங்களே...ஏன் ?''
             ''அடக்கிறவங்களுக்கு பரிசா தன் பெண்ணைக் கொடுக்கப் போறதா சொல்லி இருகிறாரே !''

சொல்வது ஒன்று ,செய்வது ஒன்றுமாய் நம் அரசியல்வாதிகள் :)
உயர்நீதி மன்றத்தில்  தமிழில் 
வாதாடக் கூடாது என்பதைக் கேட்டதும் 
இரத்தம்  கொதித்தது ...
காரணங்களை  கேட்டபோதுதான்  புரிந்தது .
தமிழ் தமிழ் என முழங்கும் தலைவர்கள் ...
செய்ய வேண்டிய அடிப்படையான சட்டத் திருத்தங்களைச் செய்யாமல் ...
நம்மை ஏமாற்றுகிறார்கள்  என்று !

Friday, 13 January 2017

அந்த 'அந்தரங்கம் ' இல்லை இது :)

அப்பனின் கோபம் நியாயம்தானே :)
         ''இப்படி கோபம் வரும் அளவுக்கு, பையன் என்ன செய்தான் ?''
     
          ''இந்த கண்கள் படம் இருந்த இடத்தில்  
இந்த கண்கள் படத்தை  ஒட்டி இருக்கானே!''

அதிகாலை  தூக்கம் அதிக சுகம்தானே :)             
            ''என்னங்க ...இன்று மாசப் பிறப்புன்னு நீங்களாவது சொல்லக்கூடாதா?காலையில் ,வாசலில்  தண்ணி தெளிச்சி ,கோலம் போட்டிருப்பேனே , ?''
           ''நல்ல நாளும் அதுவுமா தூங்கக் கூடாதுன்னு ,முதல்லே என் மூஞ்சியிலே தண்ணி தெளிப்பே  ,அதான் சொல்லலே  ?''

அந்த 'அந்தரங்கம் ' இல்லை இது  :)
             ''நானோ நடிகை ,நீங்களோ தொழில் அதிபர் ...புதுமையா நம்ம கல்யாணத்தை ஏன் விமானத்தில் வச்சுக்கக் கூடாது ?''
            ''ஆரம்பமே அந்தரத்திலான்னு  யோசனையா இருக்கு !''

இவன் லாயரானால், காதலிகூட மனைவி ஆகமாட்டாள் :)
           ''என் பையன் எதிர்காலத்தில்  லாயரா வருவான்னு எப்படி சொல்றீங்க ?''
             '1 9 3 2 ல் பிறந்தவருக்கு இப்போ என்ன வயசு இருக்கும்னு கேட்டா ...அவர் உயிரோட இருக்காரா ,இல்லையான்னு கேட்கிறானே !'' 

சீனப்பெருங் 'சுவரில்' முட்டிக்கணும் போல இருக்கு :)
         ''நிலவில் இருந்து பார்த்தாலும் சீனப்பெருங்சுவர் தெரியுதாமே!''
           ''இதிலே என்ன அதிசயம்,சீனப்பெருஞ்சுவரில் இருந்துப் பார்த்தாலும் நிலா தெரியுமே ?''

பெட் காபி ரொம்ப பேட் , பெட் வாட்டர் தான் பெஸ்ட் :)
      அதிகாலை உமிழ்நீர் இரைப்பைக்கு நல்லது !
      வெறும் வயிற்றில் தண்ணீர்  பருகுதல்  நல்லது !
      மாறா இளமைக்கு இயற்கை மருத்துவமே  நல்லது !
       நமக்கெது  நல்லது என்று நாமே உணர்வது நல்லது !

Thursday, 12 January 2017

காதலி செம உஷார் பார்ட்டிதான் :)

இது ஒரு கோவைக் கலாட்டா :)                
            ''நம்ம ஊர் பழம் இருக்கான்னு கேட்டா ,என்ன  பதில் சொல்றது ?''
            ''அட ,கோவைப் பழம் இருக்கான்னு கேட்டேன் !''
           (இதுக்கும் ,கீழேயுள்ள படத்துக்கும் என்ன சம்பந்தம்னு யோசிச்சுச் சொல்லுங்க :)

மஞ்சள் நிறம்தான் அவருக்கு  பிடிக்கும் :)
   ''வியாபாரத்திலே திவால் ஆனவர் ,இப்ப பொண்ணோடகல்யாணத்தை ஆடம்பரமா செய்றாரே ,எப்படி ?''
                               ''அந்த மஞ்சள் நோட்டீசில் சம்பாதித்ததை ,இந்த மஞ்சள்          நோட்டீசில் செலவு பண்றார் !''  

காதலி செம உஷார் பார்ட்டிதான் :)              
           ''டார்லிங் ,இன்னைக்கு ரீலிஸ் ஆகியிருக்கிற 'சேஷ்டை ' படத்திற்கு   போய்தான் ஆகணும்னு  ஏன் சொல்றே ?''
           '' 'ஹவுஸ் புல்'  தியேட்டரில் உங்க 'சேஷ்டை' இருக்காதுன்னுதான் !''

ரொம்ப வெவரமான பயபுள்ளே :)
         ''என்ன தம்பி ,என் தலைக்கு மேலே  எரியுற டியூப் லைட்டைக் கழட்டிக் கொடுக்கச் சொல்றே ?''
          ''நல்லா  எரியுற லைட்டா  பார்த்து  வாங்கி வரச் சொல்லியிருக்கார் எங்க அப்பா !''

எழுத்துப் பிழையா ?வேணும்னே செய்ததா :)                                                     
      ''வாத்தியார் வீட்டுக் கல்யாணத்திற்கு போவதா ,வேண்டாமான்னு இருக்கா  ,ஏன்  ?'' 
     ''பத்திரிக்கை முதல் வரியில் 'மொய் பொருள் காண்பது அறிவு 'ன்னு எழுதி இருக்காரே !''

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா :)
   கொள்ளைப் போன பொருள் கிடைக்க வேண்டுமென 
   வேண்டுதல்  காணிக்கையை ...
   செலுத்த தேடிய போது காணவில்லை ....
   உண்டியலை !

Wednesday, 11 January 2017

' தண்ணி வண்டி' லீவு கேட்டால் இப்படியா :)

         ''மேனேஜர் சார், பொய்யானக் காரணத்துக்கு  லீவு தர மாட்டேன்னு  சொல்றீங்க சரி  , எனக்கு ஏன்  தர மறுக்குறீங்க   ?''
          ''ஊருக்கு போய் இருக்கிற பெண்டாட்டியைக் கூட்டி வரப்போறேன்னு கேட்குறீங்களே  !''

மக்கு பயபுள்ளே கூட மார்க் வாங்கும் தந்திரம் :)
          ''பரவாயில்லையே , அந்த ஸ்கூல்லே இதுவரை யாருமே ஜீரோ மார்க் வாங்கியதில்லையாமே !''
         ''அட நீங்க வேற , கேள்விகளை  அழகா எழுதியிருந்தாலே...குட் ஹாண்ட்ரைட்டிங்னு  போனஸ் மார்க்கை போட்டுடுவாங்களாம் !''

ஆத்தீ...ஆத்திச் சூடியை இப்படியா புரிஞ்சுக்கிறது ?
            ''என்னடா சொல்றே .ஔவையார்  ரெண்டு பேருக்கு ரெண்டு விதமா அட்வைஸ்  சொல்லி இருக்காங்களா ?''
            ''ஏற்பது இகழ்ச்சின்னு பிச்சைக்காரனுக்கும் ,ஐயமிட்டு உண்னு  பணக்காரனுக்கும் சொல்லி இருக்காரே  !''

எள்ளுன்னா எண்ணையாய் நிற்கும் அடியாட்கள் :)
      ''தலைவரோட அடியாட்கள் ரொம்ப வேகமா இருக்காங்களா, எப்படி ?''
     ''தலைவர் 'கொல் 'னு  சிரிச்சாக் கூட அரிவாளை தூக்கிடுறாங்களே !''    

100க்கு பக்கம்தான் 108ம் :)
    100 கிலோமீட்டர் வேகத்தில்
    வாகனத்தில் சென்றவனின் கதி ...
   108 வாகனத்தில் சோகத்தில் !

Tuesday, 10 January 2017

இவனுக்கு யாராவது பொண்ணு தருவாங்களா :)

இப்படியுமா சந்தேகம் வரும் :)      
           ''உனக்கென்ன சந்தேகம் ,கேளு ?''
          ''wயை ஏன் டபுள் யுன்னு சொல்லணும் ,டபிள் வீன்னுதானே  சொல்லணும் ?''

கைநாட்டு  பேர்வழியா இருப்பாரோ :)                        
          ''டாக்டர் பட்டம் பெற நம்ம தலைவருக்கு தகுதி இருக்குன்னு எப்படி சொல்றே ?''
           ''அவர் எழுதினாலும் புரிய மாட்டேங்குதே !''

இதுவல்லவா தொழில் தர்மம் :)
        ''என்னங்க ,கொள்ளைக்காரங்க எப்படியும் பீரோவை உடைச்சி கொள்ளை அடிக்கத்தான் போறாங்க ,பேசாம பீரோ சாவியை அவங்ககிட்டே கொடுத்துடுங்க !''
         ''கொடுத்தேன் ,கஷ்டப் படாம சம்பாதிச்ச  காசு உடம்புலே  ஒட்டாதுன்னு சாவியை வேண்டாங்கிறாங்களே !''

இவனுக்கு யாராவது பொண்ணு தருவாங்களா :)
           ''பிரைவேட் எம்ப்ளாய்மென்ட் சென்டர் நடத்துற வரனை ஏன் வேண்டவே வேண்டாம்னு சொல்றீங்க ?''
          ''பொண்ணுக்கு எல்லா  தகுதியும் இருக்கு ,பிள்ளை பெத்துகிட்ட அனுபவம் இருக்கான்னு கேட்கிறானே !''

தத்துவத்தைப் புரிந்துக் கொள்வது சுலபமா :)     
    விளங்கிக் கொள்ள முடியலையா ?
    விளக்கிச்  சொல்ல முடியலையா ?
     அட ,அதுதாங்க தத்துவம் !

Monday, 9 January 2017

ஒண்ணு கொடுத்தா போதுமா ,இன்னொண்ணு :)

 இப்படியும் செய்யலாமோ:)
            ''அவர் சரியான கஞ்சப் பிசினாறியா ,ஏன்?''
           ''காலியாகிற டூத் பேஸ்ட்டை  பிதுக்கி எடுக்காம  பூரிக்கட்டையால் உருட்டி எடுக்கிறாரே !''

மாயம் உண்மையானால் ...:)
          ''உங்க கண்ணுக்கு தெரியாம உங்க மனைவியை மறையச் செய்கிறேன் ,அப்பவாவது மேஜிக் உண்மைன்னு நம்புவீங்களா ?''
          ''திரும்ப வரலைன்னா நம்புறேன் !''
ஒண்ணு  கொடுத்தா போதுமா ,இன்னொண்ணு :)
             ''நீங்க தொழில்  தொடங்க கொடுத்த  பெட்டிசனுக்கு பதிலே இல்லைன்னு மந்திரிகிட்டே  கேட்டதுக்கு என்ன  சொன்னார் ?''
             ''பெட்டிசன் வந்திருச்சு ,பெட்டி வரலேயேன்னு கேட்கிறார் !'   

ஓடிப் போகலாம்னு சொன்னவ ஏன் வரலே :)
            ''  ஓடிப் போகலாம்னு அடிக்கடி சொன்னாலும் என்னோட  காதலி ஓடிவர மாட்டாள்னு உனக்கு எப்படி தெரியும் ?''                                              
            ''வானிலை மைய அதிகாரியா இருக்கிற அப்பன் மேலே அவளுக்கு பாசம் அதிகம்டா !''

இல்லறத் துணைக்கு மாஞ்சா கயிறு வேணுமாம் :)                              
             ''என்  மனைவி சண்டையிலே ,நான் கட்டிய மஞ்சக் கயிறை கழற்றிக் கொடுத்துட்டா !''
              ''வேறென்ன வேணுமாம்  ?'' 
             ''மாஞ்சா கயிறைக் கட்டுங்க ,செத்துத் தொலையுறேன்னு சொல்றா !'

Sunday, 8 January 2017

நடிகையான மேஜிக் கன்னி :)

தோல் இருக்க சுளை முழுங்கலாம் :)
        ''ஆரஞ்சுப் பழத்திலே தோல் இருப்பது வசதியாயிருக்கா ,என்ன வசதி?''
       ''உரிச்சு வச்ச தோலிலேயே ,கடிச்சு துப்புற சக்கை ,கொட்டையைப் போட முடியுதே !''
உங்களுக்காவது  தெரியுமா 'அது ':)               
             ''வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே ,கொல்லுதேங்கிற பாடல் வரிகளைக் கேட்டு ஏண்டா  சிரிக்கிறே ?''
             ''அந்த வெண்ணிலா ,இவனை என்னதான் பண்ணும்னு தெரியலியே !''

நடிகையான மேஜிக் கன்னி :)
            ''ஃ டூ பீஸ் உடையில்  உடம்பைக் காட்டி  நடிக்க வேண்டியிருக்கேன்னு  என்னைக்காவது வருத்தப் பட்டதுண்டா ?''
            '' மேஜிக் குழுவில் நான் முன்பு  இருந்தப்ப , என்னை  ஃ டூ  பீஸ் ஆக்கினதுக்கே வருத்தப் படலே ,இதுக்கா வருத்தப் படப் போறேன் ?''  
டிரான்ஸ்பருக்கும் அஞ்சாத தில்லு துரை :)
             ''ஆபீஸிலும் போதையில் இருக்கீயே ,உன்னை தண்ணி இல்லாக் காட்டுக்கு தூக்கி அடிக்கப் போறாங்க !''
             ''அங்கே போனாலும் டாஸ்மாக் தண்ணி  கிடைக்குமில்லே ?''

தூரப் பார்வை மாதிரி ,இது தூரக் காது போலிருக்கே :)
             '' முப்பது வருச  அனுபவத்தில் இப்படி ஒரு நோயாளியை பார்த்ததில்லையா, ஏன் டாக்டர் ?''
             ''நான் பேசுறது காதுலே விழலையாம் ,பக்கத்து தெருவிலே பேசுறது எல்லாம் கேட்குதாமே !''

நியாயம் கேட்கும் நீதிபதியின் பேனா :)
   முனை நசுக்கி குப்பையில் வீசப்பட்ட பேனா  கேட்டது ...
    குற்றவாளிக்கு மரணத் தண்டனை எழுதியது  சரி ...
    எனக்கேன்  மரணத் தண்டனை ?     

Saturday, 7 January 2017

கனவுக் கன்னிக்கு ஏது முதுமை :)

இவரல்லவோ உண்மையான தலைமை ஆசிரியர் :)
            '' அவரோட தலைமுடி மட்டும்  இன்னும் எப்படி கருகருன்னு இருக்கு ?''
            ''அவர்தான்  'தலை  மை 'ஆசிரியராச்சே !''

விந்தையான உலகம் இது :)
          ''என்ன சார் சொல்றீங்க ,மனுசங்களைப்  புரிஞ்சிக்கவே முடியலியா ?'' 
          ''கஷ்டப் பட்டு நடக்கும் போது யாரும் லிப்ட் தர மாட்டேங்கிறாங்க,இஷ்டப் பட்டு வாக்கிங் போனா ,வலிய வந்து லிப்ட் தர்றாங்களே !''

ஆமை புகுந்த வீடும் ,அ .மீனா  புகுந்த வீடும் உருப்படாதா :)               
                  ''மீனாங்கிற என்  மகளோடப் பெயரை மாத்தினாதான், அவளுக்கு புகுந்தவீட்டுக்குப் போற யோகம் வருமா ,ஏன் ?''
                ''உங்கப் பெயர் ஆனாவிலே ஆரம்பிக்கிறனாலே அபசகுனமா நினைக்கிறாங்களே !''

தரகர் சொன்னதும் பொய்யே பொய்யே :)
                ''பொண்ணுக்கு  காது சரியா கேட்காதுன்னு ஏன் முன்னாடியே சொல்லலே?
               ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பானு  சொன்னேனே!''

நாட்டுலே இப்படியும் சில ஆராய்ச்சியாளர்கள் இருக்காங்க :)
    பாம்புச் சட்டையைக் கூட  என்ன பிராண்ட் ,என்ன சைஸ் என்று 
    ஆராய்பவன்தான் ...
    மயிர் பிளக்கும்  ஆராய்ச்சியாளன் !

கனவுக் கன்னிக்கு ஏது முதுமை :)
முந்தைய தலைமுறையினருக்கு கனவுக் கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவியை  ...
அழகி  என்று சொன்னால் யாருக்கும் மாற்று அபிப்பிராயம் இருக்கமுடியாது  ...
இந்தியாவின்  கனவுக்கன்னியான அவரைப் பற்றி ...
நம் இந்திய எந்த மாநில கல்விக்கூட புத்தகங்களிலும் குறிப்பு இருக்கமுடியாது  ...
தமிழின விரோத சிங்கள அரசு ...
சிங்கள மாணவர்களுக்காக வெளியிட்டுள்ள ஏழாம் தரத்திற்கான பாடப் புத்தகத்தில் ...
'தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள் 'என்று குறிப்பிட்டு உள்ளதாம் ...
இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது ...
அழகு என்பது ஜாதி ,மதம்,இனம் .மொழி கடந்து ரசிக்கப் படுவது என்றாலும் ...
இதை இந்த நேரத்தில் சிங்கள அரசு பதின்ம வயதினருக்கான பாடப் புத்தகத்தில் ... சொல்லவேண்டிய காரணம் என்னவாக இருக்கும் ?
அதுவும் தமிழச்சி என்று இனத்தைக் கூறிக் கொக்கரிப்பதாகவே தெரிகிறது !


Friday, 6 January 2017

ஃபாஸ்ட் ஃபுட் ஏழைகள் உணவா :)

ஃபாஸ்ட் ஃபுட் ஏழைகள்  உணவா :)
             ''நின்னுகிட்டு  ஃபாஸ்ட் ஃபுட்  சாப்பிட்டா ,உங்க தாத்தாவுக்குப்  பிடிக்காதா ,ஏன் ?''
             ''அவர் ,ஏழு தலைமுறை 'உட்கார்ந்து' சாப்பிடும்  அளவுக்கு சொத்தை வச்சிருக்காரே !''
வீடு பிடிக்காட்டி இப்படியுமா சொல்றது :)         
            ''நீங்க சொல்ற வாடகையிலே  இந்த  வீடுதான் கிடைக்கும்  ,உங்களுக்கு  பிடிக்குதா?''
            ''வீடா இது? பேசாம to let க்கு   பதிலா  toilet  னு போர்டுலே எழுதச் சொல்லுங்க !''   

இது கிட்ட பார்வையா ,கெட்ட பார்வையா :)
            ''டெஸ்ட் எதுவும் பண்ணாமலே எனக்கு கிட்டப் பார்வை நல்லா இருக்குன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க  டாக்டர் ?''
            ''நர்ஸ் போற பக்கமெல்லாம்  உங்க பார்வை போறதை வைச்சுத்தான்!'' 

போதையில் மிதக்கலாம் (?) தியானத்தில் மிதக்க முடியுமா :)
              ''இன்ஸ்பெக்டர் சார் , என் வீட்டுக்காரரை காணலேன்னு மனு கொடுத்தா ஏன் வாங்க மறுக்கிறீங்க ?''
              ''மொட்டை மாடியில் தியானம் பண்ணிக்கிட்டு இருந்தவர் ,அந்தரத்தில் பறந்து  போனதாச்  சொல்றீங்களே !''

செத்த பிறகாவது நிம்மதியா இருக்க விடுங்க:)
             ''தற்கொலைப் பண்ணிகிட்ட  சாந்தியோட  புருசன் லெட்டர்லே என்ன எழுதி இருக்கிறார் ?''
             ''என் ஆத்மாகூட  சாந்தி அடையணும்னு  யாரும் வேண்டிக்காதீங்கன்னுதான் !''

போட்டோவில்,மனைவிக்கு பின் கணவன் ...:)
    தம்பதிகள் போட்டோவிற்கு 
    'டைட்டில் 'வைக்கும் போட்டி ...
     பரிசை வென்றது .. 
    'புயலுக்கு  பின் அமைதி '

Thursday, 5 January 2017

அதிகம் பேசுவது கணவனா ,மனைவியா :)

ஜோக்காளியை, தொடர்ந்து ஒராண்டு காலம்  ' தமிழ் மண முதல்வனாய்' அழகு பார்த்த வலைப்பூ உறவுகளுக்கு  நன்றி !

கேட்டதில் தப்பு ஒன்றும் இல்லையே :)
              ''சர்வர் ,நூறு கிராம் சாதம் வை !''
               ''என்ன சார் இப்படிக் கேட்கிறீங்க?''
               ''சாதம் இப்படிக் கெட்டியா இருந்தா வேறெப்படி கேட்கிறது ?''

பெரியவங்களை இப்படியா மதிப்பது :)                 
             '' கடைக்காரர் எடை போடும்போது எடை மெஷினையே ஏன் பார்த்துகிட்டே இருக்கார் ?''
              ''ஆளைப் பார்த்து எடை  போடக் கூடாதுன்னு  பெரியவங்க சொல்லி இருக்காங்களே !''

தாலியைக் கழற்றினா கணவன் ஆயுள் குறையுமா :)
           ''என்னங்க ,தூங்கும்போது உறுத்துதுன்னு  தாலியைக் கழட்டி வைக்கிறது ,தப்பா ?''
           '' என் ஆயுள் குறைஞ்சுடுமோன்னு  மனசு உறுத்துதே !''

அம்மா அப்பாவைவிட அதிகம் பிடித்தது :)
             ''என் பிள்ளைக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தர்றதை குறைச்சுக்கணும்னு ஏன் சொல்றே ?''
            ''உனக்கு அம்மா பிடிக்குமா ,அப்பா பிடிக்குமான்னு கேட்டா ,ஐஸ் கிரீம்தான் பிடிக்கும்னு சொல்றானே !'

அதிகம் பேசுவது கணவனா ,மனைவியா :)
           ''செல்போன்லே  அளவுக்கு அதிகமா பேசுறதை நிறுத்து !''
           ''இப்ப நீங்கதான் ,அளவுக்கு அதிகமா பேசுறீங்க ,போதும் நிறுத்துங்க !''

எந்த காரியத்தையும் மனம் லயித்து செய்யணும் :)
   விருந்து சாப்பிடும் போது மருந்தை நினைக்காதே ! 
  மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே ! 
  குரங்கு வெளியில் இருந்தால் விரட்டி விடலாம்  
  மனதில் இருந்தால் விரட்டுவதும் ,தடுப்பதும் 
  நம் கையில்தான் ! 

Wednesday, 4 January 2017

மனைவிக்குமா காலாவதி தேதி :)

ஷ்ச்சு கிச்சுன்னு வர்ற பெயர்தானே இப்போ பேஷன்:)
               '' உன் பெண் குழந்தைக்கு வைக்கிற மாதிரி பெயரைச் சொன்னேன் ,உனக்கேண்டா கோபம் வருது ?''
               ''நாகம்மை ,நாச்சம்மை ,பேனா மைன்னு காலத்துக்கு ஒவ்வாத பெயராச் சொல்றீயே !''

எல்லார்கிட்டேயும் எல்லாமும் சொல்லக் கூடாது :)              
          ''மனைவிகிட்டே, வேலையை  கஷ்டப்பட்டு  செய்வதை விட இஷ்டப்பட்டு செய்யணும்னு சொன்னது தப்பா போச்சா ,ஏண்டா ?''
          ''இனிமேல் சமையலை நீங்களே பார்த்துக்குங்க என்று சொல்றாளே !''
விசுவாசமிக்க இன்ஸ்பெக்டரோ :)
           ''வீட்டிலே நுழைந்தது நாலு கொள்ளைக்காரங்க, ஒருவரை மட்டும் அந்த இன்ஸ்பெக்டர் சுட்டுப் பிடிக்க என்ன காரணம் ?''
           ''மற்ற மூணு பேரும் ஒழுங்கா மாமூல் கொடுக்கிறவங்களாமே!'' 

தொழில்லே கெட்டிக்காரன் தான் :)
         ''அந்தக் கொள்ளைக்காரன் தற்குறி என்றாலும் தொழில்லே கெட்டிக்காரன்னு எப்படி சொல்றீங்க ?''
         ''ஜெயில் கம்பிகளை இதுவரை எண்ணியதே இல்லையாம் ,ஆனால் எப்படிப்பட்ட  ஜன்னல் கம்பிகளையும் வளைச்சுடுவானாமே  !''

மனைவிக்குமா காலாவதி தேதி :)
          ''மனைவி பேரைக் கேட்டா 'காலாவதி''ன்னு ஏன் சொல்றே ?'' 
         ''ஓடிப் போன கலாவதியை வேற எப்படிச் சொல்றது?''
                                                            
வலி நிவாரணி இதைவிட வேறுண்டா:)
  தலைப்பிரசவத்தில் பிறந்தது  சிசுவுடன்  தாயும்தான்  ..
  சிசுவின் அழுகுரல் ஓசை போக்கியது ...
  தாயின்  பிரசவ வலியை !

Tuesday, 3 January 2017

காதல் வளர்வது, உதட்டு மொழியால்தானா :)

       ''உன் காதலி கண்ணால் பேசியது புரிந்தது ,வாயால் பேசுவதுதான் புரியலையா ?''
        ''அவ்வளவு ஸ்பீடா இங்கிலீஷ் பேசுறாளே !''

இனி இவர் 'புவ்வா 'வுக்கு லாட்டரிதான் அடிக்கணும் :)
            ''என்னங்க ,என்னை எதுக்கு லாரி எடை போடும் இடத்துக்கு கூட்டி வந்து இருக்கீங்க ?''
             ''நீதானே எடை பார்த்துக்கணும்னு சொன்னே !''

மாமியார் வீட்டில் இருந்த அனுபவம் :)
             ''வீட்டோடு இருக்க விரும்பும்  வரன் தேவைன்னு சொன்னது தப்பாப் போச்சா ,ஏன்?'
             ''வருசத்திலே பாதி நாள் 'மாமியார் 'வீட்டுலே தான்  இருக்கேன்னு  கொள்ளைக்காரன் வந்து நிற்கிறானே!''

வரப் போற மனைவி எப்படி இருக்கணும் :)
             ''அம்மா ,எனக்கு வரப் போற பொண்ணுக்கு ,ஐஸ்வர்யா கண் ,அனுஷ்கா உயரம் ,நயன்தாரா கலர் ,நஷ்ரியா …''
            ''போதும் நிறுத்துடா ,இப்படிப்பட்டப் பொண்ணை எங்கே தேடுறது ?''
             ''தேடவே வேண்டாம் ,பக்கத்து வீட்டிலேயே நான் பார்த்து வச்சிருக்கேனே  !''

கஞ்சாவைக் கூட அஞ்சாமல் விற்கும் நிலை வந்தால் ...?      
 தமிழர்கள் ஆகிய நாம் பெருமைப்படும் படியான ஒரு சரித்திரச் சாதனை புத்தாண்டில் நிகழ்ந்து உள்ளது ...
புது வருசத்தைக் கொண்டாட தமிழ்'குடிமகன் /ள் டாஸ்மாக்கில் செலவிட்ட தொகை  180 கோடியாம் ...
வெள்ளையன்கூட அவன் புத்தாண்டுப் பிறப்பை இவ்வளவு  
செலவு செய்து கொண்டாடி இருப்பானாவென்று தெரியவில்லை . 
இந்த புதுமை இங்கே நடக்கும் சமயத்தில் ...
அமெரிக்க மாகாணம் கொலராடோவில் இன்னொரு புதுமை அரங்கேறி உள்ளது ...
கஞ்சா பயிரிடவும்,விற்பனை செய்யவும் அரசாங்கமே அனுமதித்து உள்ளது ...
மலேசியா ,சிங்கப்பூரில் கஞ்சா வைத்து இருந்தாலே மரண தண்டனை ...ஆனால் கொலராடோவில் மக்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருக்க சட்ட திட்டம் வகுத்து இருக்கிறார்களாம் ...
1 8 வயதானவர்களுக்கு தினசரி 28 கிராம் மட்டுமே விற்க அனுமதியாம் ...
போதைக்கு அடிமையானவர்கள்  மனமும் உடலும் கெட்டு,நிறைய பொய்பேசுவதாகவும் ,திருட்டு ,கொள்ளை ,பாலியல் வன்முறை ,சமூக விரோத காரியங்கள் செய்வதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன ...
ஆனால் ,ஆள்பவர்களுக்கு கஜானா நிரம்பினால் போதும் போலிருக்கிறது ...
கொலராடோ வழிகாட்டி விட்டது ...
அடுத்த படியாக அமெரிக்காவில் உள்ள மற்ற மாகாணங்களும் இதை பின்பற்றும் ...
அமெரிக்கச் சீரழிவுக் கலாச்சாரம் இங்கேயும்  பரவும்  காலம் வெகு தூரத்தில் இல்லை ...
தெருவுக்கு தெரு அரசாங்கமே கஞ்சாக் கடைகளைத் திறந்து மக்களை  வாழ வைக்கப் போகிறது  !

Monday, 2 January 2017

கல்லறைதானே காதலின் சின்னம் :)

           ''கல்லறைப் பார்க்கப் போனாலும்  சில்லறை வேண்டுமா  ,ஏன்  ?''
           ''தாஜ்மகால் பார்க்க  நுழைவு கட்டணம் நாற்பது ரூபாயாச்சே!''

சிறப்பாக 'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் :)
           ''யோவ் தரகரே ,உங்களுக்கே இது நியாயமா ?''
          ''எது ?''
          ''நான் குடிகாரங்கிறதை மறைத்து  கல்யாணத்தை முடிச்சு வைச்சீங்க சரி ...பொண்ணு ஃபுல்லை ஒரே  மடக்கிலே குடிப்பான்னு ஏன்  சொல்லலை !''
இந்த கொலையிலே நியாயம் இருக்கா :)
           ''பரோல்லெ  வெளியே போய் யாரைக் கொலைப் பண்ணிட்டு  வந்திருக்கே ?''
            '' அமோகமா வருவேன்னு ,எனக்கு பெயர் வைத்தவரைத்தான் போட்டுத் தள்ளிட்டுவந்தேன் !''

இவன் நமீதா ரசிகனாய் இருப்பானோ :)
            ''எதைச் நினைத்தாலும்  பெரிய அளவிலே செய்ய நினைக்கணும்னு ஏண்டா சொல்றே ?''
          ''குதிரைமேல் உட்காரலாம் ,குண்டூசி மேல் உட்கார முடியாதே !''

அளவிற்கு மீறினால் காபியும் போதைதான் :)
           ''என்னை ஏன் ,காபிக்கு அடிமைன்னு சொல்றே?''
            ''காப்பி நியூ இயர் 'ன்னு  வாழ்த்து  அனுப்பி இருக்கிறீயே !''

இந்தியர்களுக்கு 'செவ்வாய் 'தோஷமா :)
      செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உண்டாவென 
      கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசுக்கு  
      தேங்கு தண்ணீரில் ஓங்கி வளரும் டெங்கு கொசுவை 
      ஒழிக்க பணமில்லை ...மனமில்லை !

Sunday, 1 January 2017

விசாரிக்காமல் பொண்ணைக் கொடுத்து விடுவதா :)

இதுக்கு முகத்திலே கரியைப் பூசிக்கவா  முடியும் :)
             ''நானொரு 'பிளாக்கர்'னு சொன்னா யாருமே நம்ப மாட்டேங்கிறாங்க !''
              ''இவ்வளவு  சிகப்பா இருந்துகிட்டு பிளாக்கர்னு சொன்னா எப்படி நம்ப முடியும் ?''

அடிச்சு விடுறதுக்கும் ஒரு அளவு வேணாமா :)
            ''என் பையன் எதிர்காலத்தில்  பெரிய ஞானியா வருவான்னு ஏன் சொல்றீங்க ?''
           ''புத்தரின் போதனைகள் என்று ,அவன் எழுதியிருப்பது எல்லாமே அவனோட போதனைகளா இருக்கே !'' 

மத்திய ஆட்சியாளர்களின் மனநிலை இப்படியிருக்கே:)
          ''புழக்கத்தில் இருக்கிற ரூபாய் நோட்டுக்களுக்குப் பதிலாய் புது நோட்டுக்கள் வந்தா, நல்லது தானே ?''
           ''ஆனால் அதில் காந்திக்குப் பதிலா கோட்சே படம் வந்தா ,நல்லாவா இருக்கும் ?''

விசாரிக்காமல் பொண்ணைக் கொடுத்து விடுவதா :)
             ''பண்ணையார் குடும்பம்னு சொன்னதை நம்பி பொண்ணு கொடுத்து ஏமாந்துட்டீங்களா  ,ஏன் ?''
             ''அவங்களிடம் இருப்பது பாம்பு பண்ணையாம் !''  
                      
இதுவரை எடுத்த சபதங்களில்  இதுதான் சூப்பர் :)
            '' இந்த புது வருசத்திலே 'ஸ்பெசல் 'சபதமா ,என்னது?''
             ''ஏற்கனவே எடுத்த  சபதங்களில் ,ஒன்றையாவது  இந்த வருசத்தில்  நிறைவேற்றணும்னுதான் !''

ஆபாசம் பெண்ணின் உடையிலா ,ஆணின் மனதிலா:)
       பெண்மை வீழ்க வென்று கூத்திடும் கயவர்கள் கூறும் காரணம் ...
       பெண்ணின் உடை கவர்ச்சியாம் !
       ஆணின் உடை கவர்ச்சி என்று எந்தப் பெண்ணாவது 
       ஆணை வன்புணர்ச்சி செய்த சான்று உண்டா ?