31 March 2017

ராத்திரி 12 மணிக்கு முன்னாடி ஒருமுறை ,பின்னாடி ஒருமுறை :)

 படித்ததில் இடித்தது :)
              ''இந்த  நடிகையைப் பார்த்தால் 'செம கட்டை'ன்னு சொல்றதுக்குப் பதிலா 'செம்மரக் கட்டை'ன்னு சொல்லத் தோணுதா ,ஏண்டா ?''
                ''செம்மரக் கடத்தலில் இவங்க கைதாகி இருக்காங்களே !''
இடித்த செய்தி ....நடிகை சங்கீதா சட்டர்ஜி கைது!

இப்படியும் நல்ல குணம்  வருமா :)           
             ''  மாசம் பிறக்கிறதுக்கு முன்னாடியே ,வாடகையை நாணயமா கொடுக்கிற உங்க பையனை எப்படி பாராட்டுவது என்றே தெரியலே !''
            ''அவன் பிறந்ததே வாடகைத் தாய் வயிற்றிலாச்சே ,இதிலே  ஆச்சரியப்பட என்னாயிருக்கு  ?'' 

ராத்திரி 12மணிக்கு முன்னாடி ஒரு  முறை ,பின்னாடி ஒருமுறை :)               
            ''விடிஞ்சா நாற்பதாயிரம் வேணும்... ஏடிஎம் கார்டில் ஒரே நேரத்தில்  பணம் எடுக்க முடியாது ,என்னடி பண்ணச் சொல்றே ? ''  
           ''ராத்திரி 11.59 க்கு  2௦ஆயிரமும்,12.01 க்கு  2௦ ஆயிரமும் எடுக்கலாம் ,இப்பவே ஒடுங்க !''

இருமனம் இணைவது திருமணம் தானே :)
             ''கல்யாண தரகர் முன்பு வெல்டிங் பட்டறை வைச்சுக்கிட்டு இருந்தார்னு எப்படிச் சொல்றே ?''
             ''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே போட்டுக்கிட்டு இருக்காரே!''

கலர் பார்க்க முடியாதவர் ,மாத்திரையில் :)
             ''காலையில் சிகப்பு  ,மதியம் மஞ்சள்  ,ராத்திரி வெள்ளை மாத்திரையும்  சாப்பிடச் சொன்னா ,சைஸ் மாத்தி தரச் சொல்றீங்களே ,ஏன் ?''
              ''டாக்டர் ,நான் வந்திருக்கிறதே கலரே தெரியலைன்னுதானே ?''

சப்பாத்தி போடுமா  சாப்ட்வேர் :)
    அதெப்படி அம்மா ,டிவைடரில் வரைந்ததுபோல்
    அழகான  வட்டமாய் சப்பாத்தி போடுகிறாய் ?
    கேட்டது MCA முடித்த கல்யாண வயது அருமை மகள் ! நடிகை சங்கீதா சட்டர்ஜி கைது!

30 March 2017

மனைவியிடம் வாய்தா கேட்டால் இப்படித்தானாகும் :)

முப்பத்திரெண்டும் விழுந்தவனை என்ன சொல்வது :)       
             ''ஒரு மனிதன் எப்போது முழு மனிதன் ஆகிறான் ?''
             ''முப்பத்திரண்டு பல் முளைத்ததும் !''

தம்பி ஏதோ பிளான் பண்ற மாதிரி இருக்கே :)
           '' ஏண்டா தம்பி ,நான் இராணுவத்தில் சேர்த்தே ஆகணும்னு சொல்றே ?''
           ''தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு சொல்றாங்களே ! ''

 மிஞ்சின்னு பேர் வைத்தவன் தீர்ககதரிசி :)
              ''கால் விரல் அணிகலனுக்கு  மிஞ்சின்னு பேர் வைத்தவன் தீர்க்கதரிசியாத்தான் இருக்கணும்னு ஏன் சொல்றீங்க ,மாமா ?''
              ''என் மகளுக்கு  போட்ட  நகைங்களில் வேற எதுவும் மிஞ்சியிருக்கிற மாதிரி தெரியலையே ,மாப்பிள்ளை !''

மனைவியிடம் வாய்தா கேட்டால் இப்படித்தானாகும் :)
        ''உன் வீட்டுக்காரர் வக்கீலாச்சே ,அவரை ஏன்  டைவர்ஸ் பண்ணிட்டே?''
        ''எதைக் கேட்டாலும்  அடுத்த மாசம் பார்ப்போம்னு 'வாய்தா 'கேட்கிறாரே !''

தலைவலி தனக்கு வந்தா தான் தெரியும் :)
            ''என் பொண்ணு வீணை  கத்துக்கிறதுலே,என்னைவிடநீங்கதான் சந்தோசமா இருக்கீங்க ,ஏன் சார் ?''
            ''காலி பண்ண மாட்டேன்னு  சொன்ன  பக்கத்து போர்சன்காரங்க  சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்களே !''
             ''இவ்வளவு நல்லது பண்ண எங்களுக்கு நீங்க என்ன செய்யப் போறீங்க ?''
            ''இனிமேலும் வீணையை விடலேன்னா நீங்களும் வீட்டைக் காலி பண்ண வேண்டியிருக்கும் !''

பெண் மனது மட்டும் ஆழமில்லே :)
கடலில் மூழ்கியவர்களைக் கூட காப்பாற்றி விடலாம் ...
டாஸ்மாக் கிளாஸில்  மூழ்கியவர்களை
ஒன்றும் செய்ய முடியாது !

29 March 2017

கணவன் வேகத்திற்கு இரண்டு தேவைதானே :)

 அடிக்கிற வெயிலுக்கு தேவைதானே இது :)      
           ''அந்த லேடீஸ் ஒன்லி கடையிலே கூட்டம் அலை மோதுதே ,ஏன் ?''
          '' புதுசா, ஜன்னல் வைச்ச நைட்டி வந்திருக்காம்!''   
பீரோ சாவியை வாங்கிக்குவாளோ:)
               ''உன் மனைவி ஜென்மத்துக்கும் சமையல் செய்ய மாட்டாள் போலிருக்கா ,ஏன் ?''
               ''காக்கா வலிப்பிலே துடிக்கிறப்போ கூட ,இரும்பு கரண்டியை கையிலே வாங்க மாட்டேங்கிறாளே !''

காதலனை இப்படியா நோகடிப்பது :)

               ''இவரோட காதலி , இதைப் படித்தால் என்ன வேண்டிக்குவா  ?''
               ''நல்ல வேளை, வண்டி நம்பர்லே AK கிடைச்சமாதிரி ,இவன் கைக்கு AK47 துப்பாக்கி கிடைக்காம  இருக்கணும்னுதான் !''

கணவன் வேகத்திற்கு இரண்டு தேவைதானே :)
                "எதுக்கு இரண்டு தோசைக்கல் வாங்குறே ?"
                "உங்களுக்கு சுடச் சுட தோசை வேணும் ,தோசை வேகிற வேகத்தைவிட, நீங்க அதை உள்ளே தள்ளுற வேகம் அதிகமா இருக்கே  !"'

இப்படித் தானே படங்கள் வந்துக்கிட்டிருக்கு :)
                 ''அந்த இயக்குனடரோட படங்களில் ஹீரோ ஹீரோயின்கள் எப்படி  ?''
                  ''ஹீரோவுக்கு 'துணி 'ச்சல் அதிகமாவும் ,ஹீரோயினுக்கு 'துணி 'கம்மியாவும் இருக்கும் !''

பழி ஓரிடம் ,பாவம் ஓரிடம் :)
அடாவடியாய் பேசுவதென்னவோ நீ ...
பாதிக்கப் படுவது மட்டும் நாங்களா ?
முப்பத்து இரண்டு பற்கள் கேட்டன ஒற்றை நாக்கிடம் !

28 March 2017

வயசுக் கோளாறுக்கு சந்தோசப் பட முடியுமா :)

கட்சிக்கு வேற சின்னமா கிடைக்கலே :)         
           ''விடியலைத் தேடும் இந்தியர்கள் கட்சி சின்னத்தால்  புகழ் பெறப் போகிறதா ,அவங்க  சின்னம்தான் என்ன ?''
           ''செருப்புதான் !''

வாஸ்து மீன் ' சாணக்கியா 'இன்னும் உயிரோட இருக்கா :)
                 ''கையிலே வேற ரிவால்வரோட , தொட்டியில் நீந்துற மீன்களை எல்லாம் உற்று உற்றுப் பார்க்கிறீங்களே ,ஏன் ?''
                 '' கிரிக்கெட் மேட்ச்சிலே இந்தியா ஜெயிக்கும்னு சொன்ன சாணக்கியா மீனைக் காட்டுங்க,சுட்டுத் தள்ளணும்!''

வயசுக் கோளாறுக்கு சந்தோசப் பட முடியுமா  :)
              ''டாக்டர்  ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
             ''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''

இது என்ன 36 ''24'' 38'' ஆ ,இன்ச் டேப்பில் அளப்பதற்கு :)
                ''டியூப் லைட் எரியுதான்னு பார்த்து வாங்கிற என் பையனைக் காட்டிலும் உங்க பையன் தெளிவா ,எப்படி ?''
                ''டியூப் லைட்டை இன்ச் டேப்பிலே அளந்துதான் வாங்குவான்னா நீங்களே பார்த்துக்குங்க !''  

காங்கிரஸ் கட்சி நினைவுக்கு வந்தால் 'ஜோக்காளி'பொறுப்பல்ல   : )
         சொற்கள் -பெண்பால் 
         செயல்கள் -ஆண்பால் ...
         இது இன்றைய இந்திய அரசியலுக்கும் பொருத்தமே ...
         காரணம் ,இது ஒரு இத்தாலியப் பழமொழி !

27 March 2017

கணவனை இப்படியும் நம்பலாமா :)

இதுதான் ரொம்ப முக்கியம் :)
                 ''ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்கீங்க ...தண்ணி  வேணுமா ,பாத் ரூம் ,டாய்லெட் போறீங்களா ?''
                  ''முதல்லே ,பட்டை டைப் செல் சார்ஜர் இருக்கா சொல்லுங்க !''

திருடர்களுக்கு எச்சரிக்கை :)       
              ''அந்த வீட்டு வாசல்லே ,திருடர்களுக்கு  எச்சரிக்கை வாசகம் எழுதி இருக்காங்களா ,எப்படி ?''
              ''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற வேண்டாம்னுதான் !''
                                                            
கணவனை இப்படியும் நம்பலாமா :) 
               ''எப்போ பார்த்தாலும் உன் வீட்டுக்காரர் கத்திகிட்டே இருக்காரே ,எப்படி அவர்கூட வாழ்ந்து கிட்டிருக்கே ?''
               ''குரைக்கிற நாய் கடிக்காதுங்கிற   நம்பிக்கையிலேதான் !
                                                            
நடிகைன்னா எந்த கூச்சமும் இருக்காதா :)
             ''எனக்கு கூச்சம் அதிகம்னு...அந்த கவர்ச்சி நடிகை பேட்டியில் சொல்லியிருப்பது , உண்மைதானா ?''
            ''பல் கூச்சத்தைப் பற்றி சொல்லி இருப்பாங்க !''
                                                                                                   
திருமணம் தந்த  மாற்றம் :)
              ''உனக்கு கல்யாணம் ஆயிடுச்சே,ஏதாவது மாற்றம் இருக்கா ? ''
              ''என் பாக்கெட்டில் இருந்த பணம் ஜாக்கெட்டில் போனதுதான் ,பெரிய மாற்றம் !''

26 March 2017

மனைவிக்குத் தெரியாதா கணவனின் புத்தி :)

சாம்பிள்  டீ  குடித்ததும் ரோஷம்  வந்திடுச்சோ :)        
           ''வேலைக்காரி ,தன் வீட்டில் இருந்து போட்டுக்  கொண்டு வந்த டீயை ஆசையா   குடிச்சிட்டு ,இனிமேல் வேலைக்கு வர வேண்டாம்னு  ஏன் சொன்னே ?''
          '' இப்படி ஸ்ட்ராங்கான டீயை குடிச்சுத்தான் எனக்கு பழக்கம்னு சொல்றாளே !''

இது தோஷ நிவர்த்தி மாதிரி தெரியலே :)           
          ''அந்த ஜோதிடர் குஷ்பு ரசிகர்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
          ''தோஷ நிவர்த்திக்கு குஷ்பு கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யணும்னு சொல்றாரே !''

மனைவிக்குத் தெரியாதா  கணவனின் புத்தி :)
          ''என் கிளாஸ்  டீச்சரை  வந்து பார்த்ததில் இருந்து ,அப்பா என்னை அடித்துக்கொண்டே இருக்கிறார் ,ஏன்னு  கேளும்மா !''
           ''உன் கிளாஸ்  டீச்சரை நீ மிஸ் ன்னு சொன்னதை அவர் மிஸ்டேக்கா புரிஞ்சிக்கிட்டார் போலிருக்கு  ,என்னன்னு கேட்கிறேன் !''

கொத்தடிமை முன்னேற்றக் கழகத் தலைவரும் ,தொண்டரும் :)
            ''கட்சி உறுப்பினர் அட்டையை வாங்கிக்கிட்டேன் ,இது எத்தனை நாள் செல்லுபடியாகும் தலைவரே ?''
           ''சுயமரியாதை இல்லாம நீங்க இருக்கும் நாள் வரைக்கும் !''

கற்புக் கரசிகளும் ,ஏகபத்தினி விரதன்களும் :)
ஆண்களே இல்லைஎன்றால் எல்லா பெண்களுமே 
கற்புக்கரசிகளாய் திகழ்வார்கள் ...
                           இது ஒரு  சம்ஸ்கிருதப் பழமொழி !
உலகில் ஒரே ஒரு பெண்தான் என்றால் எல்லா ஆண்களுமே 
ஏகபத்தினி விரதன்களாய் திகழ்வார்கள் ...
                        இது ஒரு 'ஜொள்ளனின் 'புதுமொழி !

25 March 2017

நடிகைகளின் ஓரவஞ்சனை நியாயமா :)

படித்ததில் இடித்தது :)
            ''வோட்டுக்கு ஐயாயிரம்  ரூபாய் தருவதாக  கேள்விபட்டேன்,ஆயிரம் ரூபாய்தானே கொடுத்து இருக்கீங்க ?''
             ''இது அட்வான்ஸ்தான்,எங்க கட்சிக்கு வாக்களித்த ஒப்புகைச் சீட்டைக் காட்டிட்டு மீதியை வாங்கிக்குங்க !''
   படித்த செய்தி ........ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு  ஒப்புகைச் சீட்டை வழங்கும் முறையை அமல்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!(இது மேற்படி முறைகேட்டுக்கு வழி வகுத்த மாதிரி அமைந்து விடாதா :)

 ஆசீர்வாதத்தை  தப்பாய் எடுக்கலாமா :)         
               ''நடிகைக்கு தீட்சை அளித்த குருவுக்கு கண்டனமா ,ஏன்  ?''
              '' முற்றும் துறந்த நிலையை விரைவில் அடைவாய்னு ஆசீர்வதித்தாராமே   !''

கைவிடக் கூடாதுன்னா  இதையா :) 
          ''என்னாலே நம்பவே முடியலே ,டாஸ்மாக் கடையிலே அவ்வையாரின் ஆத்திச் சூடி வரிகளா ?''
           ''ஆமா ,ஊக்க'மது' கைவிடேல்னு எழுதி இருக்காங்களே !''

 நடிகைகளின் ஓரவஞ்சனை  நியாயமா :)
          ''நடிகைகள் மலையாளப் படங்களில் ஆபாசமா நடிப்பதை  எதிர்த்து  வழக்கு போட்டு இருக்கீங்களே  ,நீங்க முற்போக்குவாதியா ?''
         ''அட நீங்க வேற ,தமிழ் படங்கள்லே காட்டாத கவர்ச்சியை அங்கே மட்டும்  காட்டுவது நியாயமான்னுதான் கேட்குறேன் !'' 

தனக்குத் தானே தண்டனை அளித்துக் கொள்பவர்கள் :)
கடவுளைக் கும்பிடும்போது 
கன்னத்தில் போட்டுக் கொள்வதற்கு ...
'என் தப்புக்கு நானே கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன் 
நீயும் அறைந்து விடாதே ' என்பதுதான் காரணமா ? 

24 March 2017

தூக்கம் போனதே உன்னால்தானடி :)

இது எல்லோருக்கும் பொருந்துமா :)
           ''அரசியல்லே இறங்கலாம்னு இருக்கேன் ,ஆசீர்வாதம் பண்ணுங்க !''
           ''கையிலே மஞ்சப் பையோட ,டிக்கெட் எடுக்காம சென்னைக்கு கிளம்பு ,நல்லா வருவே !''

இது எனக்கும்  பொருந்தும் :)
             ''வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்னு நம்புறீங்க ,ஆனால் என் ஜோக் புத்தகத்தை ஏன் வாங்க மாட்டேங்கிறீங்க ?''
             ''சிரிக்கிற மாதிரி எதுவுமே அதில் இருக்காதே  !''

மாத்தி யோசி  என்பது இதுதானோ :)
                ''டி வி யில் வர்ற தொடர்களை ராத்திரி ஒருமணி வரைப்  பார்ப்பதால் ,தூக்கம் கெடுதுன்னு மனைவியை திட்டிக்கிட்டே இருந்தீங்களே ..இப்போ எப்படி ?''
                ''நானும் தொடர்களைப் பார்க்க ஆரம்பித்தேன் ,உடனே   தூக்கம்  அருமையா வருதே !''

இந்த தைலம் அவருக்கு நல்ல மாற்றத்தைக் கொடுத்திருக்கு :)
             ''அதோ ,அங்கே வர்ற வழுக்கைத் தலைக் காரருக்கு கரடி மாதிரி உடம்பு பூரா முடியா  இருக்கே ,எப்படி ஆச்சு ?''        
             ''வழுக்கைத் தலையில் முடி வளரும் தைலத்தால் இப்படி சைடுஎபெக்ட் ஆயிடுச்சாம்  !''

இதுவும் ஒரு நல்ல பொருத்த'மே ':)
           ''நான்  'மே 'மாதத்தில் பிறந்தது ரொம்ப பொருத்தம்னு ஏன் சொல்றே ?''
          ''ரொம்ப லேட்டா வேலை செய்யுற உன்  'ஆட்டு  மூளை 'யை வச்சுத்தான் !''

தூக்கம் போனதே உன்னால்தானடி  :)
உன்னைக் கண்டதுமே 
எனக்குப் புரிந்த உண்மையை ...
ஆராய்ச்சியாளர்கள் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார்கள் ...
சாக்லேட் ஐஸ்கிரீம் இனிப்பு வகைகள் 
தூக்கத்தைக் கெடுக்குமாம் !

23 March 2017

குடும்ப 'குத்து விளக்கு ' இப்படி படுத்தலாமா :)

படித்ததில் இடித்தது :)
             ''தனுஷ் வழக்கு ,கிருஷ்ணமூர்த்தி வழக்குன்னு சொல்றாங்களே ,என்ன பிரச்சினை ?''
                ''உயிரோடு இருக்கிற  கதிரேசன் மீனாட்சியை   தன் அப்பா அம்மா இல்லைன்னு சொல்றார் தனுஷ் ....செத்துப் போன சோபன்பாபு ஜெயலலிதாவை  தன் அப்பா அம்மான்னு சொல்றார் கிருஷ்ணமூர்த்தி !''
           இடித்த செய்திகள்  ...'காணாமல் எங்கள் மகன்தான் தனுஷ்' என்கிறார்கள் கதிரேசன் மீனாட்சி தம்பதியர் !
           சோபன்பாபு ஜெயலலிதாதான் என் பெற்றோர்  என்கிறார்     ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி !            

இப்படியா பயந்து சாவது :)
             ''பக்கத்து நாட்டு அரசன் சேனையுடன் வருகிறானா ?என்ன செய்வதென்றே புரியவில்லையே ?''
              ''பதறாதீர்கள் மன்னா ,உங்கள் நட்புறவை நாடி ...உங்களுக்கு விருப்பமான சேனையுடன் வருகிறார் என்பதை சொல்ல வந்தேன் ,அதற்குள் ...!''

குடும்ப 'குத்து விளக்கு 'இப்படி படுத்தலாமா :)
            '' உன் பெண்டாட்டியை , குடும்ப பாங்கான குத்து விளக்கு மாதிரி நினைச்சது தப்பா போச்சா .ஏண்டா ?''
            ''அலாவுதீனின்  அற்புத விளக்கு கிடைச்சாலும் அவளை திருப்திப் படுத்த முடியாது போலிருக்கே !''

தலைநகரிலுமா அந்தரங்க லீலைகள் :)
          ''நம்ம தலைவர் டெல்லிக்குப் போனாலும் அவர் லீலைகளை விடமாட்டாரா ,ஏன் ?''
           ''டெல்லி  VIA ஆக்ரா டிரெயின்லே போறோம் சரி ,டெல்லியில் வயாக்கிரா எங்கே கிடைக்கும்னு கேட்கிறாரே !''

ஆபீஸில் 'நீளும் 'கை ,வீட்டில் ...:)
          ''நீ  லஞ்சம்  வாங்கிறதை உன் மனைவிகூட கமெண்ட் அடிக்கிறாளா ,எப்படி ?''
           ''கை நீட்டுற வேலை எல்லாம்  ஆபீஸோட வச்சுக்குங்க ,என் கிட்டே வேணாங்கிறா !''

பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம்:)
வர வேண்டிய பருவத்தில் 
வரவில்லை என்றால் ...கஷ்டம் !
வருவதும் மணநேரம் வரும் முன்பே 
வராவிட்டாலும் ...கஷ்டம் !
வந்துக் கொண்டே இருந்தாலும் 
தாய்மை அடைவதில் ...கஷ்டம் !
வருவது நிற்கவில்லையே என்று 
பிள்ளைப் பேறு முடிந்தும்...கஷ்டம் !
இஷ்டப் பட்டு கஷ்டப் படுவது ...
பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம் அல்லவா அது  ! 

22 March 2017

துணை (எழுத்து ) ரொம்ப முக்கியம்தான் :)

நன்றி மறவாத  டாக்டர் :)
         ''அந்த டாக்டர் ,அறையிலே  நிறைய பேர் போட்டோவை மாட்டி வச்சிருக்காரே ,யார் அவங்க  ?''
          ''டாக்டரிடம் காசும் கொடுத்து ,உயிரையும் தியாகம் செய்தவங்கதான் ! ''
                   
மின்சார மந்திரிக்கு பிடிச்ச பூச்சி :)
          '' மின்சார மந்திரி அடிக்கடி தன்னோட பேச்சிலே மின்மினிப் பூச்சியை உதாரணம் காட்டுகிறாரே ,ஏன் ?''
           ''ஒரு பூச்சிக் கூட தன் தேவைக்கு வெளிச்சத்தை தானே உண்டாக்கிக் கொள்ளும்போது  ,மனுஷனாலே ஏன் முடியாதுன்னு மறைமுகமா கேட்கிறாரோ !''

துணை (எழுத்து ) ரொம்ப முக்கியம்தான்  :)
         ''பஸ்ஸை எடுக்க வர்ற என்கிட்டே  வேப்பிலைக் கொத்தை ஏன் கொடுக்கிறீங்க,மெக்கானிக்  ?''
         ''பிரேக் பிடித்தால் வண்டி முன்னால் 'பேய் 'நிற்கிறது என்று புகார் நோட்டிலே நீங்கதானே எழுதி இருந்தீங்க ,அதான் !''

டாஸ்மாக் 'தண்ணி'யை மறந்த கவிஞர் :)
               ''தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ,தண்ணீர் கரையில் முடிக்கிறோம்ன்னு எழுதின கவிஞர் ,நடுவிலே ஒரு வரியை விட்டுட்டார் !''
               ''எந்த வரியை ?'''
               ''தண்ணியில் தினமும் மிதக்கிறோங்கிறதை !''

இவனன்றோ பாரதியின் பேரன் :)
மரணபயம் வென்றவன் ...
எருமைக்குப் பதிலாய் 'YAMAHA 'வை 
எமனுக்கு பரிசளிப்பான் !

21 March 2017

இந்த கருவைக் கலைத்தால் பாவமில்லையா :)

எந்த ஹாரம் முக்கியம் :)
                    ''தமிழ் திரட்டியான 'ஹாரம் ' விலைக்கு வந்திருக்காமே ,வாங்கிப் போட வேண்டியதுதானே ?''
                   ''என் கழுத்துக்கு ஒரு ஹாரம் வாங்கிக் கொடுத்திட்டு எதையும் வாங்கிக்குங்க என்று என் மனைவி அடம் பிடிக்கிறாளே !''
இது  அதிசயப் பிரசவம்தானே :)
          ''என்னடி சொல்றே ,உனக்கு அதிசய இரட்டைக் குழந்தை பிறந்ததா  ?''

20 March 2017

இளம் மனைவிக்கு பிடித்ததைச் செய்யாமல் :)

படித்ததில் இடித்தது :)
              ''குடிகாரனுக்கும் ,குபேரனுக்கும்  என்ன ஒற்றுமை ?''
              ''குபேரனுக்கும் ஊறுகாய் பிடிக்குமாமே !''    
படித்த  செய்தி .....
வீட்டிலே ஊறுகாய் இருந்தால் குபேரன் அருள் கிடைக்குமாம் !

இளம் மனைவிக்கு பிடித்ததைச் செய்யாமல் :)
          '' உன் கணவன்கூட  என்னடி சண்டை ?''

19 March 2017

பெண்ணின் எடையைத் தாங்க முடியலைன்னா இப்படியா :)

               ''அவங்க ஏன் எடை மெஷினை கோபமா பார்த்துகிட்டு இருக்காங்க ?''
               ''சீக்கிரம் இறங்குங்க ,என்னாலே முடியலைன்னு வாசகம் வருதாமே !''
இது நடக்கிற காரியமா :)                   
               ''அவர் ,வாங்கின கடனை  திருப்பித் தரமாட்டார் போலிருக்கா ,ஏன் ?''
              '' மல்லையா  இந்தியா வர்ற அன்னைக்கு தர்றேன்னு சொல்றாரே !''

திருடனுக்கும் தெரிஞ்சு போச்சா :)            
             ''என்னங்க ,அந்த திருடன் ,உங்களை 'நீயெல்லாம் ஆம்பளை 'யான்னு கேட்டானே ...ஏன் ?''

18 March 2017

மாமனாருமா லட்டுக்கு ஆசைப்படுவது :)

இதுவும் நல்ல ஐடியாதானே :)
               ''யாருமே ஜாமீன் கேட்கிறதே இல்லையா ,ஏன் ?''
                ''இப்படியொரு சட்டம் போட்டா எப்படி கேட்பாங்க ?''

பாரதிநேசன் இப்படி மோசம் செய்யலாமா :)    
          ''என்னங்க ,நம்ம வீ ட்டிலே குடியிருக்கிறவர்...  பாரதியார் கவிதைகளை ரொம்பவும் விரும்புவராச்சே ,அவரைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க ?'' 
         ''நாம் இருக்கும் வீடு நமதென்று அறிந்தோம் 'என்று சொல்லுறாரே !''

micr osoft ல் பணிபுரிபவர்கள் விரும்பும் பிரியாணி :)
             ''பிரியாணிக் கறி ரொம்ப 'சாப்டா 'இருக்குன்னு சாப்பிட்டுட்டு ,இப்போ வயித்திலே காக்கா கரையிறமாதிரி இருக்கா ..அந்த கடை பெயர் என்ன ?''
             ''My crow soft பிரியாணி கடைதான் !''

மாமனாருமா லட்டுக்கு  ஆசைப்படுவது  :)
            ''வரப் போற மருமகளுக்கு கூந்தல் நீளம்,திருப்பதிக்குப் போனா அஞ்சு லட்டு தேறும் அளவிற்கு இருக்கணுமா,ஏன் ?''
            ''நீளமான முடிக் காணிக்கை செலுத்தினா அஞ்சு லட்டு இலவசமா தர்றாங்களாமே !''

நம்ம ஊர் கூந்தல் அழகியை மட்டும் ரசித்தால் போதுமா ?  பதிவு வெளியான பின் ,இப்போது நான் பார்த்த ரஷ்ய கூந்தல் அழகிகள் .....

கூல் ஆகணும்னா கூழ் குடிங்க :)
கூழ் என்ன கோந்தா ?
மீசையில் ஒட்டிக்கொண்டால் வராது என்பதற்கு ...
ஒட்டிக்கும்  என்று பயந்து கூழைக் குடிக்காமல் இருக்கமுடியுமா ?
கூழுக்கும் ஆசைப்படலாம் ...பசித்தால் !
மீசைக்கும் ஆசைப்படலாம் ...ஆண் என்றால் !

17 March 2017

அக்மார்க் இரட்டை அர்த்த ஜோக்தான் இது :)

                 ''விவாக ரத்து பெருக என்ன காரணம் ?''
                 ''சிலர் 'வைப்பு ' தொடர்பிலும் ,இன்னும் சிலர் மனைவியைக் கூட மறந்து 'வை ஃபை'தொடர்பிலும்  இருக்காங்களாமே !''

அது அரியாசனமா ,சொறியாசனமா :)
              ''மந்திரிகளைப் பார்த்து 'ஒரு நாள் அரசனாய் 'இந்த அரியாசனத்தில்  அமர்ந்து பாருங்கள் ....என் கஷ்டம் புரியும்னு அரசர் சொல்றாரே ,ஏன் ?''

16 March 2017

புருசனை நல்லா புரிஞ்சுகிட்டு இருக்காங்க :)

சாப்பாட்டு உப்பினால் பலன் கிடைக்கலையோ :)              
                   '' நான்,  உப்புச் சோப்பை உடம்பிலே தேய்ச்சிக் குளிச்சா  நல்லதுன்னு  ஏன்  சொல்றே ?''
                     ''அப்போதாவது உங்களுக்கு சொரணை வருமான்னு பார்க்கத்தான் !''
ஜாக்கெட்டிலே மட்டும்தான் ஜன்னல்  இருக்கணுமா :)
           ''டைரக்டர் சார் ,ஹீரோயினுக்காக  வாங்கி  வந்த சேலையில் பெரிய ஓட்டை இருக்கே ,என்ன பண்றது ?''

15 March 2017

குறட்டை விடா மனைவி அமைவதும் வரம்தான் :)

 செருப்புக்குப்  பதிலா :)
               ''பாடகர்  ரோஷப் பட்டு கச்சேரியை  முடித்துக் கொண்டாரே, அப்படியென்ன  அவர் மேல்  வந்து விழுந்தது ?''
               ''காது கேட்கும் கருவிகள்தான்!''

வெள்ளையா இருந்தால் மோர்  :)
             ''என்ன கேட்கிறீங்க ,மஞ்சள் மோரை ஊற்றவா ?'' 
              ''நீ வச்ச மோர்க் குழம்பு அப்படித்தானே இருக்கு !''

 குறட்டை விடா மனைவி  கிடைப்பதும் வரம்தான் :)        
             ''என்னங்க ,நான் தூங்கினா உங்களுக்கு சந்தோசமா,ஏன் ?''
             ''அப்பதானே ,நீ  சைலென்ட் ஃ மோடில் இருக்கே !''

 மேனி எழிலின் ரகசியம் இதுதானோ :)
         ''உப்பில்லா சோப்பு வேணுமா ,அப்படின்னா என்னம்மா ?''
        ''துணிக்கு போடுறது  உப்பு சோப்புன்னா, உடம்புக்குப் போடுறது உப்பில்லா சோப்தானே ?''
நடுவர் இப்படின்னா ,பேச யார் வருவாங்க :)
           ''பட்டிமன்ற நடுவர் ரொம்ப முன் கோபக்காரர்  போலிருக்கா ,ஏன் ?''
           ''மணி  அடிச்சும் பேசிக்கிட்டு இருந்த பேச்சாளர் மேல்,மணியையே தூக்கி எறிஞ்சுட்டாரே !''

கரெண்ட் கட் நேரத்து ஞானோதயம் :)
UPS சொல்லாமல் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் ...
இருக்கும்போதே சேர்த்து வைப்பதுதான்
இல்லாத நேரத்தில் கை கொடுக்கும் !

14 March 2017

காதலின் எல்லை எது வரை :)

காலத்துக்கு தகுந்தபடி மாறித்தானே ஆகணும் :)
             ''பென் டிரைவ் கிளி ஜோதிடம் சொல்றீங்களா ,எப்படி ?''
             ''ராசி அட்டைக்குப் பதிலா ,கிளி எடுத்துக் கொடுக்கிற பென் டிரைவை கணினியில் போட்டு நீங்களே கேட்டுக்கலாம் !''

அடச் சீ ,காதல் கடிதங்களை மகனை படிக்க விடலாமா  :)
           ''காதலிக்கிறப்போ  நான் எழுதிய கடிதங்களை ,இப்போ நம்ம பையன் படிச்சிட்டான்னு எப்படி சொல்றே ?''
           ''மொக்கைன்னு தெரிஞ்சும் மோசம் போயிருக்கியே அம்மான்னு கிண்டல் பண்றானே !''

காதலின் எல்லை எது வரை :)
         ''இப்போ அழுது என்ன பிரயோசனம் ? உன் காதலன் உன்னைக்  'கை விட'  நீதான் முதல் காரணம் !''

13 March 2017

என்று தீரும் இந்த சேலை மோகம் :)

இதுதான் உண்மையான காரணமா :)
                ''இளம்மனைவிக்கு முதல் பரிசா  பெரும்பாலான கணவன்கள்  மோதிரம்தான்  போட்டு விடுறாங்க ,ஏன் ?''
                ''குட்டுபட்டாலும் மோதிரக் கையால் படலாம்னுதான் !''

என்று தீரும் இந்த சேலை மோகம் :)
          ''என்னங்க ,ஆன் லைன்லே  நான் ஆர்டர் செய்த சேலை வந்திருக்கு ,அதை ஏன் இவ்வளவு ஆச்சரியமாப் பார்க்கிறீங்க ?''

12 March 2017

முதல் ராத்திரியில் இப்படியா பேசுவது :)

1
தமிழ்மணம் மகுடம்
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
நம்பிக்கை மோசடி செய்த ராசிபலன்:) -
 12/12
Who Voted?Bagawanjee KA

2
Total pageviews     666666 
3
பகல் வெளிச்சம் போல் வராதோ  :)                   ...மேலும் வாசிக்க
 

     
இந்த முப்பெரும் சாதனை ,வலையுலக உறவுகளால் வந்தது ,நன்றி !உறுதுணையாய் இருந்த தமிழ்மணத் திரட்டிக்கும் நன்றி!!

பசங்களுக்கு 'கட் 'அடிக்க சொல்லியாத் தரணும்:)               
                  ''நாமதான் வீட்டுப் பாடம் செய்துகிட்டு வந்திருக்கோமே ,ஏண்டா வெளியே எடுக்காதேன்னு சொல்றே ?''

11 March 2017

கள்ளத் தொடர்புக்கு இந்த தண்டனை சரிதானே :)

பகல் வெளிச்சம் போல் வராதோ  :)                                                                    
           ''கோடிக்கணக்கில் வழக்குகள் தேங்கி இருக்கே ,நீதி மன்றத்தில் ,ஏன் நைட் ஷிப்ட் போட்டு விசாரிக்க மாட்டேங்கிறாங்க ?''
           ''சட்டம் ஒரு இருட்டறையாச்சே !''

மனைவி மாவு வாங்கி வரச் சொல்லும் காரணம் :)
            ''உங்க மனைவி  தோசை மாவு பாக்கெட் தானே வாங்கி வரச் சொல்றாங்க ,ஏன் முடியவே முடியாதுன்னு சொல்றீங்க ?''

10 March 2017

நம்பிக்கை மோசடி செய்த ராசி பலன் :)

கொழுப்பு ஜாஸ்தி ,குடும்பத்தில் எல்லோருக்கும்  :)                      
           ''பொறித்த அப்பளம் எங்கே கிடைக்கும்னு ஏன் கேட்கிறீங்க ?''                                                 ''வீட்டிலே எண்ணெய் வாங்குவதை டாக்டர் விடச் சொல்லிட்டாரே !''

இந்த குணம் , புருஷ லட்சணம் ஆகுமா :)
       'செருப்பு அறுந்துப் போச்சுன்னு சொன்னா ,நாலு நாள் பொறுத்துக்கோன்னு உன் புருஷன் ஏன் சொல்றார் ?''

9 March 2017

நடிகைகளைத் தெரிந்த அளவுக்கு ......:)

பிற்போக்குவாதி... அர்த்தம் என்ன புரிகிறதா :)
         '' நேற்று முதல் பிற்போக்குவாதி ஆயிட்டேன்னு சொல்றீங்களே ....என்னைக்குதான் நீங்க முற்போக்குவாதியா இருந்தீங்க ?''
           ''வாந்தி எடுத்த அன்னைக்குத்தான் !''

காதலி மனசுலே இன்னொருவனா :)
              ''ஹலோ ,நீங்க குரலை மாற்றிப் பேசினா எனக்கு தெரியாதா ,நீங்க என் டார்லிங் ரமேஷ்தானே ?''

8 March 2017

தள்ள வேண்டியதை தள்ளினா....:)

 இரண்டும் அருகில் இருக்கலாமா :)
             ''எதுக்கு ' சுகம்  கிளினிக்  போகும் வழி'ன்னு வச்சிருக்கிற போர்டை எடுக்கச் சொல்றீங்க ?''
              '' அதுக்கு பக்கத்திலே 'சுடுகாட்டுக்கு செல்லும் வழி'ன்னு  போர்டு இருக்கே !''

இந்த கட்சி கரையேறுமா :)          
         ''அந்த புதுக் கட்சியில் நிறைய பேர் சேர, என்ன காரணம் ?''

7 March 2017

ஆதர்ச தம்பதிகளா இவர்கள் :)

இது பாசமில்லே ,பயம் :)
          ''பெண்டாட்டி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறீங்களே ,அவ்வளவு பாசமா ?''
          ''அட நீங்க வேற ,ஆசையா கேட்டதை வாங்கித் தரலைன்னா ஏழு ஜென்மத்திலேயும் இவதான் பெண்டாட்டியா வருவான்னு ஜோதிடர் சொல்றாரே !''


எவ்வளவு நேரம்தான் சீரியலைக் கட்டி அழுவது :)
         ''நம்ம வீட்டு விஷயம் வெளியே போகக்  கூடாதுன்னு ,வாய் பேச முடியாத வேலைக்காரியை வச்சுக்கிட்டியே ,இப்ப ஏன் அவளை வேண்டாங்கிறே ?''

6 March 2017

'துணியே துணை 'ன்னு நடிகை இருக்க முடியுமா :)

 பேயானாலும் ஆசை விடாது :)              
             ''பேய்க்கு கூட ஆடம்பரமா இருக்கத்தான் பிடிக்கும் போலிருக்கா ,ஏன் ?''
              ''அது ,பாழடைஞ்ச  'பங்களா 'விலே  மட்டும்தான்  இருக்குமாமே !''

'துணியே துணை'ன்னு  நடிகை இருக்க முடியுமா :)
           '' அந்த நடிகை ,முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்குன்னு புதுமொழியில் சொல்றாரா ,எப்படி ?''                
           ''மனசிலே 'துணி'ச்சல் இருந்தா ,உடம்பிலே துணி எதுக்குன்னு கேட்கிறாரே !''
இதுக்குமா பயப்படுவது :)
          ''என்னடா சொல்றே ,கிருதாவை நீளமாய் வச்சுக்க பயமாயிருக்கா ?''
         ''வச்சுக்கிட்டா கிருபாகரன் என்கிற என் பெயரை கிருதாகரன்னு   மாத்தி வைச்சிடுவாங்க போலிருக்கே !''

ஹனீமூன் போகத் தயங்கும் கணவன் :)
          ''என் கள்ளக் காதலனோட சதித் திட்டம் ,என் புருஷனுக்குத் தெரிஞ்சுருக்கும்  போல இருக்குடி !''
         ''ஏண்டி ?''
        ''மூணாருக்கு ஹனிமூன் போகலாம்னு  சொன்னேன் ,போனா ஃசேப்ட்டியா திரும்பி வர்ற மாதிரி இடமாப் பார்த்துச் சொல்லுங்கிறாரே !''

'கட்டை ' போடுவது நம்மாளுங்களுக்கு அல்வா :)
         ''பாரதியார் இருந்தா ,அவருக்கு எதிரா போராட்டம் வெடிச்சிருக்குமா ,ஏன் ?''
         ''ஏற்கெனவே ராமர் பாலம் இருக்கும்போது 'சிங்களத் தீவினுற்கோர்  பாலம் அமைப்போம் 'னு  எப்படி எழுதலாம்னுதான் !''

மொய் ,திருமணத்திற்குப் பின்னா ,முன்னா :)
   அரசின் திருமண உதவித் திட்ட பணம் வந்து சேர்ந்தது ...
  அரசியல்வாதிக்கும் அதிகாரிக்கும் 
  'மொய் 'வைத்த பிறகு !

5 March 2017

'பார்க்'கில் பிறர் பார்க்க'ச்' செய்யலாமா :)


நிம்மதியான தூக்கம் எப்படி வரும் :)
             ''உங்களுக்கு ஒரு நொடியில் தூக்கம் வந்துவிடுதே ,எனக்கு வர மாட்டேங்குதே ,ஏன் ?''
             ''தூக்கம்தான் எனக்கு சொத்து ,ஆனால் உங்களுக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கே !''
பதவி சுகம் கண்டவர்களின் யாகம் :)
                 ''பதவியில் இருக்கிறவங்க யாரும்  எனக்காக யாகம் வளர்க்க வேண்டாம்னு  ஜெயிலில் இருந்து தலைவர் சொல்லியிருக்காரே ,ஏன் ?''
                ''இந்த நிலைமை மாறக்கூடாதுங்கிற  வேண்டுதலோடு யாகம் வளர்த்ததா  அவருக்கு தெரிய வந்திருக்காம் !''

'பார்க் 'கில் பிறர் பார்க்க'ச்'  செய்யலாமா :)
             ''அப்பாவை 'பார்க்'கில் வாக்கிங் மட்டும் போயிட்டு,வீட்டிற்கு வந்து  தியானம் பண்ணச் சொல்லும்மா !''
            ''ஏன் ,என்னடா ஆச்சு ?''
            ''கண்ணை மூடி தியானம் பண்ணினாராம் ,கண்ணை திறந்து பார்த்தா ,நிறைய  சில்லறைக் காசு  விழுந்து கிடந்ததாம்  !''

மலையிலேயே உருண்டு 'போயிருக்க 'வேண்டியவரோ இவர் :) 
               ''அந்த  மலைக் கோவிலுக்கு போனா  திருப்பம் வரும்னு சொல்லுவாங்க ,உங்களுக்கு  எப்படி ?''
               ''மலையிலே ஏறும் போதும் இறங்கும் போதும் திருப்பம் வந்ததே !''

கொடிது கொடிது அற்பாயுளில் சாவு :)
  தவணை முறையில் சிகரெட் சாம்பலை தட்டியவன் ...
  மொத்தமாய் சாம்பலானான்  அற்பாயுளில் !

4 March 2017

'டயாபெடிக் 'காரனின் மனநிலை :)

பையன் கேட்டதில் தப்பிருக்கா :)
           ''மாடுகளுக்கு  ஆடத் தெரியுமா ,பாடத் தெரியுமான்னு ஏண்டா கேட்கிறே ?''
           ''ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் ,பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்னு  சொல்றாங்களே !''

இப்படியும் பெருமையா சொல்லிக்கலாமா  :) 
          ''புருஷன் பஸ்லே வேலைப் பார்க்கிறதா அவ பீற்றிக்கிறாளே ,யூனிபார்ம் டிரஸ்ஸை அவர் போட்டுக்கிற மாதிரி தெரியலையே ?''
           ''பிக்பாக்கெட் வேலைக்கு யூனிபார்ம் எதுக்கு ?''

மனைவியின் சமையலும் வெறுத்து போச்சா :)
           ''என்னங்க ,ஊற வச்சாலே சோறாகும் அரிசியை அசாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சு இருக்காங்களாமே ?''
          ''அப்படியே காய்கறியையும் கண்டு பிடிச்சுட்டா , கண் காணாத இடத்துக்குப் போய் நானே சமைச்சு  சாப்பிட்டுக்குவேன் !''

'டயாபெடிக் 'காரனின் மனநிலை :)
இரத்த சர்க்கரை அளவு கண்ட்ரோலில் 
இருப்பது தெரிந்ததும் ...
இனிப்பாக ஒரு கப் காபி சாப்பிடத் தோன்றும் !

விவேகானந்தர் சொன்னதில் அர்த்தம் உள்ளது :)
நூறு இளைஞர்கள் என் பின் வரட்டும் 
நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் ...
இது ,விவேகானந்தர்  அன்று சொன்னது !
இன்று லட்சம்  இளைஞர்கள் தயார்.. 
ஒரு 'விவேகானந்தரை'காணாம் !

3 March 2017

கண்விழியும் பேசுமோ :)

 கொசுவுக்கு தெரியுமா இரத்த வகை :)
                '' இரத்தத்திலே ஏ பி  ஓன்னு பலவகையிருக்கு,மனித உடம்பில்  இரத்த வகையை மாற்றி ஏற்றினால் மரணம்தான் !''
                   ''எல்லா வகை இரத்தமும் குடித்து கொசு உயிர் வாழுதே ,எப்படி டாக்டர் ?''

காயமே இது பொய்யடா :)
             '' கிழிஞ்சு இருக்கிற  என் சட்டை ,பனியனைப்பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிந்து இருக்குமே?'' 
             ''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை  எப்படி  காட்ட முடியும் ?'' 

Maal சென்று தேடினால் இவர் கண்ணில் படுவாரா :)
           ''என் அருமை மவனே... நான் கும்பிடுற முருகன் எங்கே இருக்கார்னு கேட்கிறீயே ,நீ எங்கெல்லாம் தேடுனே ?''
           ''மால் முருகானு நீங்க பாடுறீங்களேன்னு எல்லா MALLலேயும் தேடி பார்த்துட்டேன்பா !''

முதல் ராத்திரியிலாவது விழித்திருந்திருப்பாரா :)
       '' ஆபீஸ் நேரத்திலே ,நான் முடி வெட்டிக்க வந்தா ,உனக்கென்னப்பா  கஷ்டம் ?''
        ''ஆபீஸ் பழக்க தோஷத்திலே தூங்கி வழியுறீங்களே !''

 கண்விழியும் பேசுமோ  :)
               ''வள்ளுவர் இரண்டு அடியில் புரிய வைப்பார் ,மனைவி ஒரே அடியில் புரிய வைப்பார்னு சொல்றாங்களே  ,உண்மையா ?''
               ''அதெல்லாம் பொய் ,மனைவி முறைச்சாலே எனக்கு புரிஞ்சிடுதே !''

புனிதமான காதலின் இலக்கணம் :)
   காதலன் காதலியை கைவிடக் கூடாது ...
  இதைவிட முக்கியம் ...
  காதலன் காதலி மேலும்  கைவிடக் கூடாது !

2 March 2017

மனைவி முன் ஜாக்கிரதை முத்தம்மாவோ: )

 இதிலுமா போட்டி :)       
         '' அண்ணன் தம்பி உங்களுக்குள்ளே என்னடா தகராறு ?''
         ''காலண்டர் மன்த்லி சீட்டை அவன் கிழிப்பானாம்,தினசரித் தாளை நான் கிழிக்கணும்னு சொல்றாம்பா !''

வாட்டர்தெரபி தலைக்கீழாய் செய்தால் :)
            ''அதிகாலை ஐந்து  மணிக்கு வெறும் வயிற்றில் மூணு லிட்டர் தண்ணீர் குடித்தால்    நோயே  வராதுங்கிறது சரி  ,ஐந்து மணிக்கு எப்படி எந்திரிக்கிறது ?''
            ''இரவு தூங்கிற முன்னாலே மூணு லிட்டர் தண்ணீர் குடிச்சுப் பாரேன் !''
மனைவி முன் ஜாக்கிரதை முத்தம்மாவோ: )
           ''வேலைக் காரி என் ஜீன்ஸ் பேன்ட் .சட்டைப் போட்டுக்கிட்டு  வர்றாளே ,ஏன் கொடுத்தே ?''
            ''என் சேலையைக் கட்டிக்கிட்டு வந்தா ...நான்னு நினைச்சு அவகிட்டே நீங்க ஏடாகூடமா நடந்துக்க  கூடாதுன்னுதான் !''

வீட்டுக்கு வந்த ' நவக்கிரக நாயகி ':)
            ''உங்க மருமகளை 'நவக்கிரக நாயகி 'ன்னு சொல்றீங்களே ,ஏன் ?'' 
          '' தினமும் கோவிலுக்குப் போன  என் பையன் நவக்கிரகத்தைச் சுற்றுவதற்குப்  பதிலா ,இவளை சுற்றிக்கிட்டு  இருந்திருக்கானே  !''

இதுக்கு ரூம் போட்டு யோசிச்ச மாதிரி தெரியலே !
நகையை அடகு வைச்ச சீட்டை ரொம்ப பத்திரமா வச்சிக்கணும் போலிருக்கு ...
நகை திருப்புறதுக்கு முன்னாடியே மர்ம மனிதர்களிடம் கூட காட்ட வேண்டிய நிலைமை உண்டாகி விட்டது ...
இல்லையில்லை உருவாக்கி விட்டது ...
நான்கு நாட்களுக்கு முன்னால் மதுரை செக்கானூரணியில் ...
மூன்று வீடுகளில் கொள்ளை அடித்து உள்ளார்கள்...
ஒரு வீட்டில் இருந்த பெண்மணியிடம் நகை ,பணத்தைக் கேட்டு மிரட்டி உள்ளார்கள் ...
எதுவும் தன்னிடம் இல்லையென்று சொல்ல ...
கொள்ளையர்கள் நம்ப மறுத்து பாசத்துடன் ...
முறைப்படி திருமணம் நடந்ததா ,ஓடிப் போய் கட்டிகிட்டியா என்று கேட்க ...
முறைப் படிதான் நடந்தது என்று சொல்ல ...
அப்படின்னா ,கல்யாண ஆல்பத்தை காட்டு என ,அதைப் பார்த்து ...
கல்யாண கோலத்தில் அணிந்து இருந்த நகைகள் எங்கே என்று கேட்க ...
அடகு வைத்து இருப்பதாக அந்த பெண்மணி சொல்ல ...
நம்ப மறுத்த கொள்ளையர்கள் ...
அடகுசீட்டை பார்த்த பின்தான் ...
கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள் !
எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் இந்த கொள்ளைக்காரர்களும் !

1 March 2017

துணை(வி) இல்லாமல் போக மாட்டாரோ:)

இப்படியும் ஒரு அப்பாவி  கணவனா :)              
          '' உங்க பேஸ்ட்டிலே  உப்பு இருக்கான்னு உங்க வீட்டுக்காரரிடம் கேட்கக் கூடாதா,ஏன் ?''
            ''சமையல்லே உப்பு இருக்கான்னே அவருக்குத் தெரியாதே !''

தலைவர் மப்பிலே உளறிட்டாரோ :)                
           ''மறைந்த மேதைக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் ,தலைவர் என்ன  பேசிட்டார்னு ,அவரை இப்படி கழுவி கழுவி ஊத்துறாங்க  ?''
           ''நான் வாழும் காலத்தில் அவரும் வாழ்ந்தார் என்பது  நமக்கெல்லாம் பெருமைன்னு உளறிட்டாராம்!'' 
                                         
ஆசை மட்டுமா நூறு வகை :)
            ''முழு உடல் பரிசோதனை செய்து  ஒரு மாசமாச்சே , உங்களுக்கு   என்ன நோய்னு  இன்னுமா கண்டுபிடிக்க முடியலே ?''
            ''என்ன நோய் இல்லைன்னுதான் கண்டுபிடிக்க முடியலையாம் !''
துணை(வி ) இல்லாமல்  போக மாட்டாரோ:)
           ''உங்க  வீ ட்டுக்காரருக்கு வர்ற சனிக்கிழமை ஆபரேஷன் பண்ணலாம்னா , ஏன் வேண்டாம்னு சொல்றீங்க ?''
            ''சனிப் பிணம் தனியாக போகாதுன்னு சொல்றாங்களே ,டாக்டர் !''

மீண்டும் வருமா பொற்காலம் :)
முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி ...
அது அந்த காலம் !
விலைவாசி விண்ணில் பறக்க 
இது வியா 'பாரி 'களின்  காலம் !